தொட்டில்—13
திசெம்பர் 15, 2020 at 3:40 முப 6 பின்னூட்டங்கள்
தொட்டில் 13 முததாய்ப்பு வைத்தமாதிரி நிகழ்ச்சிகள். அரசுக்கல்யாணம்,தொட்டில்கள் என பல நிகழ்ச்சிகள். அழகுதான். பாருங்கள். வாருங்கள். அன்புடன்
முகூர்த்தம் பாத்தாச்சு. வெளியில் சொல்லவில்லை. ராஜுவின் சித்திதானே ஸூத்ரதாரி.
முகூர்த்தம் பார்த்த தினத்தில்தான் குளத்தங்கரையிலுள்ள வேம்பிற்கும்,அரசிற்கும் கல்யாணம். மரங்கள்தான் அவைகள். வனபோஜனம். ஊரே கோலாகலமாக இருக்கும். குளக்கரையில் விவாகம் முடிந்த பின்னர் ஊரில் பெரிய வீட்டில் சாப்பாடு. வைதீகர்கள் அந்த வரும்படியில் இருப்பார்களே!
இம்மாதிரி நல்ல காரியங்கள் பார்த்துப் பார்த்துச் செய்யும் பாட்டி ஒருவர் இருந்தார்.
அவரிடமே விஷயங்கள் சொன்ன போது, இதுக்கென்ன விசாரம்? முதல் முகூர்த்தம் இதைப் பண்ணிவிட்டு மாலையும் கழுத்துமா அவர்களையும் அழைத்துக் கொண்டு போனால் போயிற்று. மீதி நாள் பூரா இருக்கே. எனக்கும் கொஞ்சம் நல்ல காரியம் செஞ்சோம் என்ற திருப்தியும் கிடைக்கும்.
எல்லா விஷயங்களும்தான் நீ சொல்லி விட்டாய். கார்த்தாலே ஏதாவது காபிடிபன் போரும். சாப்பாடெல்லாம் நான்தான் செய்யறேனே. அப்புறம்அவாளுக்கு என்ன செய்ய இஷ்டமோ தாராளமாக செய்து கொள்ளுங்கோ. மறுநாள்வரை ஜமாய்க்கலாமே.
செலவு செய்ய முடியாத கஷ்டமெல்லாம் இல்லை அவாளுக்கு.
ஸரி எங்காத்திலேயே பந்தல்போட்டு நான் எல்லாம் செய்யறேன்.
மாப்பிள்ளை ராஜு போய் அவன் அண்ணாவிடம் சொன்னான். ஆகாசத்திற்கும்,பூமிக்குமாக குதிக்காத குறைதான்.
பெண் ஒண்ணு இருக்கு, இதெல்லாம் அவசியமா? என்ன இருக்கோ எல்லாவற்றையும் அந்தப் பெண்மேலே எழுதி வைச்சுட்டு அப்புறம் எக்கேடு வேண்டுமானாலும் கெட்டுப்போ. இவ்விடம் வராதே. என்றனராம்.
எழுதி வைத்திருப்பதும்,இதுவரை நான் கொடுத்திருப்பதும் உங்களிடம் இருப்பதை எண்ணிப் பாருங்கள்.இப்போதும் என்னால் முடிந்ததை நான் கொடுப்பேன்.
வருவதும்,வராததும் உங்கள் இஷ்டம் என்று சொல்லி வந்து விட்டான். ஒரே…
View original post 479 more words
Entry filed under: Uncategorized.
6 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
நெல்லைத்தமிழன் | 7:48 முப இல் திசெம்பர் 16, 2020
ஒவ்வொரு வீட்டிலும் எந்த மாதிரியான பிரச்சனைகள் வருது பாருங்க… எப்படியோ ஓரளவு சுபமாக அமைந்ததில் சந்தோஷம்தான்.
அரசமரக் கல்யாணம். கேள்விப்பட்டிருக்கேன்.
வாழும் காலம் நூறைத் தாண்டாது. அதற்குள்தான் எத்தனை விசாரங்கள், மனக் கலக்கங்கள், தவறுகள்..
2.
chollukireen | 11:10 முப இல் திசெம்பர் 16, 2020
சுபமாக அமைந்து விட்டால் பரவாயில்லை. நடுவில்தான் பிரச்னைகளே. அரசமரக் கல்யாணம் ஆனால்தான் அந்த மரத்திற்கு பூஜை,புனஸ்காரங்கள் எலலாம்..நாகப்பிரதிஷ்டை, அரசப்பிரதக்ஷிணம் எல்லாம். நாங்கள் எல்லாம் எந்த விரதமும் செய்யவில்லை. அதனால் விவரம் தெரிய வாய்பில்லாமல் போய்விட்டது.
வாழ்க்கை நூறு வருஷங்களே அதிகம்தான். நன்றி. அன்புடன்
3.
athiramiya | 11:53 முப இல் திசெம்பர் 18, 2020
காமாட்ஷி அம்மா நலம்தானே. சோட் அண்ட் சுவீட்டாக எழுதுறீங்கள் படிக்க நன்றாக இருக்கிறது, இப்போது தெரியாத..+ நடக்காத பல விஷயங்களை உங்கள் மூலம் அறிய முடிகிறது.
4.
chollukireen | 12:18 பிப இல் திசெம்பர் 18, 2020
அதிரா வாவா என்று வரவேற்கிறேன். மீள் பதிவுதான் இது. இப்படியும் மனதிற்கு உங்களை மாதிரி இரண்டொருவர் மறுமொழி பார்த்து அதிலேயே திருப்திவந்துவிடுகிறது. ஏஞ்சல் பிஸி என்று நினைக்கிறேன். நன்றி உங்களுக்கு அன்புடன்
5.
athiramiya | 6:24 பிப இல் திசெம்பர் 18, 2020
ஏஞ்சல் பிசிதான் இருப்பினும் தூது விடுகிறேன்…