தொட்டில்–7
நவம்பர் 3, 2020 at 3:18 முப 7 பின்னூட்டங்கள்
தொட்டில் ஏழு பாட்டியின் குணமும், அதன் மணமுமாக இருக்கும். ஆழ்ந்து பார்ப்போமாகில் எவ்வளவோ விஷயங்கள் மனதில்த் தோன்றும். முதியோர் இல்லங்கள் இல்லாதக் காலமது. வாங்கோ! பின்னூட்டத்தில்ப் பேசலாம். அன்புடன்
ஒரு குடும்பம் வறுமை. ஸரியானபடி நிரந்தர வேலை இல்லை. பாட்டி மாப்பிள்ளை தாசில்தார். இவர் நல்லபடி வேலை செய்து குடும்பம் நடத்தவில்லை என்று தம்பியைக் கோபிப்பார். ஒத்தாசைகள் எவ்வளவு செய்தாலும், யாரும் கோபிப்பதை ஏற்றுக் கொள்வது கஷ்டம். உறவு முறைகள் ஸரியானபடி இல்லை. இந்த வேளையில் தம்பி பிள்ளையை எங்கள் ஊரில் படிக்க அழைத்து வந்திருந்தார்.
இதனால்மனத்தாங்கல்கள்வரும்.ஸம்ஸாரி.தாய்மார்களுக்குத்தான் கஷ்டம் புரியும். ஆண்களுக்கு சற்று வீராப்புதான் ஏற்படும். சம்பாதிக்கும் கர்வம் நம்மைச் சொல்கிரார்கள் என்ற எண்ணம் மேலோங்கும். அப்படியும், இப்படியுமாக காலம் தன்போக்கில்ச் சென்று கொண்டிருந்தது.
பாட்டி ஒவ்வொரு முறை பெண்ணிற்குச் சாப்பாடு போடும் போதும் , அம்மா அந்தக் கோடியில் ஊறுகாய் போட்டிருக்கிறேன், பொரித்த அப்பளாம் சின்னத் தட்டில் பக்கத்தில் வைத்திருக்கிறேன். நெய்யும் குத்தியாச்சு சாதம் திட்டமாகப் போட்டிருக்கேன். கலந்து கொள். பிடிச்சா இன்னு கொஞ்ஜம் சாதம் போட்டு குழம்பு விடறேன்.
அம்மா நீ சாப்டியா? நான் என்னை கவனிச்சுப்பேன். உனக்கு ஒண்ணும் என்னால் செய்ய முடியலேன்னு கஷ்டமா இருக்கு. நான் என்ன பாவம் பண்ணியிருப்பேன்?
நீ ஒண்ணும் பண்ணலே. உன்னை இப்படி பார்க்கும் நான்தான் என்ன பண்ணினேனோ?சாப்பிடம்மா. இப்போ இன்ன மாதிரி பேசறதே தப்பு. பார்.இன்னும் கொஞ்ஜம் குழம்பு விடட்டா?
போரும்மா. அம்ருதமா இருக்கு உன் சாப்பாடு.கண்ணில் ஜலம் வந்துடறது. கொஞ்சம் காரம். அதான் கண்ணுலே தண்ணி.ஒருவருக்கொருவர் ஸமாளிப்பு.
நான் இருக்கேன் பரவாயில்லை.எனக்கப்புறம் இவள் தட்டை கவனித்து யார்சாப்பாடு போடப்போறா? மாப்பிள்ளைக்கும் ஒண்ணு…
View original post 508 more words
Entry filed under: Uncategorized.
7 பின்னூட்டங்கள் Add your own
chollukireen க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
athiramiya | 5:26 பிப இல் நவம்பர் 3, 2020
தொட்டில் அழகாக இருக்கிறது.. அருமையாகச் செல்கிறது தொடர்…
2.
chollukireen | 11:09 முப இல் நவம்பர் 4, 2020
நிதானமாக ஆடுகிறது. அருமையாக. என்றதற்கு மிகவும் ஸந்தோஷம். அன்புடன்
3.
நெல்லைத்தமிழன் | 5:29 முப இல் நவம்பர் 4, 2020
கொடிது கொடிது வறுமை கொடிது…
அதுலயும் உறவினர்களை நம்பி அவங்க வீட்டில் இருக்கும் நிலைமை வந்தால் மரியாதையும் இருக்காது, எதையும் கேட்கவும் (இன்னும் கொஞ்சம் ஊறுகாய் வேணும்) தைரியம் இருக்காது, வெட்கம் பிடுங்கித் தின்கும்.
