ஸேல் ரொட்டி
நவம்பர் 11, 2020 at 12:39 பிப 11 பின்னூட்டங்கள்
இந்த பக்ஷணம் நேபாலில் செய்யப் படுவது. தீபாவளி நேபாலத்தில் என்று எட்டு வருஷங்களுககு முன்பான என் பதிவினை மீள் பதிவு செய்யும் முன்னர், அந்த சிற்றுண்டியைப் பற்றி ஒரு குறிப்பு எழுத வேண்டும் என்று தோன்றியது.
நம்முடைய அப்பம் போன்ற ஒரு ருசியுடைய வேறு உருவத்தில் இந்த தின் பண்டம். இது அவர்களுக்கு மிகவும் முக்கியமானது. எவ்வளவு செய்வார்கள் தெரியுமா? நிறைய செய்து யாவருக்கும் கொடுப்பார்கள். லக்ஷ்மி பூஜைக்கு மிகவும் அவசியமாக இது வேண்டும். மாவைக் கையில் எடுத்தே இந்த வட்டத்தைச் சுற்றி விடுவார்கள்.
காலி பால்கவரில் ஒரு துளை போட்டும் ஜிலேபி சுற்றுவது போல மாவை அதில் நிரப்பியும் செய்யலாம். பார்க்கலாம்.

வேண்டியவைகள்.1-
ஒரு டம்ளர் -பச்சரிசியை நன்றாக ஊறவைத்து வடிக்கட்டி கரகர பதத்தில் மாவாக பொடித்துக் கொள்ளவும் அடுத்து நான்கில் ஒரு பாகமாக கால் டம்ளர் சர்க்கரை எடுத்துக் கொள்ளவும்.ஒரு
டேபிள்ஸ்பூன் நெய்,ஒருசிட்டிகை ஏலப்பொடி ,ஒரு சிட்டிகை சமையல் ஸோடாஉப்பு ,துளி உப்பு சேர்த்து, அகன்ற பாத்திரத்தில் யாவையும் ஒன்றாகக் கலந்து, பாலை விட்டு நன்றாகப் பிசையவும் . ஒரு மணி நேரம் ஊறவிடவும் பிறகு இட்லி மாவு பதத்திற்கு அதை கறைத்துக் கொண்டு தயாரிக்க வேண்டியதுதான்.
வாயகன்ற வாணலியில் எண்ணெயைக் காயவைத்து டோனட் வடிவததில் மாவை எண்ணெயில் வேக வைத்து ,திருப்பிவிட்டு சிவப்பாக எடுபபார்கள். சும்மா ஓரளவு புரிந்தால் ஸரி . யாரும் செய்யப் போவதில்லை. நம்முடைய இனிப்புக்களை விடவா? இதைப் படித்து விட்டு என் மீள் பதிவையும் பாருங்கள்
.எல்லோருக்கும் வாழ்த்துகள். தீபாவளியன்று வாழ்த்த வருகிறேன். அன்புடன்.
Entry filed under: Uncategorized.
11 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
நெல்லைத்தமிழன் | 2:06 பிப இல் நவம்பர் 12, 2020
என்ன இப்படிச் சொல்லிட்டீங்க? செய்து பார்க்கலாம் என்று நினைத்துத்தான் படித்தேன்.
இதனை எண்ணெயில் நேரடியாக ஜிலேபி போல (ஆனால் வட்டமாக) பிழியணும் போலிருக்கு. அப்படீன்னா எண்ணெய் ரொம்ப சூடா இருக்கக்கூடாது.
பார்க்க ஜிலேபியின் வேறு வடிவம் போலத் தோணுதோ? (ஆனால் அரிசியில் மட்டும். உளுந்து இல்லை)
2.
Geetha Sambasivam | 8:07 முப இல் நவம்பர் 13, 2020
ஸேல் ரொட்டி நன்றாக இருக்கும் போல! செய்து பார்க்கலாம். ஆனால் இனிப்பு அதுவும் சர்க்கரை இருப்பதால் அவர் சாப்பிட மாட்டார். 😦 ஒரு தரம் எப்போவானும் முயற்சி செய்து பார்க்கலாம்.
3.
chollukireen | 11:59 முப இல் நவம்பர் 14, 2020
பாருங்கள். அதற்குள் வீடியோ போட முயற்சிக்கிறேன். அன்படன்
4.
chollukireen | 12:00 பிப இல் நவம்பர் 14, 2020
அன்புடன் ஸரியாக வாசிக்கவும்.
5.
chollukireen | 11:57 முப இல் நவம்பர் 14, 2020
எண்ணெய்க்குப் பதம் ஸரியாகச் சொன்னீர்கள்.என்னுடைய மருமகள் செய்த இதன் வீடியோ அனுப்பி இருக்கிராள். அப்புறமாகப் போஸ்ட் செய்கிறேன். அரிசியில் மட்டுமே செய்வது. மிக்க நன்றி அன்புடன்
6.
கீதா | 6:41 முப இல் நவம்பர் 24, 2020
அம்மா என்ன இப்படிச் சொல்லிட்டீங்க நான் எல்லாம் செய்து பார்த்துவிடுவேன். என் மகனும் இதைப் பத்தி சொன்னான். அவன் செய்ததை. என்னையும் செய்யச் சொன்னான். தீபாவளிக்குச் செய்ய முடியாமல் போய்விட்டது. இங்கு வந்தா நீங்களும் போட்டுருக்கீங்க
இதுவரை இது செய்ததில்லை. செய்து பார்த்துவிடுகிறென். நல்லாருக்கு.
கிட்டத்தட்ட ஜிலேபி ஆனால் அரிசி மாவில்.
கண்டிப்பா செய்து பார்க்கணும்.
கீதா
7.
chollukireen | 11:28 முப இல் நவம்பர் 24, 2020
ஜிலேபி சிறிய வடிவம். இது பெரிய வடிவம்.செய்து பார். அப்பம் போன்ற ருசி என்று எனக்குத் தோன்றும்.பருமனானது. அன்புடன்
8.
thulasithillaiakathu | 7:10 முப இல் நவம்பர் 24, 2020
கர்நாடகா கொடுபளே போலவும் இருக்கு அம்மா
கீதா
9.
chollukireen | 11:32 முப இல் நவம்பர் 24, 2020
ஆமாம். நேபாலத்தவர்களின் ரஸித்துச் சாப்பிடும் தின் பண்டம். வெயிலில் உட்கார்ந்து கொண்டு காய்கறிக் கூட்டுடனும் ரஸிப்பார்கள். அன்புடன்
10.
thulasithillaiakathu | 7:17 முப இல் நவம்பர் 24, 2020
பொதுவாக நேபாளி உணவு வகைகள் பார்த்தால் திபெத் இந்தியக் கூட்டுக்கலவையாக இருப்பதாகப்படும் எனக்கு.
கீதா
11.
chollukireen | 11:34 முப இல் நவம்பர் 24, 2020
நல்ல அனுபவம் கீதா உங்களுக்கு. நன்றி அன்புடன்