தொட்டில்–6
ஒக்ரோபர் 27, 2020 at 3:43 முப 8 பின்னூட்டங்கள்
தொட்டில் ஆறாவது ஆடப்போகிறது.நீங்களும் கூட வந்து ஆடுவஎஙகள்தைப் பாருங்கள். பாட்டியின் ஒவ்வொரு சமையல்களும்,ஊறுகாய்களும் மிகவும் பெயர்போனவை.எங்கள் புதுப்பாளையத்தாளையும் பாருங்கள். சொல்லுங்கள். அன்புடன்
பாட்டி வீட்டு வாசலில் புதுப்பாளையத்தா வந்துவிட்டாளா? அதிகாலை ஆறு மணிக்கே வந்து விடும் தயிர்காகாரியைப் பற்றி யாவரும் விஜாரித்துக் கொள்ளும் கேள்வி இது. என்ன புதுப்பாளையத்தா ஏதாவது மாரி அம்மனா என்று தோன்றும். இல்லை. எங்கள் கிராமத்தின் அதுவும் எங்கள் வீட்டு சுற்றுப்புறமுள்ள எல்லோர் வீட்டிற்கும் தயிர் வழங்கும் பெண்மணி. ஒருநாள் விட்டு ஒருநாள்தான் வருவாள். பெரிய கூடையில் சுற்றிலும் அண்டையாக ஏதாவதை வைத்து பெரிய பானையில் தயிர் இருக்கும். தவிர அதன்மேல் வேண்டியவர்களுக்காக சிறியசிறிய மண் கலயங்களில் கெட்டியாக கத்தியால் வெட்ட வேண்டும் என்ற தோற்றத்துடன் தயிரும் எப்படி லாவகமாகச் சுமந்து வருகிராளோ என்று எண்ண வைக்கும்.
பெரிம்மா நான் வந்துட்டேங்கோ. பக்கத்தில் அக்கத்தில் யாராவது இறக்கி விடுவார்கள். தயிர்க்காரி வந்துட்டா,வந்துட்டா செய்திகள் அஞ்சலாகும். யாருக்கும் முதல்லே அவ குடுக்கமாட்டா. ஸரிபோவோம்
என்றுஎல்லார்வீட்டுஈயச்சொம்புகளும்,ஈயக்கிண்ணங்களும்அவரவர்கள் கையில். பெரிம்மா வரும் வரை கூடையை திறக்கமாட்டாள். எங்கே பெரிம்மா வா. ஒங்கையாலே போணி பண்ணு.
ஒரு சின்ன தடியை ஊன்றிக்கொண்டு பாட்டி வரும்போதே அவாளுக்கெல்லாம் கொடுக்கறதுதானே. சின்ன குழந்தைகாரி அவள்.
இல்லே இந்தா பிடி. உள்ளார போயி பாத்திரத்தில் ஊத்திக்கோ என்ற சொல்லுடன் ஒரு சின்ன கலயம் கைமாறும்.
அடுத்தது சுப்பம்மா. இது அவங்களுக்கு.எங்கே அவங்க? இன்னொரு கலயம் கைமாரும். எல்லாம் பாட்டி வீட்டுத் திண்ணையில்தான். பெரிய பானை திறக்கும். எல்லோரும் எனக்கு உனக்கு என்று பாத்திரம் நீளும். நறைய இருக்குது தயிரு. நீ…
View original post 398 more words
Entry filed under: Uncategorized.
8 பின்னூட்டங்கள் Add your own
chollukireen க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
chollukireen | 3:51 முப இல் ஒக்ரோபர் 27, 2020
தலைப்பில் சிறு தவறு.எஙகள் என்பது நடுவில் வந்து இருக்கிறது. அன்புடன்
2.
துளதிதரன், கீதா | 4:45 முப இல் ஒக்ரோபர் 29, 2020
அம்மா மீண்டும் உங்களை இங்கு காண்பதில் ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம். அவ்வப்போது எழுதுங்கள் அம்மா. உடல் நலம் பரவாயில்லையா?
அருமையான நினைவுகள்.
பதிவு வாசித்ததும் எனக்கும் என் பழைய நினைவுகள் வந்துவிட்டது. மட்டக்கிளப்பு தயிர் மிக மிகப் பிராபல்யம். //மண் கலயங்களில் கெட்டியாக கத்தியால் வெட்ட வேண்டும் என்ற தோற்றத்துடன் தயிரும்// ஆம் இப்படித்தான் இருக்கும்.
அது போன்று வள்ளியூரில், திருக்குறுங்குடியில் எல்லாம் எப்போதேனும் தயிர் வேண்டுமென்றால் பாட்டி சொல்லிவிட தயிர்க்காரம்மா வந்து தருபவையின் சுவை அலாதியாக இருக்கும். அந்த வாசனையே தனிதான். தயிர் வெண்ணை, நெய் எல்லாம் ரொம்ப நன்றாக இருக்கும்.
இப்போதும் அந்த வாசனை வருகிறது.
உங்களைக் கண்டதில் ரொம்ப சந்தோஷம் அம்மா மீண்டும்..
எழுதுங்கள் எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போது. இப்பதிவு தொடரும் போலத் தெரிகிறதே. நானும் வந்து மாதங்கள் ஆகிவிட்டது. இப்போதும் இடையிடையே நேரம் கிடைக்கும் போது வரலாம் என்றிருக்கிறேன்.
