ஆனந்த ஊஞ்சல்
பிப்ரவரி 4, 2018 at 1:14 பிப 31 பின்னூட்டங்கள்
எவ்வளவு நிம்மதியான ஆனந்தஉறக்கத்துடன் கூடிய அழகு ஊஞ்சல்! பகற்கனவுடன். பொறாமையாக உள்ளதா? பகல் நேரம்.
தஞ்சாவூர் அரண்மனை வளாகத்திலுள்ள மரத்தில் ஒய்யாரமாகத் தோற்றம் கொடுக்கும் வவ்வால் கூட்டம். நன்றி தினத்தந்தி.
நாங்களுந்தான் வீடு வாசல், குடும்பத்துடன் மழை,காற்று பாராமல் அழகாகத் தொங்குகிறோம். எங்கள் பெயர் தூக்கணாங்குருவி. இது தெரியாதா?
Entry filed under: ஊஞ்ஜல்.
31 பின்னூட்டங்கள் Add your own
நெல்லைத்தமிழன் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
நெல்லைத்தமிழன் | 2:40 பிப இல் பிப்ரவரி 4, 2018
வௌவால்கள் ரொம்ப பெரிசா இருக்கே. பழம்தின்னி வவ்வால்களோ? நீங்க சொன்னப்பறம்தான் அது வௌவால்கள் என்பதையே பார்க்கமுடிந்தது. நான் தூக்கணாங் குருவிக் கூடோன்னு நினைத்தேன்.
இரண்டாவது படம் தூக்கணாங்குருவிக் கூடு. எவ்வளவு அழகா இருக்கு? நல்ல திறமைசாலிகள்தான்.
2.
thulasithillaiakathu | 12:27 முப இல் பிப்ரவரி 6, 2018
நெல்லை எனக்கும் முதலில் அப்படித்தான் தோன்றியது…முதல் படத்தில் தூக்கணாங்குருவிக் கூடுகள் என்று…
குருவிகள் ரொம்பவே திறமைசாலிகள்!! உள்ளேயும் ரொம்ப அழகா மெத்து மெத்துனு பஞ்செல்லாம் பொறக்கி அடைத்து வைக்கும்…ரூம் போல…
கீதா
3.
chollukireen | 2:07 பிப இல் பிப்ரவரி 6, 2018
கீதா உனக்கும் நெல்லைக்கான பதிலே நூறு சதவீதம் பொருந்தும். கூட்டைதான் எவ்வளவு அழகாகப் பின்னி இருக்கும்? பஞ்சணை மெத்தை. ஐந்து நக்ஷத்திர வசதிதான். அழகான பின்னூட்டம். நன்றி. அன்புடன்
4.
chollukireen | 1:49 பிப இல் பிப்ரவரி 6, 2018
ஆமாம். பெருச்சாளிகள் போல இருக்கு. பழந்தின்னி வௌவால்களாகவே இருக்கும். பாழடைந்த வீட்டில் குடி இருக்கும் சின்ன வௌவால்கள் இரவானால் பறப்பதைப் பார்த்திருக்கிறேன். ஒன்றல்ல,குட்டி குட்டியாக பல பறப்பதைப் பார்த்துள்ளேன். பாடப்புத்தகங்களில் பழந்தின்னி வௌவால்களைப்பற்றி எப்போதோ படித்திருக்கிறேன்.
அரண்மனை வளாகத்தில் படுத்துறங்கும் இவைகள் , தினமும் நெடுந்தூரம் சென்று பழத்தோட்டங்களில் உண்டு, இவ்விடம் களைப்பாறும் பழந்தின்னிகளாகத்தான் இருக்கவேண்டும். ஆச்சரியம் இந்தப் பதிவிற்கும் பின்னூட்டம். நன்றி. அன்புடன்
5.
chollukireen | 1:58 பிப இல் பிப்ரவரி 6, 2018
உங்களுக்கான பின்னூட்டம் கீதாவிற்கான மறுமொழியில் எழுதிவிட்டேன். திரும்ப கேன்ஸல் செய்ய மனமில்லை. தூக்கணாங்குருவி திறமைசாலிதான். நான் எழுதின பதிலை திரும்ப எழுத யோசிக்கிறேன். மன்னிக்கவும். அன்புடன்
6.
நெல்லைத்தமிழன் | 2:05 பிப இல் பிப்ரவரி 6, 2018
எங்க எழுதினா என்ன காமாட்சிம்மா. நீங்க பதில் எழுதுவதே பாராட்டுக்குறியதுதானே.
