மீனா மாமியா பாட்டியா?
ஜனவரி 30, 2021 at 11:04 முப 4 பின்னூட்டங்கள்
நான் எழுதிய கதை இது. திருப்பிப் பார்க்கும் போது இதை மீள் பதிவுசெய்யலாமே என்றுதோன்றியது. சிலஸமயம் மீள்பதிவும் ஸரியாக ஆவதில்லை. இதைப் போட்டுப் பார்க்கலாம் என்று தோன்றியது. பார்ப்போம். அடிஷனல் தாட்ஸ் வந்தது.போனவாரம் புடலங்காய் கறி மீள் பதிவு செய்தேன். பார்ப்போம இதை. அன்புடன்
ஏறியை அடுத்த வழல் வீடுகளிலிருந்து வளர்க்கும் சேவல்கள் கொக்கரகோகோ
பொட்டைகோழி கூவி பொழுது விடியுமா என்ன? சேவல்களினாலேயே பொழுது
விடிந்து விட்டது. சக்சக்கென்று எல்லார் வீட்டிலும் சாணி கறைத்து தெளிக்கப்
பட்டுக் கொண்டிருக்கிறது. விடிந்தும் விடியாத காலை நேரம்.
பொழுது புலர்ந்தது, பொற்கோழி கூவிற்று, பொன்னான வேலரே எழுந்திரும்,
கண்ணான வேலரே எழுந்ந்ந்ந்திரும்!ம்
மீனாமாமி உதயராகம் பாடத் துவங்கியாயிற்று.
காய்ந்த தென்னமட்டையில் குச்சியை அரிவாள் மணையில் சீவி யெடுத்துவிட்டு
பாக்கிஓலையை சின்ன சின்ன கட்டாக கட்டி எறியவிட லாகவமாய்.
குச்சிகள் கட்டி ஈரம் பெருக்கும் துடப்பமாக,
அம்மா பாலு. நேராக போகிணியிலே பால்
.இரும்படுப்பில் கறிபோகிணியில்
4 கரண்டி ஜலம் ஓலையைப்போட்டு எறியவிட்டு கொதிக்கவைத்து குட்டியூண்டு
பில்டரில் காஃபிப்பொடி அமுங்க ஸ்நானம் செய்கிரது.
மெல்ல டொக்டொக். பில்டருக்குச் செல்லத் தட்டல்.
சின்ன அருவியாய் அடிப்பாத்திரம் 2 தரம் ரொம்பறது.
திரும்பவும் ஓலை எறியறது.
கரி போகிணியில் பால் ஸந்தோஷமாய் மேலே வரது.
ஸரி பாதியா பிறித்து சக்கரையைப் போட்டு, இரண்டாந்தரம்
காஃபிக்கு ஸ்டாக் மூடியாகிறது.
வாசல்லேபோட்ட கோலத்தைவிட பக்கத்திலிருக்கும், பெருமாள்
கோவிலோட ஹனுமானுக்கு ஒரு சின்ன கோலம். சாமியை
சுத்திட்டு வரச்சே கிடைக்கற 2 பூவை வீட்டு படத்திற்கு
ஒரு பூஜை.
ஆனந்த மஹத்வம் அகில ஜகம் அத்தனையும்,
அனந்த மஹத்வம் மாமுனிவரெல்லாரும்.
காவேரியம்மன் கமலமலர்த் தாள் பணிந்தே
கங்கை யமுனையம்மன் செங்கமலர்த் தாள் பணிந்தே
காவேரிமாலை …
View original post 739 more words
Entry filed under: Uncategorized.
4 பின்னூட்டங்கள் Add your own
கோமதி அரசு க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ஸ்ரீராம் | 12:00 பிப இல் ஜனவரி 30, 2021
பாட்டியின் கதை மனதை உருக்குகிறது. என்ன வாழ்க்கையோ!
2.
chollukireen | 12:18 பிப இல் ஜனவரி 30, 2021
ஸொத்து இருந்தாலும் இல்லாவிட்டாலும் அக்ரையுடன் பார்க்க நாதி இல்லாவிட்டால் இந்தக் கதிதான். பலதரப்பட்ட வாழ்க்கை. அன்புடன்
3.
கோமதி அரசு | 6:58 பிப இல் ஜனவரி 30, 2021
மிக நன்றாக இருக்கிறது. காலை பொழுதில் ,மலரும் காட்சிகள் அற்புதம்.
மீனா மாமியின் பாடல் அற்புதம்.
4.
chollukireen | 11:42 முப இல் ஜனவரி 31, 2021
காவேரிமாலை என்று கங்கைக்கும்,காவேரிக்குமான ஸம்வாதம்.கங்கையை விடகாவேரியே தான்,தான் அதிகசக்தி உடையவள் எ்ன்று வாதாடும் ஒரு நீண்ட பாடல்.அந்த வயதில் இதை எல்லாம் கற்றுக் கொள்ளவில்லை.ஆனாலும் இடையிடையே வரிகள் ஞாபகத்தில் வரும். யாரையாவது கேட்போமென்றால் நானே வயது முதிர்ந்தவள். என்னைவிட பெரியவர்கள் ஊரில் யாரும் இல்லை.ஒருகாலத்தில் எங்கள் ஊரின் காட்சிகள் இது. அன்புடன்