தொட்டில்—9
நவம்பர் 17, 2020 at 3:39 முப 4 பின்னூட்டங்கள்
இந்தத் தொட்டில் எவ்வெப்படி எந்தெந்த விதத்தில் போய்க்கொண்டு ஆடத்துவங்கியது? பாருங்கள் அன்புடன்
வேலைக்குப் போக ஆரம்பிக்கு முன்னர் வீட்டில் இந்த சண்டை சச்சரவுகள் எல்லாம் பூணூலை முன்னிறுத்தியே ஆரம்பமாகியுள்ளது. உண்மையில் பூணூலில் ஒருவருக்கும் அக்கறை இல்லை. சொத்து. நம் ஏழ்மை.
இனி இவர்கள் இதைப்பற்றி பேச விடாமல் நாம் அதிரடியாக ஏதாவது செய்ய வேண்டும். மஹா பெரியவாள் பிறந்த ஊர் அருகிலுள்ளது. அங்கும் ஒரு பெரியவர் ஏழைப் பையன்களுக்குப் பூணூல் போட்டு வைக்கிரார். அவ்விடம் போய் நாம் குடும்ப நிலவரத்தைச் சொல்லிக் கேட்போம்.
யாருமே வேண்டாம். அவர்களாகவே போட்டு விடட்டும். பிறகு இந்தப் பேச்சே வராது. முடிவெடுத்து விட்டனர்.
நிலம் நீச்சு மேற்பார்வை பார்க்க ஏதோ வேலையும் கிடைத்தது. வீட்டில் இரண்டு சமையலும். பெரிம்மாவை திட்டுதலுமாக எப்போதும் சச்சரவு நீடித்தது.
தியாகு ஒருநாள் பூணூல் போட்டு வைக்கும் பெரியவரைப் பார்த்து பேசிவிட்டு வந்தான். பெற்றவர்கள் வராமல் செய்வதற்கு மறுப்பு தெரிவித்தாலும் வயதையும் வீட்டு சூழ்நிலையையும் உத்தேசித்து நல்ல நாள் ஒன்று குறிப்பிட்டு சொல்லி விட்டார்.
விடியற்காலமே நிலத்தில் சில ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போன இரண்டு பிள்ளைகளும் புது வேஷ்டியும், பூணலும், மாலையும் கழுத்துமாக வீட்டிற்கு வந்து சாயங்காலம் அம்மாவிற்கு நமஸ்காரம் செய்கிரார்கள். என்னடா இது தாய் விக்கித்துப் போய் ஒரு கணம் அப்படியே நிற்கிறாள். அடக்க முடியவில்லை அழுகையை. என்ன அம்மாடா நான். இன்னும் என்ன வெல்லாம் ஆகப்போகிறதோ?
அந்த மனுஷன் கத்துவாரே. நன்னா இருங்கடா. காலம் விடியணும். கதறல்தான்.
View original post 364 more words
Entry filed under: Uncategorized.
4 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
நெல்லைத்தமிழன் | 3:25 பிப இல் நவம்பர் 18, 2020
பலவித உணர்வலைகளை எழுப்புகிறது.
ஏழ்மையில் இருந்துவிட்டால் என்ன என்ன பிரச்சனைகள் வந்துவிடுகிறது. வயிற்றுப்பாட்டே பெரும்பாடாக இருக்கும்போது, வேறு ஏதேனும் முக்கியமாகப் படுமா?
சாக்கடையில் பணம் விழுந்துவிட்டால் எடுக்காமல் இருக்க முடியுமா? அடிப்படைத் தேவைகள்தான் முன்னுரிமை பெறுகிறதல்லவா?
சாப்பாடே பெரும்பாடாக இருந்த வைணவ குடும்பத்தில் (எங்கள் கிராமத்தில்) 9ம் வகுப்புக்கு மேல் பையனைப் படிக்க அனுப்புவதைவிட, அல்வா கிண்டும் வேலைக்கு அனுப்பினார்கள், கோவிலில் மடப்பள்ளி வேலை இன்ன பிற வேலைகளுக்கு அனுப்பினார்கள்.
கடவுள் அடிப்படை வசதிகளைக் கொடுக்காவிட்டால், மற்ற எதுதான் முக்கியமாகப்படும்?
2.
chollukireen | 12:16 பிப இல் நவம்பர் 19, 2020
அதிர்ஷ்ட்டம் இருந்தால், நல்ல காலமும் இருந்தால், அதைக்கொண்டே முன்னுக்கு வந்தவர்களும் இருக்கிறார்கள். பட்ட கஷ்டம் என்னவோ மாறப்போவதில்லை. இது பலவிதநிலைகளைக் கொண்டதாக அமைந்து விட்டது. இது நேற்றைய,முந்தாநாள் நிகழ்வு இல்லை. இந்த நிகழ்வுகளும் பழைய கதைதான். என்னுடைய கதையின் நிகழ்வுகளின் ஊர்கதைகளிது. இந்த பிராமண குடும்பங்களில் வசதி இல்லாவிடில் அதோகதிதான். நீங்கள் எழுதி இருக்கும் ஸம்பவமும் அப்படிதான்.சட்டென்று சூடு பிடிப்பது பரிசாரகம்தான் எந்த நாளிலும். நன்றி அன்புடன்
3.
thulasithillaiakathu | 7:28 முப இல் நவம்பர் 24, 2020
வறுமையில் இப்படித்தான் நடக்கும் இல்லையா அம்மா. இப்போதும் கூட இது போன்றவை நடக்கிறதுதானே. அடிப்படைத் தேவைகளுக்கே வழியில்லாதப்ப மற்றதெல்லாம் எப்படி நடக்கும்?
கீதா
4.
chollukireen | 12:23 பிப இல் நவம்பர் 24, 2020
காரமம் வறுமைதான் கரெக்ட் அன்புடன்