வாழ்த்துகள்
ஓகஸ்ட் 23, 2018 at 11:36 முப 13 பின்னூட்டங்கள்
வரலக்ஷ்மி பூஜை வாழ்த்துகள் அனைத்துப் பெண்களுக்கும், பெண்குழந்தைகளுக்கும். ஆசியும்,அன்பும் சொல்லுகிறேன்.
Entry filed under: Uncategorized.
13 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
நெல்லைத்தமிழன் | 2:03 பிப இல் ஓகஸ்ட் 23, 2018
இங்க போட்டிருக்கிற படம் நல்லா இருக்கு. அன்னைக்கு ஒரு இனிப்பும் செய்யமாட்டாங்களா? பாயசம் கூடக் கிடையாதா? அல்லது கர்நாடக காரங்க மாதிரி சீனியில் செய்த பொம்மைகளும் கிடையாதா? அல்லது அதைப் படமெடுக்க மறந்ந்துட்டீங்களா காமாட்சி அம்மா?
2.
athiramiya | 8:45 பிப இல் ஓகஸ்ட் 23, 2018
இன்னும் இவர் இனிப்பைக் கைவிடவில்லைப்போலும் கர்ர்ர்ர்ர்:))
3.
நெல்லைத்தமிழன் | 3:43 முப இல் ஓகஸ்ட் 24, 2018
இனிப்பைச் சாப்பிடுவதைத்தான் விட்டிருக்கிறேன். அதுக்காக இனிப்பைப் பத்தி எழுதக் கூடாது பேசக்கூடாதுன்னு சொல்றீங்களே அதிரா… அப்போ டயபடீஸ் வந்தவங்கள்லாம் இனிமையாக்கூட பேசக்கூடாதா?
4.
chollukireen | 6:45 முப இல் ஓகஸ்ட் 24, 2018
கண்ணால் பார்க்கக் கூடக் காட்டவில்லை பாருங்கள்!!!!!!!! அவர் கேட்பது ஸரிதான். அன்புடன்
5.
chollukireen | 6:41 முப இல் ஓகஸ்ட் 24, 2018
கொழுக்கட்டை,பாயஸம், இட்லி, வடை, மற்றும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். சென்ற வருஷம்,நான் உடம்பு ஸரியில்லாதபோது,ஜெனிவாவில் மருமகள் செய்தபோது எடுத்த படமிது. எட்டு மணிக்கே ஆபீஸ்
ஓ டவேண்டும். இம்மாதிரி பழங்களோடு பாயஸம் மட்டும்தான்.. நான் அக்ஷதை,புஷ்பம் மட்டும்தான் போட்டேன்.நேஷனல் இண்டிகிரேஷன் மருமகள்கள். கொழுக்கட்டை வெகுதூரம். கேஸரி,பாயஸம் சுலபம். அது கூட படத்தில் இல்லை. கர்நாடகாவில் நான்கு,ஐந்து நாட்களுக்கு முன்பிருந்தே பக்ஷணங்கள் செய்து வைத்து நிவேதனம் செய்வார்கள். இங்கே நிவேதனத்திற்கு பச்சரிசி இட்லி. மடி,ஆசாரம் இப்படி அப்படிதானிருக்கும். பழக்கத்தில் எல்லாம் ஸகஜம். காமாட்சி அம்மா ஸரியானபடி இல்லை.அன்புடன்
6.
athiramiya | 8:44 பிப இல் ஓகஸ்ட் 23, 2018
காமாட்சி அம்மாவை நீண்ட நாட்களுக்குப் பின்பு பார்ப்பதைப்போல ஒரு பீலிங் வருது. அனைவருக்கும் வரலக்ஸ்மி பூஜை வாழ்த்துக்கள். நான் படிக்கும்போது ஒரு தடவை விரதமிருந்து குத்து விளக்கேற்றினேன்.
அதில் புதினம் என்னவெனில், அவ்விளக்கை அப்படியே அணையாமல் கோயிலில் இருந்து எடுத்துச்சென்று வீட்டுப் பூஜை அறையில் வைத்தால் விசேஷம் என்றார்கள்.
