காவிரி இல்லையிது.
ஓகஸ்ட் 4, 2018 at 8:16 முப 20 பின்னூட்டங்கள்
பதினெட்டாம் பெருக்கெல்லாம் கொண்டாடிய காவிரி இல்லையிது.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அபாய அளவைத் தாண்டி பயமுறுத்திய தில்லி யமுனை சீற்றம் குறைந்து காணப்பட்ட ஒரு படம் இது. நதிக்கரையில் வசித்த மக்களெல்லாம், திரும்ப வர ஆரம்பித்து உள்ளனர். யமுனையில் அதிக அளவு தண்ணீரே பார்க்க முடிந்ததில்லை. ஐந்து,ஆறு வருஷங்களுக்குப் பிறகு, தொடர் மழையும்,யமுனையில் வெள்ளமும் என்று சொல்லக் கேட்டேன்.
பாருங்கள் யமுனையை!!
மக்களெல்லாம் ஒருபுறம் திரும்ப ஆரம்பித்த பிறகோ முன்போ வளர்ப்புச் செல்லங்களின் நிலையும் எப்படி இருந்திருக்கும்?
நான் எதையும் நேரில் பார்க்கவில்லை. நீங்களும் பார்க்கலாமே என்ற ஒரு எண்ணம். நமக்கு உதவுவது செய்தித் தாள்கள்.
மதில்மேல்ப் பூனயாக என்று சொல்வார்களே? நான் நம்பிக்கையோடு இருக்கிறேன். என்னை வளர்த்தவர்கள் வந்து விடுவார்கள். வீட்டுப் பக்கம்தான் இது.
நன்றியுள்ள நாங்களும் திரும்புகிறோம். எங்கள் எஜமானர்களும் வந்திடுவார்கள். எங்கள் வீடுதான் அருகில் இருப்பது. நான் இன்னும் குழந்தை,குட்டிங்களுக்கு இடம் தேடணும். புரிதுங்களா?
நானும் எவ்வளவு தண்ணியிலே வரேன் தெரியுமா? தண்ணியெல்லாம் வடிஞ்சுடுங்கோ!என்னிடம் பேசுவது போன்ற ஒரு கற்பனை. அவ்வளவு தான்.
20 பின்னூட்டங்கள் Add your own
Aekaanthan க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Venkatraman gurumurthy | 11:29 முப இல் ஓகஸ்ட் 4, 2018
Thank you very muchfor revealing mystate of mind.
2.
chollukireen | 5:32 முப இல் ஓகஸ்ட் 6, 2018
ஆமாம் படங்களைப் பார்த்தவுடன் தோன்றியதிது. வரவிற்கு மிகவும் நன்றி. அன்புடன்
3.
திண்டுக்கல் தனபாலன் | 1:35 பிப இல் ஓகஸ்ட் 4, 2018
கஷ்டமாக இருக்கிறது…
4.
chollukireen | 5:29 முப இல் ஓகஸ்ட் 6, 2018
நல்லபடி திரும்பியவைகள்தான் இவர்கள். இருப்பினும் பார்க்கப் பரிதாபம்தான். அன்புடன்
5.
நெல்லைத்தமிழன் | 1:51 பிப இல் ஓகஸ்ட் 4, 2018
ஆஹா… செய்தித்தாள்களில் வந்த படங்களா? கொஞ்சம் பயமுறுத்தும் வெள்ளம்தான்.
நான் 2008ல் பார்த்தபோது (அலஹாபாத்), யமுனை நதி கொஞ்சம் கருமையா குறைவான தண்ணீருடன், ஓரளவு பளபளப்பான கங்கை நதியில் கலப்பதைப் பார்த்தேன். யமுனை நதியில்தான் கழிவுகளையெல்லாம் சேர்த்துவிடுகிறார்களாம்.
‘யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே
கண்ணன் போவதெங்கே’
பாடல் நினைவுக்கு வருகிறது.
6.
chollukireen | 5:41 முப இல் ஓகஸ்ட் 6, 2018
நான் 1970 இல் சங்கமத்தில் ஸ்நானம் செய்திருக்கிறேன். அங்கு பார்த்த யமுனைக்கும்,தில்லி யமுனைக்கும் பெரும் வித்தியாஸம்தான். இங்கு யமுனையில் வெள்ளம் வரும்போதுதான் அது நதி.
மற்றபடி எங்கோ ஒரு ஓரத்தில் ஓடிக்கொணடிருக்கும் தண்ணீர்தான் யமுனை. மயூர்விஹார் பிரிட்ஜை கடக்கும்போது இதுதான் பார்வையில்படும். எதோ ஒரு நாலுவரிஎழுதணும்,படங்கள் அம்மாதிரி மனதில் எண்ணத்தைத் தோற்றுவித்தது. நல்ல பாடல் நினைவுக்கு வந்தது உங்களுக்கு. மிகவும் நன்றி. அன்புடன்
7.
கோமதி அரசு | 2:46 பிப இல் ஓகஸ்ட் 4, 2018
மனிதர்கள் கஷ்டபடும் போது அவர்களை அண்டி வாழும் ஜீவராசிகளும் கஷ்டபடுகிறது.
பூனை, நாயைப் பார்க்கும் போது மனம் வேதனைபடுகிறது.
8.
chollukireen | 5:44 முப இல் ஓகஸ்ட் 6, 2018
ஸகோதரி நான் வராவிட்டாலும், நீங்கள் வந்து பின்னூட்டம் கொடுத்ததற்கு மிகவும் நன்றி. நீங்கள் எழுதுவது வாஸ்தவம். நன்றி அன்புடன்
9.
