தொட்டில்-5
ஒக்ரோபர் 20, 2020 at 11:12 முப 5 பின்னூட்டங்கள்
இந்த ஐந்தாவது பகுதி வேறு விதமாக முடிகிறது. சில விஷயங்கள் முன்னேற்பாடாக செய்ததும் ஸரியாகவேப் படுகிறது. இன்னும் பதிவுகள் இருக்கிறதே! னான் என்ன சொல்லுகிறேன்? என் பதிவு பார்த்தவர்கள் பதில் எனக்கு ஸந்தோஷத்தைக் கொடுக்கிறது என்பதைத்தான்.அன்புடன்
ஸந்தோஷமாகவே வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. ஈரல் குலைக்கட்டி. இப்போது இம்மாதிரி பெயரே கேள்விப்படவில்லை. ஒன்று இரண்டு குழந்தைகளில்லை. எங்கு பார்த்தாலும் இதே வியாதி. சோகமே சோகம் பேரன் போய்விட்டான். பட்ட காலிலே படும் என்பர். வாஸ்தவமாக ஏழை பணக்காரன் யாவரையும் எந்த நோயும் விட்டு வைக்கவில்லை. நல்ல ஆரோக்கியத்துடன் கூடிய அழகான, ஆதரவான பெரியவர் மாப்பிள்ளையும் ஃப்ளூவின் கைப்பிடியில் மீளவில்லை. என்ன இப்படி சோகமாகவே எழுதுகிறீர்கள் என்று நினைப்பது புரிகிறது. எங்கள் அப்பாவின் குடும்பத்திலும் எங்கள் பெரியம்மா வேறு ஊரிலும்,எங்கள் சித்தப்பா எங்கள் ஊரிலும் ஒரு வாரத்தில் போய்விட்டார்கள். ஊரில் இதற்கு குடும்பத்தில் ஒருவராவது இரையானார்கள். ஊர் எப்படி இருந்திருக்கும். வைத்தியமே கண்டு பிடிக்காத ஃப்ளூவின் காலம்.எப்போதோ நடந்த விஷயங்கள் ஆனாலும் படிக்கும்போது மனது நெகிழ்கிறது
யாருக்கு யார் ஆறுதல் சொல்வது. இதைப் படிப்பவர்கள்கூட ஸாதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். இதுவும் ஒரு சுனாமி மாதிரிதான். காலம் போகப்போக எல்லாவற்றிற்கும் மாற்று தேடிக்கொண்டும், விடிவுகள் அமைந்து கொண்டும் வாழ்க்கை ஓடிக் கொண்டும்தானிருக்கிறது. எதிர்பார்க்க முடியாத கஷ்டங்கள் வந்த பின் ஏற்றுக்கொண்டு ஓரளவு மாற்று கண்டுகொண்டிருப்பதுதான் வாழ்க்கை.
பெரியவருக்கு வயதாகிக்கொண்டு வருகிறது. பால்ய விதவைபெண். ஓரிரண்டு வயது பெரியவளாக இருக்கக் கூடிய மனைவி. யாருக்காக விசாரப்படுவது. பெண்ணைக் கண்ணின் இமைபோலக் காத்தும்.அன்பு காட்டியும் வருகிறார். தனக்குப்பின் இவர்களுக்கு ஆதரவு யார் கொடுப்பார்கள்? அதுவும் தன் பெண்ணிற்கு. தன்னைப்போல யார் அன்பு கொடுக்க முடியும். மனைவிக்காகிலும் …
View original post 410 more words
Entry filed under: Uncategorized.
5 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ஸ்ரீராம் | 1:32 பிப இல் ஒக்ரோபர் 20, 2020
பதிவின் இரண்டாவது பாரா இன்றைய நிலைக்கும் பொருந்துகிறது.
2.
athiramiya | 6:59 முப இல் ஒக்ரோபர் 21, 2020
எனக்கு எதுவும் புரியவில்லை காமாட்சி அம்மா, மொத்தமும் படித்தால்தான் புரியும், மனம் கனமாகவே இருக்கிறது.. இப்போதெல்லாம் தினமும் சோகம் துன்பம் தான் கேள்விப்படுகிறோம் என்பதே வேதனையாக இருக்குது.. காலையில் கண் விழிக்கும்போதே.. இன்று என்ன செய்திகளோ என மனம் திக்குத்திக்கு எனப் பதைக்குமளவுக்குக் காலம் மாறி வருகிறது.
3.
chollukireen | 11:48 முப இல் ஒக்ரோபர் 21, 2020
புதியதாக ஒன்றும் எழுதாவிட்டாலும் 4 வருஷங்களுக்கு முன் எழுதிய தொட்டில் என்ற பதிவுகளை மறு பதிவு வாராவாரம் செவ்வாய்க்கிழமையன்று செய்கிறேன். மனதிற்கு ஒரு ஆறுதலாக நானும் எழுதுகிறேன் என்ற முறையில் வைத்துக் கொள்ளுங்கள். பூராவும் படித்தால் என் அனுபவங்கள் புரியும். தொடர் கதையல்ல.தலைப்புக்கான பதிவுகள். உங்களை எங்கள் பிளாக் படிப்பதன் மூலம் பார்க்கிறேன். எனக்கு அடிக்கடி இளமதி ஞாபகம் வரும்.உங்களுக்குத் தொடர்பு இருந்தால் ஞாபகமூட்டவும். உலத்தில் யாவருக்குமே இப்போது நிம்மதி இல்லை. கூடிய சீக்கிரம் கடவுள் யாவருக்கும் நல்லதைக் கொடுப்பார். நம்பிக்கையில்தான் உலகமே இயங்குகிறது. உங்கள் பதிவுகள் எல்லாம் பிரசுரமானவுடன் பார்க்க லிங்க் கொடுங்கள். ஆசிகள். அன்புடன் யாவருக்கும்.
4.
athiramiya | 11:52 முப இல் ஒக்ரோபர் 21, 2020
நல்லது காமாட்ஷி அம்மா, பதிலுக்கு நன்றி… நீங்கள் எழுதுங்கோ, நான் முடியும்போதெல்லாம் எட்டிப் பார்ப்பது வழக்கம்.
இளமதி நலமாக பிஸியாக இருக்கிறா, எப்போதாவது அத்தி பூத்ததுபோல் மெயில் வரும்..போகும்.. தகவல் சொல்லுகிறேன்.
5.
chollukireen | 11:11 முப இல் ஒக்ரோபர் 21, 2020
ஜனத்தொகை, போக்கு வரத்துகள் மிகவும் குறைவாக இருந்தகாலம். தகவல் தொடர்புகளும் மிகக் குறைந்த காலம். காலரா,வசூரி முதலானவைகள் அப்போதும் மிகவும் கவலை அளித்த காலம்.இருந்தாலும் இப்போது போல உலகம் பூராவும் நோய்கள் பரவினதாகத் தெரியவில்லை. அச்சம் அப்போதும் தீவிரமாகத்தான் இருந்ததாகஞாபகம். அன்புடன்