தொட்டில்—10
நவம்பர் 24, 2020 at 3:27 முப 7 பின்னூட்டங்கள்
மூன்று குடும்பங்களின் போக்கைப் பின்னிக் கொடுத்ததொட்டிலின் ஸம்பவஙகள் நீண்டுமுடிந்தது. சோகங்கள் அதிகம். பிராப்தம் இப்படியும் இருந்தது
காலங்கள் வேகமாக இல்லாவிட்டாலும் அதன் போக்கில் சுழன்றுகொண்டுதானிருந்தது.
வயதாகிவிட்டது. யாருக்காக இன்னும் ஸொத்து சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் ஏற்படுவதில்லை. நான் என்ன எனக்காகவா சேர்க்கிறேன் உங்கள் எல்லோருக்கும்தானே என்ற சொல்தான் யாவரின் தாரக மந்திரமாகவும் இருந்தது.
மெள்ள மெள்ள நம் பையனில் ஒருவனை ஸ்வீகாரம் கொடுக்க நான் முடிவு பண்ணி விட்டேன். இதில் யாரும் ஆக்ஷேபணை சொல்ல நான் அனுமதிக்க மாட்டேன்.என்ற பாணியில் போர்க்கொடி உயரலாயிற்று.
நான் ஸம்மதிக்கவே மாட்டேன். நான் பெற்ற பிள்ளைகள் எனக்குதான். அவர்கள் முன்னுக்கு வந்திருக்கிரார்கள். இருப்பது போதும்.நான் ஸம்மதிக்கமாட்டேன். பதில் பேசியாயிற்று.
போ. இந்த வீட்டை விட்டு. எங்கு வேண்டுமானாலும்போ. என் பேச்சு கேளாது பதில் சொல்ல உனக்கு என்ன தைரியம். பேச்சு வலுத்து, அடி அமக்களத்துடன் வெளியே மனைவியைத் தள்ளும்படியான நிலைக்கு உச்ச கட்டங்கள் நடைபெற ஆரம்பித்து விட்டது.
வீட்டைவிட்டுப் போகும் வயதா? ஆக்கினைகளுக்குக் கட்டுப்பட்டே காலம் கடத்தியவள். ஊர் சிரிக்கும். நாலுபேர் இரண்டு பேருக்கும் நீ சொல்வதுதான்ஸரி என்பார்கள். மூன்று தலைமுறைகளை சபித்துக் கொண்டு ஒரு புருஷன். அழலாம் மனதோடு மருகலாம்.
அம்மா படும்பாட்டைப்பார்த்து பிள்ளை எங்காவது சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டால். அவனுக்கும் இஷ்டமில்லை. இரண்டாம் கெட்டான் வயது.
பிள்ளையை என்ன காக்காயா தூக்கிக் கொண்டு போய்விடும்? அவன் என்ன அவர்கள் வீட்டிற்கா போகப் போகிரான்? வாயடைப்பு.நிர்பந்தம். மௌனம்.
இன்னும் எட்டு நாட்கள் இருக்கு. நாள் பார்த்தாகி விட்டது. ஸ்வீகாரம்,பூணூல் இரண்டும்…
View original post 620 more words
Entry filed under: Uncategorized.
7 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
நெல்லைத்தமிழன் | 4:31 முப இல் நவம்பர் 24, 2020
இது பெரும்பாலும் கையறுநிலையில்தான் நடக்கும் என்று நினைக்கிறேன். பையன் நல்லா வாழட்டும் அங்க என்றும் நினைக்கலாம், இல்லை நம்ம அண்ணனுக்காக நாம் இதுகூடச் செய்யக்கூடாதா, நமக்குத்தான் இன்னும் இரண்டு பிள்ளைகள் இருக்கே என்று நினைக்கலாம். தாய்க்குத்தான் மனது ரொம்பவே வேதனைப்படும். பெண்களைக் கேட்டுக்கொண்டா ஆண்கள் குடும்பங்களில் முடிவு செய்வார்கள் என்று கேட்கிறீர்களா? அதுவும் சரிதான்.