Venkatraman gurumurthy | 4:37 பிப இல் ஓகஸ்ட் 4, 2018
Thank youvery much for revealingmy state of mind.
10.
chollukireen | 7:25 முப இல் ஓகஸ்ட் 6, 2018
நன்றி. மனதில் தோன்றியதை எழுதினேன். அவ்வளவுதான். அன்புடன்
11.
ranjani135 | 4:45 பிப இல் ஓகஸ்ட் 4, 2018
பாவம் வீட்டு விலங்குகள். மனிதர்களே படாத பாடு படும்போது இவைகளை யார் கவனிக்கப் போகிறார்கள்?
எல்லா ஆறுகளும் இப்போது வெள்ள அபாயத்தில். நீரை சேமித்து வைக்கப் போகிறார்களா இல்லை கடலில் கலக்க விடப் போகிறார்களா?
நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை இங்கு பார்ப்பதில் சந்தோஷம்.
12.
chollukireen | 11:45 முப இல் ஓகஸ்ட் 6, 2018
நடுவில் உங்களுக்கு மறுமொழி எழுத விட்டுப் போயுள்ளது. யாருக்கு நீங்கள் சொன்னதில் விசாரமிருக்கப் போகிறது. . நினைத்தால் முடிக்கும் காரியமுமில்லை.. வரவிற்கு மிகவும் நன்றி.
13.
ஸ்ரீராம் | 11:22 முப இல் ஓகஸ்ட் 5, 2018
யமுனை வெள்ளம் பற்றி செய்தித்தாளில் படித்தேன். செல்லங்களின் படங்கள் அழகாய் இருக்கின்றன. அந்தக் குட்டிப்பூனை எங்கள் செல்லம் போலவே இருக்கிறது! குட்டி போடும் நிலையில் உள்ள நாய்ச்செல்லம் பாவம்… சாதாரணமாகவே இடம் கிடைப்பது கஷ்டம்…
14.
chollukireen | 7:30 முப இல் ஓகஸ்ட் 6, 2018
நானும் பேப்பரில் படிக்கும்போது மனதில் தோன்றியதை எழுதினேன். அவைகளும் அப்படித்தான் நினைத்திருக்கும். எல்லாமே அழகான செல்லங்கள்தான். வளர்ப்பவர்கள் நன்றாகவே வளர்த்திருப்பார்கள். ஸரியாகி இருக்கும் இப்போது. அன்புடன்
15.
ஸ்ரீராம் | 11:22 முப இல் ஓகஸ்ட் 5, 2018
சென்னை வெள்ளத்தின்போது நாய், ஆடு, கோழி போன்றவற்றை அவைகளை வளர்த்தவர்கள் தலையில் மேல், தோளின்மேல் தூக்கிக் கொண்டு நண்டாந்த படங்களை செய்தித்தாள்கள் பகிர்ந்திருந்தன.
16.
chollukireen | 7:34 முப இல் ஓகஸ்ட் 6, 2018
கவர்மென்ட் அமைத்த சிறு கூடாரங்கள் மனிதர்கள் தங்கினார்கள். எந்தச் சூழ்நிலையோ? நிலைமை சீர் அடைந்திருக்கும். நன்றி . அன்புடன்
17.
chollukireen | 5:26 முப இல் ஓகஸ்ட் 6, 2018
மிக்க நன்றி. அன்புடன்
18.
Aekaanthan | 10:54 முப இல் ஓகஸ்ட் 8, 2018
யமுனையில் வெள்ள அபாயம் எனப் படித்தேன். ஜூலையில் மழையே அரிது. மழையும் வந்து வெள்ளமுமா -அதுவும் டெல்லியில். ஜூலை 10-ஆம் தேதிதான் டெல்லியிலிருந்து பெங்களூர் திரும்பினேன். மூன்றுவாரத்திற்குள் இப்படிக் கேள்விப்பட்டதில் ஆச்சரியம்.
வளர்ப்புப்பிராணிகளின் கதி இம்மாதிரி இயற்கைசீற்றங்களில் அதோ கதிதான். ஏழைகள் தாங்கள் ஓடித் தப்பினாலே போதும் எனத்தானே நினைப்பார்கள். யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்.. அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்.. என்று பாடியிருக்குமோ என்னவோ ஒவ்வொரு பூனையும், நாயும்.
நீங்கள் பாம்பேயில் இருந்ததாகச் சொன்னீர்கள். டெல்லிக்கு எப்போது திரும்பினீர்கள்?
19.
chollukireen | 10:45 முப இல் ஓகஸ்ட் 9, 2018
ஜூலை மாதக்கடைசியில் இவ்விடம் வந்தேன். வந்தபோது மழையும்,செய்திகளும்.. நாளைக்கு ,பிள்ளைகள் காட்மாண்டுபோய் பசுபதிதரிசனம்,அபிஷேகம் செய்வதாகப் ப்ளான் போட்டுள்ளனர். எப்படியாவது எனக்கும் தரிசனம் செய்துவைப்பதாக அழைத்து வந்திருக்கின்றனர். 26 வருஷ தரிசனம் கொடுத்தவர் பசுபதி. அருளவேண்டும்.. நீங்கள் இவ்வளவு அக்கரையாக விசாரித்திருப்பது மகிழ்ச்சி. டில்லி வாஸம் தற்காலீகமானதுதான். உங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி. அன்புடன்
20.
Aekaanthan | 1:21 பிப இல் ஓகஸ்ட் 9, 2018
காத்மண்டுப் பயணம் கலகலவென அமையட்டும்.
இறைவனது தரிசனம் இனிதே கிடைக்கட்டும்.