அப்படியே கஸ்டப்பட்டு தூக்கிக்கொண்டு போய் வீட்டில் வைத்திட்டேன்.
கோயில் அருகாமைதான் வீடு.
7.
chollukireen | 6:56 முப இல் ஓகஸ்ட் 24, 2018
அக்கரையாக விரதம் செய்திருக்கிறீர்கள். நல்லது. நான் எப்பொழுதாவது இரண்டு வரிகளாவது எழுத வேண்டும் என்று வருகிறேன். கூடுமான வரையில் யாவையும் படித்து விடுகிறேன். இப்போதும், காட்மாண்டு போய், பசுபதி தரிசனம் செய்து விட்டு வந்த கதை எழுத நினைக்கிறேன். சின்ன பதிவுதான். எழுத முனைவதில்லை. வயோதிகமோ,உடல்நலக்குறைவோ எதுவோ ஒன்று . உங்கள் மறு மொழிக்கு பெருமை கொள்கிறேன். அன்புடன்
8.
நெல்லைத்தமிழன் | 10:49 முப இல் ஓகஸ்ட் 26, 2018
கண்டிப்பா எழுதுங்க. நான் 2008ல் பசுபதிநாதர் தரிசனம் செய்தேன் (முக்திநாத் யாத்திரையின்போது). அப்போ பக்கத்துல கிட்டத்தட்ட சாக்கடை போன்று நீரில்லாமல் இருந்த பாக்மதி, அதற்கு அப்புறம் பக்காவாக சரிசெய்துள்ளார்கள் போலிருக்கிறது. (ஆனால் கோவிலுக்கு மெயின் ரோட்டிலிருந்து நடக்கவேண்டுமே… எப்படிச் சென்றீர்கள்?)
பாருங்க… எந்த ஊரில் இருந்தால் என்ன, எப்படி இருந்தால் என்ன (அந்த அந்த ஊர் முறைப்படி).. அண்ணாமலையார் உங்களைக் கூப்பிட்டு தரிசனம் கொடுக்கிறாரே…
9.
திண்டுக்கல் தனபாலன் | 3:03 முப இல் ஓகஸ்ட் 24, 2018
வாழ்த்துகள் அம்மா…
10.
chollukireen | 6:57 முப இல் ஓகஸ்ட் 24, 2018
நன்றியும்,ஆசிகளும் அன்புடன்
11.
கோமதி அரசு | 6:59 முப இல் ஓகஸ்ட் 24, 2018
வாழ்த்துக்களுக்கு நன்றி.
படம் நன்றாக இருக்கிறது.
உடல் நலமாய் இருக்க வேண்டும்
வாழ்த்துக்கள்.
12.
chollukireen | 7:26 முப இல் ஓகஸ்ட் 24, 2018
சென்ற வருடத்திய படமது. மறுமொழிக்கு மிகவும் நன்றி. அன்பிற்கு அன்பு. அன்புடன்
13.
chollukireen | 7:45 முப இல் ஓகஸ்ட் 28, 2018
நெல்லைத் தமிழன் இது மழைகாலம். . மூன்று மாதங்கள் தொடர் மழை. ஆதலால் பாகுமதி கரைபுரண்டு ஓடுகிறது.. வெளியிலிருந்து கோவில் உள்ளே வர வீல்சேர் வர வசதி செய்யப்பட்டு இருக்கிறது. . வீல்சேர் நாம்தான் கொண்டுபோக வேண்டும்.. எப்போதுமே விசேஷ அபிஷேகங்களுகு ஒரு குறிப்பிட்ட நபர்கள் அனுமதி உண்டு.. போலீஸ் அனுமதியுடன் வேறு வழியில் கோயில் முகப்பு வரை அனுமதி. எல்லாம் பெரிய நாட்டுப்பெண் செய்திருந்தாள்.. வீல்சேர் என்பதால்.. . அன்றே தில்லி திரும்பி விட்டேன். பசுபதி தரிசனம் பலபேர் தயவுடன் நன்றாகக் கிடைத்தது. கோயில் நிர்வாகம் அரசாங்கத்தின் கையில்.அன்புடன்