நேபாளத்தில் தீபாவளி
நவம்பர் 11, 2020 at 12:52 பிப 3 பின்னூட்டங்கள்
எட்டு வருஷங்களுக்கு முன்னர் எழுதிய பதிவு இது. தீபாவளி ஸமயத்தில் ஞாபகம் வந்தது . ஸேல் ரொட்டியின் தீபாவளி இது. அன்புடன்
குளிர் ஆரம்பித்து விட்டாலும் கூட தீபாவளியை ஐந்து நாட்கள்
பலவித பெயர்களைச் சொல்லிக் கொண்டாடுவார்கள்.நேபாளத்தில்
கடவுள் பக்தி அதிகம். முன்பு அரசாட்சியாக இருந்த போது, நவராத்திரி
தொடங்கி, தீபாவளி முடிந்து நான்கந்து நாட்கள் வரை அதாவது ஒரு
மாதத்திற்கதிகமாக ஸ்கூலிற்கு விடுமுறை விட்டுவிடுவார்கள்.
எல்லா பண்டிகைகளின் போதும் டீக்கா வாங்குவது, அதாவது பெறியவர்களிடம்
ஆசி வாங்கி அவர்கள் கொடுக்கும் ரக்ஷையை நெற்றியிலிட்டுக் கொள்வது
அவர்களாகவே நெற்றியிலிட்டு ஆசீர்வதிப்பது முக்கியமான நிகழ்ச்சியாகும்.
டீக்கா என்பது சிறிது தயிரில் அரிசியை ஊறவைத்து அதனுடன் செந்தூர்க்
குங்குமம் சேர்த்து கெட்டியாகக் கலந்த கலவை. நெற்றியிலிட்டால் நன்றாக
ஒட்டிக்கொண்டு பளிச்சென்று பார்வையாக இருக்கும்.
ஒரு ரூபாயளவிற்கு இதை நெற்றியிலிட்டு வயதில்ப் பெறியவர்கள்
சிறியவர்களுக்கு ஆசி வழங்குவார்கள். தசராவில் இந்த ஆசியை
வாங்க எங்கிருந்தாலும் வீட்டுப் பெறியவர்களிடம் வந்து சேர்ந்து
விடுவார்கள். திஹார் என்றால் நேபாலியில் பண்டிகை என்று அர்த்தம்.
தீபாவளியை ஐப்பசி அமாவாஸையன்று கொண்டாடுகிறார்கள்.
அன்று தீவாலி லக்ஷிம்பூஜாஎன்பார்கள், அன்றே காய் பூஜாஅதாவது
பசுமாட்டிற்கு பூஜையும் செய்வார்கள்.
அமாவாஸைக்கு முதன் வரும் மூன்று நாட்களில் முதல் நாள்
கௌவா பூஜா. காக்கையை கவுரவித்து அன்னமிட்டு பூஜை.
சுற்றுப்புற சூழலுக்கு நன்மை செய்வதைப் போற்றி நடக்கிறது.
மறுநாள் குகுர் அதாவது வீட்டைக் கார்க்கும்,நன்றியுள்ள நாயைக்
கவுரவித்து, பைரவர் எனப்போற்றி நாய்க்கு மாலை அணிவித்து,
திலகமிட்டு, நல்ல சாப்பாடு போட்டு அதைக் கவுரவிக்கிறார்கள்.
லக்ஷ்மி பூஜை பெறிய அளவில் …
View original post 295 more words
Entry filed under: Uncategorized.
3 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
நெல்லைத்தமிழன் | 2:09 பிப இல் நவம்பர் 12, 2020
நேபாளில் தீபாவளி கொண்டாடும் முறையை நல்லாச் சொல்லியிருக்கீங்க.
காலம் அங்க ரொம்பவே மாறிவிட்டது அல்லவா? அது எனக்கு வருத்தம்தான் (இந்து ராஜ்ஜியம் போய் செக்யூலார் என்று வந்தது… போகப் போக நேபாளின் தனித்துவம் போய் சீனா எடுத்துக்கொண்டாலும் ஆச்சர்யம் இல்லை)
பசுபதிநாத் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்திருக்கிறேன் 2008ல். அங்கேயே சாளக்கிராமமும் மற்றும் சில மணி மாலைகளும் வாங்கியிருக்கிறேன்.
2.
chollukireen | 11:05 முப இல் நவம்பர் 15, 2020
இப்போது விதி முறைகளிலும் மாற்றம் வந்து விட்டது. இரண்டு வருஷங்களுக்கு முன் நானும் போய்விட்டு வந்தேன். மறக்க முடியாத ட்ரிப்பாக இப்போது நினைக்கும்படி ஆகிவிட்டது. அன்புடன்
3.
thulasithillaiakathu | 7:24 முப இல் நவம்பர் 24, 2020
நேபாள தீபாவளியை தெரிந்து கொண்டேன் காமாட்சிம்மா. கிட்டத்தட்ட எல்லாமே அடிப்படையில் ஒன்றுதான் போல. லக்ஷ்மி பூஜா, கோ பூஜா என்று எல்லாமே. ஊருக்கு ஊர் அங்குள்ள சூழல்படி மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் அடிப்படையில் ஒன்று போல இருக்கு..நாம் இங்கு அட்சதை நெய்யில் அரிசியை கலப்பது அங்கு அதை தயிரில் கலந்து செந்தூர் கலந்து என்று இருக்கு
கீதா