அன்னையர்தினத்தொடர்வு 4
பிப்ரவரி 8, 2021 at 11:23 முப 6 பின்னூட்டங்கள்
தொடர்ந்து அந்தக் கால நம்பிக்கைகளும்,நடந்தேறியவிதங்களும், காலம் எவ்வளவு வித்தியாஸம் இந்தக் காலத்தில். படியுங்கள். அன்புடன்
கல்யாணம்நன்றாகநடந்தாயிற்று.இனிபுகுந்தவீட்டில்எவ்வெப்போது
பெண்ணை அழைத்துவா வென்று சொல்கிரார்களோ
அப்போதெல்லாம் அழைத்துப்போய்,திரும்ப அழைத்து
வந்து தகுந்த மரியாதைகள் கொடுத்து வர வேண்டும். ,
அடுத்து பண்டிகைபருவங்கள், தீபாவளி,கார்த்தி, பெண்
வயதுக்கு வருதல் போன்றவிசேஷங்களும் அணி வகுக்கும்.
ஒருவர் மனம் கோணாது இவைகள் ஸமாளிக்க வேண்டும்
அவ்வப்போது ஆவணிஅவிட்டம்போன்றபண்டிகைகளிலும்
கூட விடாது எல்லாம் செய்வார்களாம்.
ஆச்சு வருடங்கள் இரண்டு. பெண் பெரியவளாகி, புக்ககத்திற்கு அனுப்பும் போது இரண்டாவதாக ஒரு பெண்
குழந்தையும் வீட்டில்.
சின்னக் குழந்தைத் தங்கையைக் கொஞ்சாது போகிரோமே
என்று புக்ககம் போகும் பெரிய குழந்தைக்குக் குறை.
அப்படி இப்படி பெண்ணைக் கொண்டு விடும் போது
பெண்ணை எப்படியெல்லாம் உடல் நலம் பாதுகாத்து
வளர்த்தோமென பட்டியலிடும் போது, மாதாமாதம்
வீட்டில் நடைமுறையிலிருந்த விளக்கெண்ணெய் குடித்தலையும் அப்பா ன்ற முறையில் விவரித்து இருக்கிரார்.
அந்தக்கால கஷாயம். சுக்கு,சோம்பு,நிலாவரை, கடுக்காய்,திராக்ஷை, எல்லாம் போட்டுக் கஷாயம் வைத்து
திட்டமான சூட்டில், விளக்கெண்ணெய் விட்டு ஒரு
ஞாயிற்றுக்கிழமை எல்லோரையும், குடிக்க வைத்து,
அதற்கென்றே ஒரு வெள்ளிக்கிண்ணம்.
உத்ஸவம், மண்டகப்படி, எல்லாம் ஸரியா ஆச்சுன்னு அதை
முக்கிய செய்தியாகக் கூறுவார்கள்.
மிளகு ஜீராரஸம், மணத்தக்காளி வத்தல் வறுத்து ஒரு
சாப்பாடு.4மணிக்குமேலே மோர்சாதமும், வத்தக் குழம்பும்.
சாப்பிட ருசியாயிருக்கும்னு வேரெ சொல்லுவார்கள்
அதுவும், உண்மைதான்.
மாப்பிள்ளையாத்தில்,மாதாமாதம் விளக்கெண்ணெய்
பொண்ணுக்கு கொடுக்கணும்னு அவப்பா சொன்னார் என்று
வம்பாகப் பேச்சு வந்ததுன்னும், இதைப்போய்
சொல்லுவாளா என்று அம்மா அங்கலாய்த்ததும் ஞாபகம்
வருகிறது.
அம்மாக்கு பதினெட்டுநாள் குழந்தை கையில்…
View original post 381 more words
Entry filed under: Uncategorized.
6 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ஸ்ரீராம் | 3:09 பிப இல் பிப்ரவரி 8, 2021
பரிகார பூஜைகள்மேல் நம்பிக்கை இருந்த காலம். நம்பிக்கை இருந்தாலே பாதி விஷயம் ஜெயம்தான்.