7.
chollukireen | 11:45 முப இல் பிப்ரவரி 7, 2018
சிலஸமயம் இப்படி ஆகி விடுகிறது. உங்கள் பதில் பரிவாக இருந்தது. நன்றி. அன்புடன்
8.
Angel | 3:25 பிப இல் பிப்ரவரி 4, 2018
தூக்கணாங்குருவிக்கூடும் பயமின்றி தூங்கும் (தொங்கும் )வவ்வால்களும் பார்க்க கொஞ்சம் பொறாமையாதான் இருக்கு .கவலையற்ற வாழ்க்கை அவங்களுக்கு
9.
chollukireen | 2:20 பிப இல் பிப்ரவரி 6, 2018
இது ஒன்றும் பெரிய ஸமாசாரமில்லை. தமிழ்பத்திரிகையில் வந்தது. யாரும் பார்த்திருக்கும்படியான பெரிய ஸமாசாரமில்லை. அதனால் சும்மா தோன்றினதை எழுதுவோம். எழுதினேன். பயம் மனிதருக்குத்தான் அதிகம்போலும்.
கவலையும் உடன் பயணப்படுவது. ரஸித்துப் பதில். நன்றி. அன்புடன்
10.
இளமதி | 9:50 பிப இல் பிப்ரவரி 4, 2018
வணக்கம் அம்மா!
முதலாவது படத்தில் வௌவால்களா அவை… ரொம்பப் பெரீசாக இருக்கின்றன.
பறக்கும்போது பெரிய கழுகு போல இருக்குமோ?..
ஊரில் நான் சின்னவளாக இருந்த போது இந்த வௌவால்களைப் பார்த்துப் (இவ்வளவு பெரிதல்ல அவை ) பயந்த சம்பவங்கள் உண்டு. இப்ப நினைத்தாலும் ஏனோ எனக்குப் பயம்தான்..:)
தூக்கணாங் குருவிக் கூடு ரொம்பவே அழகாக இருக்கிறது அம்மா!
எத்தனை நுட்பமாக இப்படிக் கூடு கட்ட அவைக்கு யார்தான் சொல்லிக் கொடுத்திருப்பார்கள்…:)
உண்மைதான் எந்தக் கவலையுமில்லாத வாழ்வு நிலை! ஆடிக்கொண்டே உறங்குகின்றன!
அழகு!
பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் அம்மா!
11.
chollukireen | 2:29 பிப இல் பிப்ரவரி 6, 2018
இளமதி ஆசிகள். படித்த செய்தி,உடன் தூக்கணாங்குருவி பதில் சொல்வது போன்ற எண்ணம்.
ராக்ஷஸ வௌவால் என்றுகூட ஒரு வகை உண்டு என்று எப்போதோ படித்தது ஞாபகம் வருகிறது. இதுவும் ஒரு பதிவு என்று நான் போட்டிருப்பதைச் சொல்லவா? கவலை இல்லாத வாழ்வு. நினைத்தாலே
அவைகளைப்பார்த்தவுடன் தோன்றும் எண்ணம்.
என்ன நேர்த்தியான ஒரு பதில். நன்றியும் வாழ்த்துகளும். அன்புடன்
12.
கோமதி அரசு | 2:31 முப இல் பிப்ரவரி 5, 2018
அருமையான படம்.
அழகான ஊஞ்சல். பார்க்கும் போது ஆனந்தம் ஏற்படுகிறது.
13.
chollukireen | 2:33 பிப இல் பிப்ரவரி 6, 2018
ஆனந்தம் ஏற்படுகிறதா?. மிக்க ஸந்தோஷமம்மா. நன்றி அன்புடன்
14.
நெல்லைத்தமிழன் | 5:18 முப இல் பிப்ரவரி 5, 2018
“தூக்கணாங் குருவிக் கூடு
தூங்கச் சொன்னா மனசிலே” பாடல் உங்கள் நினைவுக்கு வந்ததா?
15.
chollukireen | 2:35 பிப இல் பிப்ரவரி 6, 2018
ஏதோ சிறிதுதான் ஞாபகம். ஞாபகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி. அன்புடன்
16.
