அன்னையர் தினத் தொடர்வு.2
ஜனவரி 25, 2021 at 11:09 முப 4 பின்னூட்டங்கள்
ஈரல் குலைக்கட்டி என்ற நோய். அந்தநாளைய குழந்தைகளின் நிலை. அம்மாவின் நிலை. தொடர்வு. பகிர்ந்திருக்கிறேன். அன்னையர் தினத் தொடர்வு இது. பாருங்கள். அன்புடன்
அது ஒருகாலம். குழந்தை வைத்தியம் ஸரிவர இல்லாத
காலமென்றும் சொல்லலாம். மருந்துகள் கண்டு பிடித்த காலம்
அது என்றும் சொல்லலாம்.
எங்கு நோக்கினாலும் ஒரு வயதுக் குழந்தைகள் வயிற்றைப்
பெரியதாக முன்நோக்கித் தள்ளிக் கொண்டு, சரிந்த தோள்களும்,
மெலிந்த கால்களுமாக உட்கார்ந்து கொண்டிருக்குமே தவிர சுரு
சுருப்பாக இராது. கண்களில் ஒரு ஏக்கம். அழுகை என ஈரல்
,குலைக்கட்டிக்கு ஆளாகி இம்மாதிரிக் குழந்தைகள்தான் பார்க்கக்
கிடைக்கும்.
கட்டி விழுந்த குழந்தை., மாதமொரு முறை ஜம்மி வெங்கட
ரமணய்யாவின் அருகிலிருக்கும் பெரிய ஊர்களுக்கு அவரின் விஜயம்
எல்லா மாதங்களிலும் ஒரே குறிப்பிட்ட தேதியில் அவர் வருகைக்காக
அம்மாவுடன் பயணிக்கும்.
நல்ல வார்த்தை டாக்டர் சொல்ல வேண்டுமே என்று வேண்டும்
தாயின் உள்ளங்கள்.
பத்துரூபாய் மருந்து என்ரால் பாப்பையா மருந்து. வியாதி கடினம்.
ஐந்து ரூபாய் மருந்து என்ரால் ஜம்மியோ,ஜிம்மியோ? வியாதி ஆரம்பம்.
அப்படிப் பெயர்போன மருந்துகள். மிகவும்,கஷ்டம்.
எத்தனை தேரும்,தேராது என்பது.
ஒரு முப்பது வருஷ காலங்கள் இம்மாதிரிதான் ஓடிக்கொண்டிருந்தது.
நான் நிறைய இம்மாதிரி குழந்தைகள் பார்த்திருக்கிறேன்.
ஒரு ஐம்பது வருஷமாக இம்மாதிரி அவல நிலை ஓய்ந்தது என
நினைக்கிறேன்.
அம்மாவின் முதல் ஆண் குழந்தை இம்மாதிரி இழப்பு. அடுத்து ஒரு
ஆண் குழந்தை.
என் அப்பா என்ன வாக இருந்தார் என்று சொல்லவில்லை.
அவர் ஒரு தமிழ்ப் பண்டிதர். என்ன படிப்பு படித்து வித்வானானார்
என்றெல்லாம் அப்பொழுது கேட்கவும் தெரியாது. அம்மாவிற்கும்
View original post 362 more words
Entry filed under: Uncategorized.
4 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ஸ்ரீராம் | 1:38 பிப இல் ஜனவரி 25, 2021
நல்ல நினைவுக் குறிப்புகள்.
2.
chollukireen | 12:18 பிப இல் ஜனவரி 26, 2021
நடந்தது நடந்தபடியே. வயதானவர்களுக்குக் கடவுள் கொடுத்த வரமிது. அன்புடன்
3.
Angel | 3:15 பிப இல் ஜனவரி 25, 2021
இப்போல்லாம் நினைச்சா மருத்துவரிடம் போகலாம் எல்லா வசதியுமுண்டு அக்காலத்தில் மின்சாரம்/ பயணம் செய்ய என்று எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பாங்க .மருத்துவரும் அருகில் இருக்க மாட்டார் .உண்மையான சிங்கபெண்கள்தான் அக்கால பெண்கள் எத்தனை போராட்டங்களை சந்திச்சிருப்பாங்க ,வாழ்க அன்னையர்
4.
chollukireen | 12:22 பிப இல் ஜனவரி 26, 2021
அஞ்சு நீங்கள் வந்து உணர்ச்சி பூர்ணமாக பதிலிடுவது மிகவும் நான் ஸந்தோஷப்படும் விஷயம். நீண்ட தொடராக மாறிவிட்ட பதிவுகளிது. வாவா வந்துகொண்டே இரு. அன்புடன்