ரஸஎலுமிச்சை
திசெம்பர் 23, 2020 at 11:30 முப 6 பின்னூட்டங்கள்
இந்த இனிப்பு ஊறுகாயையும் ரஸியுங்கள். அன்புடன்
இது உப்பும் தித்திப்பும் காரமும் சேர்ந்த ஊறுகாய் வகை.
எண்ணெய் இல்லாமல் தயாரிப்பது. சூரிய வெளிச்சம் தான்
முக்கிய ஆதாரம்.
எலுமிச்சம் பழம் —–பழுத்ததாக 12
திட்டமாக ருசிக்கேற்ற உப்பு
சர்க்கரை—–சாற்றின் அளவு
மஞ்சள் பொடி—-1 டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி——3 டீஸ்பூன்
செய்முறை—-நன்றாகப் பழுத்த 6 பழங்களைப் பிழிந்து
கொட்டை நீக்கி வாயகன்ற பாட்டிலில் போட்டு சிறிது உப்பு
சேர்க்கவும்.
மிகுதி ஆறு பழங்களை மெல்லிய கீற்றாக நீண்டவாக்கில்
நறுக்கி கொட்டை நீக்கி எடுத்துக் கொள்ளவும்
எலுமிச்சை சாற்றை அளந்து அதே அளவில் சர்க்கரையைச்
சேர்த்து நறுக்கிய மெல்லிய துண்டங்களையும் அதில்
கலந்து ஒரு நாள் ஊறவைத்து நன்றாகக் குலுக்கி விடவும்.
பாட்டிலின் வாயை மெல்லிய வெள்ளைத் துணியினால்க்
கட்டி நல்ல வெய்யிலில் தினமும் வைத்து எடுக்கவும்.
வெய்யிலில் வைப்பதற்கு முன் கிளறிவிடவும்.
பழம் ஊறி சற்று கெட்டியாக பாகு பதத்தில் வறும் வரை
வெய்யிலில் வைத்து பிறகு மிளகாய்ப் பொடியும், மஞ்சள்
பொடியும் சேர்த்துக் கிளறி ஒரு நாள் வெய்யிலில் வைத்து
எடுத்து உபயோகிக்கவும்.
இனிப்பும், காரமும், உப்பும் சேர்ந்த ஆரோக்கியமான
ஊறுகாய் இது. எண்ணெய் அவசியமில்லை.
ஊறும் பழம் அளவிற்கு அதே எண்ணிக்கையின் பழச்சாறு
அவசியம்.
சாற்றின் அளவு சர்க்கரை. குறைந்த அளவு உப்பு காரம்
நம் விருப்ப அளவு. முக்கியமான வஸ்து தொடர்ந்த
வெய்யில். நீண்ட நாட்கள், ஏன் மாதங்கள் கூட கெடாது.
Entry filed under: Uncategorized.
6 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
athiramiya | 9:26 முப இல் திசெம்பர் 24, 2020
வாவ்வ்வ்வ் இது முற்றிலும் புது ரெசிப்பி எனக்கு காமாட்ஷி அம்மா, நான் பெரும்பாலும் ஒவ்வொரு கோடையிலும் ஊறுகாய் செய்வேன், ஆனா இனிப்பு சேர்த்ததில்லை, வரும் வருடம் செய்ய முயற்சிக்கிறேன், இது ஒருவித இலங்கை அச்சாறு போன்ற முறையாக இருக்குது.
இப்படி நாங்கள் கரட், வெங்காயம் போட்டு அச்சாறு செய்வதுண்டு.
2.
chollukireen | 12:19 பிப இல் திசெம்பர் 24, 2020
இதுகூட வடஇந்தியாவில்தான் நான் கற்றுக் கொண்டது. ரொட்டிமுதலானவைகளுடன் சாப்பிட நன்றாக இருக்கிறது. இனிப்பு சுவை பிடித்தவர்கள், அதிக எண்ணெய் வேண்டாதவர்கள் என பல தரத்தவர்களுக்கு் ஒரு விசேஷமான ஒரு ஊறுகாய். காரட்,வெஙகாயத்தில் இனிப்பு சேர்த்தா? அதுவும் ஒரு ருசி. அன்புடன்
3.
நெல்லைத்தமிழன் | 10:34 முப இல் திசெம்பர் 28, 2020
இது நல்லாயிருக்குமான்னு மனசு கேட்குது.
கார எலுமிச்சை ஊறுகாய், சப்பாத்திக்கோ, பிரெட்டுக்கோ, ரவா பொங்கலுக்கோ தொட்டுக்கொள்ள மிக அருமையா இருக்கும் (ஏன் ஊத்தப்பத்துக்குக்கூட).
ஆனால் இனிப்பும் உப்பும் சேர்ந்த ஊறுகாய்?
4.
chollukireen | 11:49 முப இல் திசெம்பர் 28, 2020
காரமும் சேர்ந்துள்ளது.இனிப்பு ஆவக்காய்மாதிரி இது ஒருவகை.கட்டாமீட்டா பிடித்தவர்களுக்கு ரொட்டிக்கு இதுவும் ஒரு வகை. மாங்காய் பச்சடி மாதிரி . ஒருவேளை வயதானவர்களுக்குப பிடித்தது என்றே வைத்துக் கொள்ளலாமா? உங்கள் இஷ்டம். ஏதோ ஒருஸமயம் செய்வதுதானே? நல்ல விருவிருப்பான பின்னூட்டம். மனதால் நினைத்தால் கூட ஊருகாய் உடம்பிற்கு ஆகாது எனக்கு. பிளாகிலாவது பார்க்கலாமென்று. அன்புடன
5.
chitrasundar5 | 7:06 முப இல் ஜனவரி 2, 2021
காமாக்ஷிமா,
ஊறுகாயில் இனிப்பு சேர்ப்பது வித்தியாசமா இருக்கு. புது முயற்சியாக செய்து பார்க்கிறேன். அன்புடன் சித்ரா.
6.
chollukireen | 1:30 பிப இல் ஜனவரி 4, 2021
சிறிய அளவில் செய்து பார்க்கவும் இனிப்பு காரம் சேர்ந்து அதுவும் ஒரு ருசி அன்புடன்