டால்மஃக்னி. ராஜ்மா
ஜனவரி 15, 2021 at 11:47 முப 2 பின்னூட்டங்கள்
2012 போட்ட பதிவு இது. டால் மக்னி செய்துதான் பாருங்கள். பதிவு ஸரியாகப் பதிவாகவில்லை. திரும்பவும் போஸ்ட் செய்த பிறகுதான் வந்தது என்று நினைக்கிறேன். பார்க்கலாம். அன்புடன்
ஸாதாரணமாக முழு உளுந்தும், ராஜ்மாவும் சேர்த்து செய்வது
டால்மஃக்னி.
இது சின்னவகை,ராஜ்மாவும், மஃக்னியும் சேர்த்துச் செய்தது.
இதுவும் ருசியானதுதான். ரொட்டி பூரியுடனும், சற்று லூஸாகச்
செய்து சாதத்துடனும் சாப்பிட நன்றாகவே இருக்கிறது.
எனக்குத் தெறிந்ததை நான் எழுதுகிறேன். நீங்களும் செய்து
பாருங்கள். அத்தோடு கொஞ்சம் கருத்தையும் சொல்லுங்கள்.
இப்போது வேண்டிய ஸாமான்களைப் பார்ப்போமா?
வேண்டியவைகள்.
சிரியவகை ராஜ்மா—-1 கப்
மஃக்னி—-அரைகப்
வெங்காயம்—2
தக்காளி—-1
பூண்டு இதழ்—-4
இஞ்சி—-சிறிய துண்டு.
வேண்டிய பொடிகள்
மிளகாய்ப் பொடி –அரைடீஸ்பூன். காரத்திற்கு வேண்டியபடி
மஞ்சள்ப்பொடி—அரை டீஸ்பூன்
தனியாப்பொடி–1 டீஸ்பூன்
சீரகப்பொடி—1 டீஸ்பூன்
எண்ணெய்—1டேபிள்ஸ்பூன்
வெண்ணெய்—1டேபிள்ஸ்பூன்
ருசிக்கு—உப்பு
பச்சைக் கொத்தமல்லி—வேண்டிய அளவு தூவ.
எந்த வகை மஸாலா வேண்டுமோ அந்த மஸாலாப்பொடி சிறிது.
செய்முறை.
1 சிறியவகை ராஜ்மாவைக் களைந்து அமிழ ஜலம் விட்டு
முதல் நாள் இரவே பாத்திரத்தில் ஊர வைக்கவும்.
2இஞ்சி,பூண்டு , வெங்காயம், தக்காளி இவைகளை மிக்ஸியில்
நைஸாக ஜலம்விடாமல் அரைத்துக் கொள்ளவும்.
3ராஜ்மாவைக் குக்கரில் ஜலம்வைத்து நன்றாக வேகவைக்கவும்.
4 பாத்திரத்தில் எண்ணெயைக் காயவைத்து, அரைத்த விழுதைக்-
-கொட்டிக் கிளறவும். தீ நிதானமாக இருக்கட்டும்.
5 .விழுது கெட்டியாகி எண்ணெய்ப் பிறிந்து வரும் போது பொடிகளைப்
போட்டுக் கிளறவும்.
6 . வெந்த தண்ணீருடன் ராஜ்மாவைச் சேர்த்து , உப்பையும் போட்டு
நன்றாகக் கொதிக்கவிட்டு இரக்கவும்.
7 .வெண்ணெயைச் சூடாக்கி மஃக்னியை லேசாக வறுத்து
8…
View original post 23 more words
Entry filed under: Uncategorized.
2 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ஸ்ரீராம் | 12:57 முப இல் ஜனவரி 16, 2021
நன்றாயிருக்கிறது அம்மா. நான் ராஜ்மா எல்லாம் வாங்கி செய்ததே இல்லை!
2.
chollukireen | 11:42 முப இல் ஜனவரி 16, 2021
ராஜ்மா பிடிக்காவிட்டாலும் முழு
உளுந்தில் செய்யலாம். வேண்டாத மஸாலாவை நீக்கிச் செய்யலாமே. நன்றி அனபுடன்