துளசிதரன், கீதா | 12:25 முப இல் பிப்ரவரி 6, 2018
வொவ்வாலா? முதல் படத்தில் இருப்பது?!! அட! இத்தனை வவ்வால்களும் பார்க்க ரொம்ப அழகு. முதலில் நாங்கள் நினைத்தது தூக்கணாங்க் குருவிக் கூடுகள் என்றுதான்…
இரண்டாவது படம் ஆஹா தூக்கணாங்குருவிக் கூடுகள்…அவை எந்தக் காற்றிற்கும் பயப்படாமல் தாலாட்டும்…இரண்டுமே ஆனந்த ஊஞ்சல்கள்தான்!! ரொம்ப அழகாக இருக்கு தலைப்பு!! காமாட்சிம்மா…
கீதா
17.
chollukireen | 2:42 பிப இல் பிப்ரவரி 6, 2018
அதுகள் வௌவால் என்று படித்தவுடன், தூக்கணாங்குருவி என்னுடன் பேசியது. என் பெயர்மாதிரி இதுவும் ஒரு பதிவாக இருக்கட்டுமே என்று தூக்கணாங்குருவியை இணையத்தில் தேடினேன். வகையாகக் கிடைத்தது. ஆனந்த ஊஞ்சல் எனத் தோன்றியது. என்ன ஆச்சரியம் என்னுடைய தலைப்பும் அழகாக இருக்கு என்று நீ எழுதிவிட்டாய்!
ஆஹா ஸந்தோஷமே. நன்றி இருவருக்கும். அன்புடன்
18.
ஸ்ரீராம் | 8:57 முப இல் பிப்ரவரி 6, 2018
நானும் தூக்கணாங்குருவிக் கூடென்றே நினைத்தேன். பாடலைச் சொல்லலாம் என்றால் நெல்லை ஏற்கெனவே சொல்லி இருக்கிறார். ஏஞ்சல்.. கவலையற்ற வாழ்வா? நித்யகண்டம் பூர்ணாயுசு!
19.
chollukireen | 2:50 பிப இல் பிப்ரவரி 6, 2018
பரவாயில்லை. கவலையற்ற வாழ்வுதான் அதுகளுக்கு. சில ஸமயம் அதன் முட்டைகளுக்கோ, குஞ்சுகளுக்கோ ஏதாவது என்றால் அவைபோடும் கூச்சல்கள். அவைகளுக்கும் இம்மாதிரி கவலைகள் இருக்கும் போலும். தூக்கணாங்குருவிக் கூடென்று நினைத்த உங்கள் யாவருக்கும் ஃபுல்மார்க். நன்றி உங்களுக்கு அன்புடன்
20.
athiramiya | 9:57 முப இல் பிப்ரவரி 6, 2018
ஆஹா என்ன ஒரு அழகு… பார்த்துக் கொண்டே இருக்கலாம்…
எங்கள் அண்ணாவின் கல்யாண வீட்டுக்கு வீட்டு வாசலில் பெரீய பந்தல் போட்டு சோடனைகள் நடந்தது.. அப்போ அந்த அமளியிலும், பயப்படாமல் ஒரு தூக்கணாங் குருவி ஒரு நாளில், அந்த பந்தலில், முகட்டு உச்சியில் ஒரு கூடி கட்டி விட்டது….
அப்போ அது நல்ல சகுனம் கூட்டைக் கலைத்து விடவேண்டாம் என அப்பா சொல்லிட்டார்…
பார்த்தால், கட்டிய கையோடு முட்டைகளும் போட்டு, மேலே இருந்து கொண்டு கீழே நடக்கும் கூத்துக்களை ரசித்துக் கொண்டிருந்தது…. பயமே இல்லாமல்.. திருமணம், வேறு ஹோலில் நடந்தது.
21.
chollukireen | 2:56 பிப இல் பிப்ரவரி 6, 2018
ஸ்வாரஸ்யமான ஸம்பவம். ஆமாம் சகுனம் நல்லதென்றுதான் தோன்றும். இனப்பெருக்கம் வேறு. அழகிய நிகழ்ச்சி. சொல்லிய விதம் வெகு அழகு. அதிரா அழகான நிகழ்ச்சி வேறுஹாலில் திருமணம். நன்றி அதிரா. முத்தாய்ப்பான நிகழ்ச்சி. அன்புடன்
22.
athiramiya | 9:59 முப இல் பிப்ரவரி 6, 2018
ஓ முதல் படத்தில் இருப்பது வெளவால்களோ…
ஒரு வெளவால் வீட்டுக்கு இன்னொரு வெளவால் வந்தால் அதுவும் தொங்கிக் கொண்டுதானிருக்கும்:))
23.
chollukireen | 2:59 பிப இல் பிப்ரவரி 6, 2018
நம் வீட்டிற்கு வருபவர்கள் நம்மைப்போன்றவர்கள்தானே! அதுவும் அப்படியே. நன்றி அன்புடன்
24.