2.
chollukireen | 11:00 முப இல் பிப்ரவரி 9, 2021
இந்தக்காலத்திலேயும் உண்மையாக சில விஷயங்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. பொருமையும் வேண்டியதாக இருக்கிரது. நல்லதே நடக்கத்தான் எல்லோருடைய விருப்பமும். பக்தியும் அவசியமாகிரது.
அன்புடன்
3.
Revathi Narasimhan | 11:07 பிப இல் பிப்ரவரி 9, 2021
அன்பு காமாட்சிமா.
அருமையான சரித்திரப் பதிவுகளாக வருகின்றன. எனக்குத் தான் தாமதமாகிறது
படிக்க.
இத்தனை செய்வார்களா அப்போது.
விளக்கெண்ணெய் கொடுப்பது எங்கள் வீட்டிலும் வழக்கம்.
மாமியார் வீட்டில் அதெல்லாம்
கிடையாது.
நீங்கள் எழுதி இருக்கும் வாசகங்கள் மிக அருமை.
மண்டகப்படி!!! ஆஹா ஹாஹாஹா.
4.
chollukireen | 11:22 முப இல் பிப்ரவரி 10, 2021
முடிந்தபோது படியுங்கள். அது போதும். நான உஙகளின் தளத்திலிடும் மறு மொழிகள் போவதே இல்லை. ஏதாவது இப்படி. அந்த நாட்களில் சீர்வரிசைகள் ஏகப்பட்டது தான். செய்தும் இருக்கிரார்களே? மாமியார் ஏதாவது சொன்னால் கூட வழக்கமான மண்டகப்படி ஆகிவிட்டது என்பார்கள். உங்கள் மறுமொழிகள் எங்கள் ப்ளாகில் படிக்கும் போது நினைத்துக்கொள்வேன் அன்பு சொட்டச் சொட்டஎன்று. அன்புடன்
5.
Aekaanthan | 5:07 முப இல் பிப்ரவரி 12, 2021
ரொம்ப நாட்களுக்குப்பின் உங்கள் எழுத்தை ரசித்து வாசிக்கிறேன். அந்தக்காலப் பழக்கவழக்கங்கள், பிள்ளைவீட்டு எதிர்பார்ப்புகள், அவற்றை நிறைசெய்ய முனைதல்.. இருந்தும் கிட்டத்தட்ட எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருந்தது. அது ஒரு காலம், அது ஒரு வாழ்க்கை.
இந்தக்காலத்தில் அந்நிய நாட்டிலிருந்துகொண்டு, ஸ்கைப்பிலோ, வாட்ஸப்பிலோ முகத்தைக் காட்டினாலோ, கையை ஆட்டினாலோ போதும்; குசலம் விஜாரித்தல், பண்டிகைச் சடங்கு முடிந்ததாகக் கொள்ளவேண்டியதுதான்.
6.
chollukireen | 11:15 முப இல் பிப்ரவரி 12, 2021
அந்த வாழ்க்கையையும் நன்றாக அநுபவித்துக் கொண்டுதான் இருந்தார்கள். இந்த நாட்களில் நாம் கூட இருந்தால் ஏதாவது பண்டிககள் நாம் கொண்டாடுவோம். அதுவும் நமக்காக. மற்றபடி எல்லாம் நீங்கள் சொல்வது போலதான். நான் முன்பு எழுதியதைதான் மீள்பதிவு செய்கிறேன். உங்களை மின்மலரில்படித்து கதைகளை உள்வாங்கும் போது நாம்தான் யாவரிடமும் தொடர்பு இல்லாமல் இருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டேன். உங்கள் பின்னூட்டம் கண்டதும் கண்களில் ஜலம். நிறைய எழுதலாம். முடிவதில்லை. உங்களுக்கு மிகவும் நன்றி. அன்புடன்