தொடருங்கள் அம்மா
கீதா
3.
chollukireen | 11:12 முப இல் ஒக்ரோபர் 29, 2020
கீதா இது நான்கு வருஷங்களுக்கு முன்பு எழுதிய பதிவுகள்தான். வாராவாரம் செவ்வாய்க்கிழமை மறு பவுதிசெய்கிறேன்.. உங்கள் அபிமான வார்த்தைகள் நான் எங்கோ போய்விடடேன்.! பதிவு எழுதும் முறையே மாறிவிட்டது பிளாகரிலும், வேர்ட் பிரஸ்ஸிலும். எனக்கு எதுவும் புரியவில்லை.. நிறைய மருந்துகளின் துணை தேவை இருப்பதால் பல அ ஸௌகரியங்கள். அதில் ஒன்று படபடப்பு. எல்லாம் மறந்து விட்டமாதிரி உணர்வு. மறந்தும் விட்டது. உனனுடைய பழைய நினைவுகளும் படிக்க ஆனந்தம் எனக்கு. எழுத சிறிதளவு ஞாபகம் வந் ததே சிறிதளவு ஆறுதல் எனக்கு. எல்லோருடைய வலைப்பூவிற்கும் தொடர்பு எப்படிக் கேட்பது ? இது பெரிய கேள்விக்குறி இப்போது. மிகக நன்றி. அன்பிற்கு வணக்கம். அன்புடன்
4.
thulasithillaiakathu | 1:23 பிப இல் ஒக்ரோபர் 29, 2020
அம்மா உங்கள் உடல்நிலை பற்றி புரிகிறது. மீள் பதிவாக இருந்தாலும் எனக்குப் புதிதுதான் அம்மா. ஆமாம் அம்மா ப்ளாகர் கொஞ்சம் மாறியிருக்கிறது.
மறந்துவிட்டது என்று நினைக்க வேண்டாம் அம்மா. நீங்கள் முடிந்த போது எழுதினால் அதெல்லாம் சரியாகிவிடும். மனதில் தெம்பும் வரும்.
உனனுடைய பழைய நினைவுகளும் படிக்க ஆனந்தம் எனக்கு. //
மிக்க மிக்க நன்றி அம்மா.
எழுத சிறிதளவு ஞாபகம் வந் ததே சிறிதளவு ஆறுதல் எனக்கு.//
எங்களுக்கும் மிகுந்த சந்தோஷம். இப்படி உங்களுக்கு மனதில் நினைவு வருவதை கொஞ்சமாகவேனும் எழுதுங்கள். போதும். அதுவே பெரிய ஆறுதல் தரும் உங்களுக்கு.
// எல்லோருடைய வலைப்பூவிற்கும் தொடர்பு எப்படிக் கேட்பது ? இது பெரிய கேள்விக்குறி இப்போது. //
அம்மா அதெல்லாம் பரவாயில்லை. நாங்கள் இங்கு வருகிறோம் அம்மா. அதுதானே முறை. பெரியவர்களைச் சிறியவர்கள்தானே வந்து பார்க்க வேண்டும். எனவே நாங்களே இங்கு வருகிறோம். நீங்கள் இங்கு எழுதினாலே சந்தோஷம் தான். நான் முகநூலில் இல்லை நீங்கள் அங்கு பகிர்ந்திருந்ததாக கீதாக்கா சொன்னார்கள்.
உங்களுக்காகப் பிரார்த்தனைகள் எப்போதும் உண்டு அம்மா.
உடல் நலமும் பார்த்துக் கொள்ளுங்கள். எங்கள் அன்பு உங்களுக்கு எப்போதும் உண்டு.
கீதா
5.
நெல்லைத்தமிழன் | 1:38 பிப இல் ஒக்ரோபர் 29, 2020
அடடா…. உங்கள் இடுகையை ரொம்ப மாதங்களுக்குப் பிறகு படிக்க சந்தோஷமாக இருக்கு. தொடர்ந்து பதிவு பண்ணுங்கோ.
தயிர்க்காரி – நீங்க என்னை என் சிறு வயதிற்குக் கொண்டு சென்றுவிட்டீர்கள். நாங்க வருட விடுமுறைக்கு எல்லோரும் திருநெல்வேலியில் இருக்கும் கீழநத்தம் கிராமத்துக்குச் சென்றுவிடுவோம். காலையில் தயிர்க்காரி, சரட்டை கரண்டில தயிர் விற்பாங்க. நாங்க சின்னப் பசங்க என்பதால் எங்களுக்கு ஒரு கரண்டி தயிர் தனியா தருவாங்க.
6.
chollukireen | 11:17 முப இல் ஒக்ரோபர் 30, 2020
நான் உங்களுக்கு அனுப்பிய மெயிலில் மறு பதிவைப்பற்றி எழுதியதாக ஞாபகம். தயிர்க்காரியைப் பற்றிதான் எத்தெத்தனை ஞாபகங்கள். எபபோதுமே அதிகம் பின்னூட்டங்கள் வராது எனக்கு. நான் அஙகு போனால் எனக்கும் வரும். நீங்கள் பின்னூட்டமிட்டது மிக்க ஸந்தோஷம். கீழாநத்தம் நல்ல ஊர்.அன்புடன்
7.
நெல்லைத்தமிழன் | 1:39 பிப இல் ஒக்ரோபர் 29, 2020
அப்போல்லாம் பரோபகாரம் ரொம்பவே மக்கள் மனதில் அதிகமாகவே இருந்தது. அதெல்லாம் ஒரு காலம்.
8.
chollukireen | 11:26 முப இல் ஒக்ரோபர் 30, 2020
பரோபகாரம்இதம் சரீரம் என்று சொல்வார்கள். இப்போது முகம் கொடுத்து பேசினால் எனன உபகாரம் செய்யவேண்டி இருக்குமோ என்று அதற்கும் பயப்படும் காலம். எல்லாம் ஸகஜமாகிவிட்டது. அன்புடன்