மும்பைப்பிள்ளையார்கள்.
செப்ரெம்பர் 12, 2018 at 12:10 பிப 14 பின்னூட்டங்கள்
வழக்கம் போல மும்பைப்பிள்ளையார்களை உங்களுக்கு தரிசிக்கப் போட்டு இருக்கிறேன்.
மூலமே கணத்திற்கெல்லாம் முதல்வனாம் என்னப்ப காஞ்சி
ஆலடிப் பிள்ளையாரே அடியேனுக்ககு அருள் செய்வாயே.
வணங்குவோம் . வாழ்த்துவார்.
புல்லாங்குழல் வைப்பதற்கு முன்படமா? அதனாலென்ன?
இன்னும் இரண்டொரு வினாயகரையும் தரிசிப்போம்.
அல்லல் போம் வல்வினை போம்.அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம் போம் நல்ல
குணமதிக மாமருணைக் கோபுரத்தில் வீற்றிருக்குங்
கணபதியைக் கைதொழுதக்கால்.
யாவருக்கும் வினாயக சதுர்த்தி வாழ்த்துகள்.
அன்புடன்
Entry filed under: Uncategorized.
14 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
கமலா ஹரிஹரன் | 5:29 பிப இல் செப்ரெம்பர் 12, 2018
வணக்கம் சகோதரி
அழகான படங்கள். ஒவ்வொன்றும் ஒன்றையொன்று மிஞ்சுவதைப் போல மிகவும் அழகாக இருக்கிறது. பார்த்து ரசிக்கும்படி தந்த பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
2.
ஸ்ரீராம் | 12:29 முப இல் செப்ரெம்பர் 13, 2018
காலை வணக்கம் அம்மா. படங்கள் அழகு. . விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.
3.
chollukireen | 5:09 முப இல் செப்ரெம்பர் 13, 2018
ஆசிகள். நன்றியும் அன்புடனும்.
4.
திண்டுக்கல் தனபாலன் | 2:17 முப இல் செப்ரெம்பர் 13, 2018
அனைத்தும் அழகு…
இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்…
5.
chollukireen | 5:05 முப இல் செப்ரெம்பர் 13, 2018
நன்றி. ஆம் அழகு வினாயகர்கள். ஆசியும்,அன்பும்
6.
அனுபிரேம் | 2:33 முப இல் செப்ரெம்பர் 13, 2018
இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள் மா…
படங்கள் எல்லாம் அழகு
7.
chollukireen | 5:08 முப இல் செப்ரெம்பர் 13, 2018
முதல் வருகை. வாவா. மறுமொழிக்கு மிகவும் நன்றி. ஆசிகளுடனும் அன்புடனும்
8.
நெல்லைத்தமிழன் | 5:14 முப இல் செப்ரெம்பர் 13, 2018
பிள்ளையார் படங்கள் மிக அருமை.
காஞ்சி ஆலடிப் பிள்ளையாரா – கேள்விப்பட்டதேயில்லையே.
அவனருளால் தொல்லையும், துயரமும், வல் வினையும் நிச்சயமாகத் தொலையும். வாழ்த்துகள்.
9.
chollukireen | 7:56 முப இல் செப்ரெம்பர் 14, 2018
பரிதிமாற் கலைஞர்என்கிற தமிழ் வித்வானுடைய கலாவதி என்கிற நாடக நூலில் இந்தச் செய்யுள் முதலாவதாக வரும். அந்த நாடகத்தைச் சுருக்கி, நம்ம தமிழில்க் கொண்டுவந்து எங்கள் ஸ்கூலில் நாடகமாகப் போட்டோம்.. வருஷமுடிவு. அந்தநாளில்,ஸ்கூலில் பாட்டு டீச்சர்,தையல்டீச்சர் என்று உண்டு. மிக்க அமோகமாக நடக்கும்.அப்போது முதல் இந்த ஆலடிப்பிள்ளையார் என் மனதில். நானும் விசாரித்துப் பார்த்து விட்டேன். எங்காகிலும் இருப்பார். இதெல்லாம் 75 வருடக்கதை..
புத்தகம் அப்பாவுக்குத் தெரியாமல் நான்தான் கொண்டு கொடுத்தேன். நான்தான் கதாநாயகன்..
அந்த ஆலடிப்பிள்ளையாரை இப்போது கேள்விப்பட்டு விட்டீர்களா?
ஆசிகளுடனும்,அன்புடனும்.
10.
நெல்லைத்தமிழன் | 2:02 பிப இல் செப்ரெம்பர் 14, 2018
ஆஹா இந்த சூரிய நாராயண சாஸ்திரி அவர்களை உங்கள் வாயிலாக மீண்டும் கேள்விப்படுகிறேன். தன் பெயரை தமிழின் ஆர்வத்தில் பரிதி மால் கலைஞர் என்று மாற்றிக்கொண்டார்.
70 வருஷத்துக்கு முன், சின்னப் பெண் காமாட்சி நாடகமாகப் போட்டதை இத்தனை வருடங்கள் கழித்து நினைவுகூர்ந்திருக்கிறீர்களே… ‘கல்லில் எழுத்துப்போல் காணுமே’ என்று சும்மாவா சொன்னார்கள்.
பாராட்டுகள் காமாட்சி அம்மா.
11.
athiramiya | 5:34 முப இல் செப்ரெம்பர் 13, 2018
மும்பைப் பிள்ளையாருக்கு என்னா பெரிய காது.. நல்லா ஒட்டுக் கேட்பார் போலிருக்கே:)..
இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்.
12.
கோமதி அரசு | 3:45 பிப இல் செப்ரெம்பர் 13, 2018
அனைத்து பிள்ளையார்களும் அழகு.
உங்களுக்கு இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
13.
chollukireen | 7:59 முப இல் செப்ரெம்பர் 14, 2018
எல்லோர் வேண்டுதலும் முதலில் அவருக்கல்லவா? . நன்றி.அதான் பெரியகாது. மிக்கநன்றி. ஆசிகளுடனும்,அன்புடனும்
14.
chollukireen | 5:21 முப இல் செப்ரெம்பர் 15, 2018
நன்றி நெல்லைத் தமிழன். அன்புடன்