பீன்ஸ் கறி.
நவம்பர் 27, 2017 at 5:58 முப 12 பின்னூட்டங்கள்
என்ன பிரமாதம் பீன்ஸ் கறி இல்லையா! இது பஞ்சாபியர்கள் செய்யும் வகை. மிக்கச் சுலபம்தான். ரொட்டியுடன் சாப்பிட இந்தவகை வதக்கல். நாமெல்லாம் பொடிப்பொடியாக நறுக்கி தேங்காய் சேர்த்தும், கறிப்பொடி சேர்த்தும் வதக்குவோம் பருப்புசிலியும் செய்வோம். ஒரு சிறு மாறுதல்தான். அதையும்தான் பார்ப்போமே.
என்ன விசேஷமானது என்றால் பெரியஅளவில் காய்கள் நறுக்கப்பட்டிருந்தது. தாளிதம் வேறு பொருள்கள் . அவ்வளவுதான்.
பீன்ஸை இரண்டு அங்குல நீளமாக நறுக்கி தண்ணீரில் அலசி வடியப்போடவும். நான் ஸ்டிக் பேனை சூடாக்கி வேண்டுமான எண்ணெய் விடவும். வெள்ளை எள் ஒரு டீஸ்பூன்,அரை டீல்பூன் சீரகத்தைத் தாளித்து, விழுதாக்கிய பூண்டு இஞ்சியைப் போட்டு வதக்கவும். பின்னர் பீன்ஸைச் சேர்த்து வதக்கவும். மூடித்திறந்து மிதமான தீயில் காயை நன்றாக வதக்கவும். உப்பு சேர்க்கவும். நன்றாக வதங்கிய பின் கீழிறக்கி ரொட்டி,காரஸாரமான டாலுடன் உபயோகிக்கவும். வேண்டுமானால் மிளகாய் சேர்க்கலாம். எள்ளும்,சீரகமுமாக ரொட்டியுடன் இது ஒரு ருசி. ஒன்றும் பிரமாதமில்லை.
Entry filed under: கறி வகைகள். Tags: எள்ளும் சீரகமும், பஞ்சாபியர்கள்.
12 பின்னூட்டங்கள் Add your own
Geetha Sambasivam க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
துளசிதரன், கீதா | 6:50 முப இல் நவம்பர் 27, 2017
அட! புதுவிதமான ரெசிப்பி! என் வட இந்திய தோழி வீட்டில் சாப்பிட்டதுண்டு. காரமும் இருந்துது அதில். பச்சைமிளகாய். எள்ளுடன் சாப்பிட நன்றாகவே இருந்தது. பீன்ஸ் கட் செய்யும் வேலை குறைவு. வீட்டில் செய்து பார்த்திடணும்…மிக்க நன்றி காமாட்சி அம்மா ரெசிப்பிக்கு..
கீதா
2.
Geetha Sambasivam | 7:50 முப இல் நவம்பர் 27, 2017
கொஞ்சமானும் காரம் வேண்டாமோ? பூண்டு காரமே போதுமா? பூண்டு இல்லாமல் செய்து பார்க்கணும். 🙂
3.
Geetha Sambasivam | 7:51 முப இல் நவம்பர் 27, 2017
Facebook Id வழியாக் கொடுத்திருக்கேன் போயிருக்கா தெரியலை! 🙂
4.
'நெல்லைத்தமிழன் | 8:43 முப இல் நவம்பர் 27, 2017
பச்சைப் பசேல் பீன்ஸ். பார்க்கவே நல்லா இருக்கு. இங்க ஃப்ரெஞ்ச் பீன்ஸுன்னு மெல்லிசா, ஒடித்தால் கண்ணிர்விடும் அட்டஹாசமான பீன்ஸ் வரும்.
இஞ்சிப்பூண்டு இதற்கு எதற்கு? சப்பாத்திக்குத் தொட்டுக்கும்படி செய்திருக்கிறீர்களா?
பச்சை நிறத்தை எப்படி ரிடெயின் செய்வது? வதக்கும்போது நிறம் மங்கிவிடுகிறதே?