Aekaanthan | 9:16 முப இல் பிப்ரவரி 21, 2018
தூக்கணாங்குருவிக் கூடுகளை கிராமத்தில் சிறுவயதில் பார்த்து அதிசயித்திருக்கிறேன். இப்போது நீங்கள் நினைவுகளை ரெஃப்ரெஷ் செய்துவிட்டீர்கள். இன்னும் நிறைய பறவைகளை, கூடுகளைப் படங்களாக இணைத்திருக்கலாம்.
பறவைகளுக்கு அமர, கூடுகட்ட, குதித்து மகிழ நிறைய மரங்கள் தேவை. மனிதன் தான் அழிப்பதிலேயே குறியாக இருக்கிறானே. இவன் எப்போது புரிந்துகொள்வது,அதுகளுக்கு நிம்மதி எப்போது வருவது – ஆண்டவன் தான் அவசரமாகக் கவனிக்கவேண்டும்.
25.
chollukireen | 6:47 முப இல் பிப்ரவரி 22, 2018
ஒன்றுமே எழுதவில்லையே ஏதாவது படத்தையாவது போடலாம் என்று வௌவால் செய்தியைப் போட்டேன். தூக்கணாங்குருவி ஞாபகம் வந்தது. யாருமே பார்க்கப் போவதில்லை, என்மன திருப்திக்காகப் போட்டேன். ஆமாம் இன்னும் பலவித கூடுகளைப் போட்டிருக்கலாம். இப்படியெல்லாம் கூட எழுதலாம்போல மிகவும் நன்றி. அன்புடன்
26.
Geetha Sambasivam | 1:17 முப இல் மார்ச் 11, 2018
இதுக்கு மட்டும் எத்தனை முறை கருத்துச் சொல்லி இருக்கேன். போவதே இல்லை. இதே போல் ஏகாந்தன் சாரின் பதிவிலும். அவரோட மெயில் ஐடிக்கு இப்போ அனுப்ப வேண்டி இருக்கு! 🙂 என்னனு புரியலை. வேர்ட் ப்ரஸில் கருத்துச் சொல்வது சிரமமாக இருக்கு!
27.
chollukireen | 5:56 முப இல் மார்ச் 11, 2018
நீங்களெல்லாம் இப்படிச் சொல்லும்போது நான் என்ன சொல்வது? காரணம் எனக்கும் தெரியாது. ஏதாவது செய்ய வேண்டும். பழகிப்போனதால். ஏன் இப்படி என்று யாராவது கண்டு பிடித்துச் சொன்னால்தான் உண்டு.பலமுறை வந்தும் கருத்துகள் போவதில்லை என எழுதியுள்ளீர்கள்.சிரமம்தான். கோபமே வந்தாலும் வரும். தள்ளாமை அதிகமாகிறது எனக்கு. எதுவுமே முடிவதில்லை. வருகைக்கு மிகவும் நன்றி. அன்புடன்
28.
Geetha Sambasivam | 1:18 முப இல் மார்ச் 11, 2018
Face Book மூலம் இன்று போயிருக்கு! ஆச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சரியம்!
29.
chollukireen | 6:02 முப இல் மார்ச் 11, 2018
போனால்போகிறது. காமாட்சி அம்மாவிற்கு சிறிது ஸந்தோஷத்தைக் கொடுக்கலாமென்று முகனூல்வழி வந்து விட்டதா? அதிசயம் ஆனால் உண்மை இல்லையா?
ஸந்தோஷம்ஸந்தோஷமே!
30.
chitrasundar5 | 4:03 முப இல் மார்ச் 21, 2018
காமாக்ஷிமா,
இங்கே உள்ள படங்களைப் பார்த்ததும் மனது ஊருக்கே போய்விட்டது.
தினமும் மாலையில் எங்கிருந்தோ வரும் வௌவால், கூட்டம்கூட்டமாக பக்கத்து ஊரு தோப்புக்குப் போய் அங்கே தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கும்.
தூக்கணாங்குருவி …..சொல்லவேத் தேவையில்லை, எங்க கழனியில் உள்ள வயர்களில் நிறைய கூடுகள் கட்டியிருக்கும். அதில் பல அறைகள் இருக்கும். பார்க்கவே ஆச்சரியமா இருக்கும். அன்புடன் சித்ரா.
31.
chollukireen | 6:14 முப இல் மார்ச் 21, 2018
சிலவில்லாமல் உன்னை ஊருக்கு அனுப்பி அகமகிழ வைத்துவிட்டது வௌவால்கள். உன்னுடைய அனுபவங்கள் எண்ணங்களை மலரவைத்துவிட்டது. நல்ல அனுபவம். அன்புடன்