ஆனா காமாட்சியம்மா..என் அனுபவத்தில் பார்த்தது, இளமையில் கஷ்டப்பட்டால், வேலை மற்றும் சம்பாத்தியம் நன்றாக அமைந்துவிடும். இளமையில் ரொம்பவே ஆடம்பரமான வாழ்க்கை இருந்தால், திருமணத்துக்குப் பிறகு கொஞ்சம் கஷ்ட ஜீவனமாக இருக்கும்.
4.
thulasithillaiakathu | 6:52 முப இல் நவம்பர் 4, 2020
என் அனுபவத்தில் பார்த்தது, இளமையில் கஷ்டப்பட்டால், வேலை மற்றும் சம்பாத்தியம் நன்றாக அமைந்துவிடும். //
இல்லை நெல்லை எல்லோருக்கும் அப்படி அமைவதில்லை. என் அனுபவம் வேறு
கீதா
5.
chollukireen | 11:21 முப இல் நவம்பர் 4, 2020
ஸரியாகச் சொன்னீர்கள்.உதவி பெறாமல் அதுவும் உறவினர்களின் உதவி இல்லாமல் முன்னுக்கு வருபவர்கள்தான் அதிகம். நல்ல நிலையில் வந்த பிறகு யாவரும் கொண்டாடுவார்கள். எதிர்நிலைமை எதிராகத்தான் அமையும். முப்பது வருஷம் வாழ்ந்தவர்களும் இல்லை. முப்பது வருஷம் தாழ்ந்தவர்களும் இல்லை. நிலைமை மாறிக்கொண்டே வரும். இதுதான் பார்த்ததில் என் வயதிற்குக் கண்ட நிதர்சனமான உண்மை. நன்றி அன்புடன்
6.
கீதா | 6:51 முப இல் நவம்பர் 4, 2020
யாரும் கோபிப்பதை ஏற்றுக் கொள்வது கஷ்டம். உறவு முறைகள் ஸரியானபடி இல்லை. //
சரியாகச் சொன்னீர்கள் அம்மா. கோபம் உறவுகளைப் பிரித்துவிடும். அதுவும் அளவுக்கு மீறிய கோபம். எனக்கு அனுபவம் உண்டு. அதிலிருந்து நான் கற்ற பாடங்கள் ஏராளம். இதோ இன்னும் பாடங்கள் நிறையவே கிடைக்கிறது.
சிறு வயதில் ஏழ்மையில் ஒரு வரை அண்டி வாழ்வது என்பது எத்தனை கஷ்டம் என்பதும் அனுபவம் உண்டு. அதுவும் பிறந்த வீட்டில் இருப்பது.
அனுபவங்கள் எனக்குப் பல வைராக்கியங்களை ஏற்படுத்தியது.
தொடர் பல பாடங்களைத் தருகிறது காமாட்சிம்மா. சில நினைவுகளையும்….நினைவுகள் நிகழ்வுகளாக இருந்தபோது கசந்தது ஆனால் இப்போது அது நினைவுகளாகிப் பாடமாகியதால் நன்றி சொல்லும் சுவையும் கூடவே.
தொடர்கிறேன்.
கீதா
7.
chollukireen | 11:34 முப இல் நவம்பர் 4, 2020
ஓரளவு வாழ்க்கை ஸுகமாகப் போவதென்பதுதான் எல்லோரும் விரும்புவது. அது அமையாதபோது இம்மாதிரி எல்லாம் நேர்ந்து விடுகிறது. உதவி பெற்றோமானாலும் ஸமயமறிந்து பலமடங்காக திருப்பி விடுவோம். நாங்கள் செய்தோம் என்று சொல்லுவார்களே தவிர, ஸமயத்தில் அவர்கள் திருப்பி விட்டார்கள் என்ற நல்லெண்ணம் ஏற்படாது. அதுதான் அவ்விடத்திய அழகு. காலச்சுழற்சியில் எதுவும் மாறலாம். உன்னுடைய அனுபவங்களும் தனி ரகமாக இருக்கிறது. உன் வரவிற்கு ஸந்தோஷம். அன்புடன் தொடரவும்