5.
chollukireen | 8:44 முப இல் நவம்பர் 27, 2017
துளசிதரன் கீதா சும்மா ரெஸிப்பி பார்த்து விட்டு நம் ருசிக்கு ஏற்ப மாற்றங்கள் செய்வதுதான் ஸரியான வழி. பாராட்டுகள். எனக்கு வட இந்திய உறவுகளே உள்ளது. ரொம்பரொம்ப ஸந்தோஷம் பின்னூட்டத்திற்கு.. அன்புடன்
6.
chollukireen | 8:49 முப இல் நவம்பர் 27, 2017
கீதா ஸாம்பசிவம் எது வேண்டுமோ இஷ்டத்திற்கு மாற்ற வேண்டியதுதான். . நான் பார்த்த ரெஸிப்பி இது. அன்புடன்
7.
chollukireen | 8:51 முப இல் நவம்பர் 27, 2017
இரண்டு பின்னூட்டமும் அழகா வந்திருக்கு. மிகவும் நன்றிஅன்புடன்.
8.
chollukireen | 9:34 முப இல் நவம்பர் 27, 2017
துளி ஜலத்தில் கால் டீஸ்பூன் சக்கரை சேர்த்து பீன்ஸை வேக வைத்தால் கலர் நன்றாக இருக்கும். இப்படியே மைக்ரோவேவில் வேக வைத்தாலும் கலர் பச்சென்றே இருக்கும்..எண்ணெயில் வதக்கும் கறிகள் நிறம் மாறும். ருசி இருக்கிறதே..நெ.தமிழன் உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை.. கொதிக்கும் ஜலத்தில் முழு பீன்ஸைப் போட்டெடுத்துப் பிறகு குளிர்ந்த நீரில் போட்டெடுத்தால் கலர் மாறாது என்று மேல்நாட்டுச் சமயலில் காட்டுவார்கள்.. பாலக்கீரை உட்பட.காட்டுவார்களே! நான்நேரில் பார்த்ததும் போடுவேன் . சப்பாத்திக்கு காரஸாரமான டாலுடன் இது துணைபோகிறது. வரவிற்கு மிகவும் நன்றி.அன்புடன்
9.
ஸ்ரீராம் | 2:29 பிப இல் நவம்பர் 27, 2017
புதுவிதமாக இருக்கிறது. எள் எதற்கு? வாசனை தனித்துத் தெரியுமா? எனக்கு பீன்ஸ் பிடிக்கவே பிடிக்காது. இது போலச் செய்து பார்க்கலாம் என்று தோன்றுகிறது.
10.
chollukireen | 5:47 முப இல் நவம்பர் 28, 2017
இது நம் முடைய சமையல் வகை இல்லை. வருத்த எள்,வதங்கிய இளம் பீன்ஸுடன் ருசிக்கும்போது சுட்ட இளம் வேர்க்கடலை மாதிரி தோன்றியது. காரத்துடன் சப்பாத்திக்கு ருசியாகஇருக்கலாம். உலகத்தில் பல ருசிகள். செய்து பாருங்கள் என்றுதான் நான் சொல்லுவேன். மிகவும் நன்றி வரவிற்கு. அன்புடன்
11.
athiramiya | 8:25 முப இல் திசெம்பர் 3, 2017
காமாட்சி அம்மா, இன்றுதான் எவ்ளோ பாடுபட்டு உங்கள் பக்கம் வந்தேன், இதன் பெயரே இப்போதான் கவனித்தேன்.. முன்பு வந்திருக்கிறேன் என மனதில் நினைச்சிருந்தேன் ஆனா வரவில்லை.
நல்ல ஒரு பீன்ஸ் ரெசிப்பி.
12.
chollukireen | 8:13 முப இல் திசெம்பர் 4, 2017
வாவா அதிரா. நீங்கள்தான்அதிராமியாவா. ஒன்றுமே புரியவில்லை. பலபேர் அதிராவுக்கு இருக்கு என்று கீரைவடை பின்னூட்டம் கொடுக்கும் போதுதான் பளிச் என்று தோன்றியது. அதிராமியாவை யாராக இருக்கும் என்று யோசித்தது வேஸ்ட். பழக்கமான எங்கள்ப்ளாக் ஃபேமஸ். நன்றி அதிரா. அன்புடன்