2.
chollukireen | 11:49 முப இல் நவம்பர் 24, 2020
அடிமை வாழ்வு இதெல்லாம் நடக்கும் போது. இப்படித்தான் பல மனிதர்கள் இருந்தார்கள் காலம் இப்போது வேறு மாதிரி இல்லையா?
3.
chollukireen | 12:14 பிப இல் நவம்பர் 24, 2020
ஒருஸமயம் இல்லாவிட்டாலும் ஒரு ஸமயம் பிள்ளையின் அன்பைக்கூட அவனிடமிருந்து பெறமுடியாமற் போய்விடுகிறது. புதுசு புதுசாக பாத்திரம் வாங்க நல்ல ஸாமான்களைப் பண்ட மாற்.றுதல் செய்வதைப் போலதான் இது. உன்னுடைய கதைகளையும் முடி. ஸ்வீகாரம் போன பிள்ளை இரண்டு பக்கமும் பூரண அன்பைப் பெறமுடியாமல்த் தவிக்கும் கதைகளும் உண்டு.
சுரங்கமாக ஞாபகங்கள் வத்து கொண்டே இருககும் நன்றி. அன்புடன்
4.
chollukireen | 12:18 பிப இல் நவம்பர் 24, 2020
இது கீதாவின் பின்னூட்டத்தின் மறு மொழி. இப்படி தான்முன் பின் முரண் செய்கிறேன். அன்புடன்
5.
நெல்லைத்தமிழன் | 4:32 முப இல் நவம்பர் 24, 2020
பொதுவா, உனக்குப் பிள்ளை/வாரிசு கிடையாது என்று இறைவன் சொன்னதை, மனிதன் வலுக்கட்டாயமாக மாற்றக்கூடாது என்பது என் அபிப்ராயம். அது பல அனர்த்தங்களை உண்டாக்கும்.
6.
chollukireen | 11:57 முப இல் நவம்பர் 24, 2020
பிள்ளை இல்லாவிட்டால் புத் என்ற நரகத்திற்குப் போய்விடுவார்கள் என்றெல்லாம் சொல்லக் கேட்டிருக்கிறேன். விவரங்கள் அறியாத வயது. இப்போது மட்டும் என்னவா? நீங்கள் சொல்வதை நானும் ஆமோதிக்கிறேன். வேதவித்துகள் கூட இந்த நரக ஸமாசாரத்தைச் சொல்லுவார்கள். ஆச்சரியம். அவர்களின் நம்பிக்கை அதுவோ என்னவோ? நன்றி அன்புடன்
7.
thulasithillaiakathu | 7:35 முப இல் நவம்பர் 24, 2020
வயதாகிவிட்டது. யாருக்காக இன்னும் ஸொத்து சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் ஏற்படுவதில்லை. நான் என்ன எனக்காகவா சேர்க்கிறேன் உங்கள் எல்லோருக்கும்தானே என்ற சொல்தான் யாவரின் தாரக மந்திரமாகவும் இருந்தது.//
இது இப்போதும் பொருந்தும் அம்மா.
தத்துக் கொடுப்பது என்பது ஒரு தாய்க்கு மிக மிக வேதனை தரும் விஷயம். அத்தனைக்கு அவர்களின் வறுமை மீறிவிட்டதோ? பாவம் அந்தப் பிள்ளைக்கும் உணர்வுகள் இருக்கும்தானே?
எனக்குத் தெரிந்தே இப்படித் தத்துக் கொடுத்து தத்து எடுத்தவர்களும் சரி கொடுத்தவர்களும் சரி பின்னாளில் பல இன்னல்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள். அதுவும் தத்து எடுத்தவர்களுக்குச் சொத்து இருந்துவிட்டால்….அல்லது தத்து கொடுத்தவர்கள் (தத்து கொடுத்த காரணம் வறுமை அல்லாது பிற காரணங்களுக்காக) தங்கள் சொத்தை பின்னாளில் பிரிக்கும் போது…ஏற்படும் விபரீதங்களும் நடக்கிறது. இந்த இரண்டையும் வைத்து இரு கதைகளாக என்னிடம் இருக்கு ஆனால் இன்னும் முழுமை பெறாமல் வழக்கம் போல்..ஹா ஹா
கீதா