மூலிகைப் பச்சடி—கற்பூரவல்லி.
பிப்ரவரி 19, 2021 at 11:40 முப 6 பின்னூட்டங்கள்
எதையாவது மறுபதிவு செய்வோமென்று பார்த்தால் இது சிக்கியது. பெண்ணாத்தில் செய்தது. நன்றாக இருந்தது.அன்புடன்
இது ஒரு தயிர்ப் பச்சடி. உடம்பிற்கு நல்லது. ருசியாகவும் இருக்கிறது..
கற்பூர வல்லி இலை—6
தயிர்—-1கப் புளிப்பில்லாதது.
பச்சைமிளகாய்—1
தேங்காய்த் துருவல்—1 டேபிள்ஸ்பூன்
ருசிக்கு—உப்பு
வறுத்துப் பொடிக்க—தனியா,சீரகம்,வகைக்கு அரை டீஸ்பூன்
தாளித்துக் கொட்ட கடுகு சிறிதளவு.
எண்ணெய் சிறிதளவு.
தனியா,சீரகத்தை லேசாக வெரும் வாணலியில் வருத்துப்
பொடிக்கவும்.
தேங்காய்,மிளகாய், கற்பூர வல்லி இலையை நன்றாக அரைத்துக்
கொள்ளவும்.
அரைத்ததைத் தயிரில் உப்பு சேர்த்துக் கலக்கவும்.
பொடியையும் சேர்க்கவும்.
கடுகு தாளிக்கவும். பச்சடி தயார். சாதத்துடன்
துவையல்,பொடி முதலானவைகள் கலந்து சாப்பிடும் போது
தொட்டுக் கொள்ள பச்சடி சுவையாக இருக்கும்.
நெஞ்சுக்கட்டு,சளி முதலானவைகளையும் கட்டுப்படுத்தும்.
சிறியதாக ஒரு தக்காளிப் பழத்தை நறுக்கியும் சேர்க்கலாம்.
நன்றாகத்தான் இருக்கிறது.
Entry filed under: Uncategorized.
6 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Geetha Sambasivam | 12:33 முப இல் பிப்ரவரி 20, 2021
நல்ல செய்முறை அம்மா. இங்கே கற்பூரவல்லி கிடைக்கிறது, ஒரு முறை செய்து பார்த்துடறேன்.
2.
chollukireen | 11:17 முப இல் பிப்ரவரி 20, 2021
பாருங்கள். பதிவும் போடுங்கள் அன்புடன்
3.
Revathi Narasimhan | 8:11 பிப இல் பிப்ரவரி 21, 2021
கற்பூர வல்லி வீட்டிலேயே இருக்கு. செய்து பார்க்கிறேன் காமாட்சி மா.
4.
chollukireen | 8:38 முப இல் பிப்ரவரி 22, 2021
மிக்க சந்தோஷம் வீட்டிலேயே இருப்பதால் செய்து பார்க்க சுலபமாக இருக்கும் துவையல் சாதம் பொடிகள் போட்ட சாதத்திற்கு இது மிகவும் நன்றாக இருக்கும் ஆனால் துவையலும் பொடியும் யார் சாப்பிடுகிறார்கள் பச்சடி சுலபம்தான் செய்து பார்க்கிறேன் என்றாள் சந்தோஷமாக இருக்கிறது உங்கள் மென்மலர் மோர் குழம்பு கதையும் மிகவும் நன்றாக இருந்தது ஒரு பின்னூட்டம் உங்களுடையது வந்தது பிறகு எழுதவில்லை கதை பாராட்டி எழுதி இருந்தேன் ஏதோ நீண்ட பதில் இதுவும் அங்கு மிகவும் பனிக்கட்டிகள் குளிரும் அதிகம் ஜாக்கிரதையாக இருக்கவும் அன்புடன்
5.
chitrasundar5 | 10:34 பிப இல் பிப்ரவரி 24, 2021
காமாஷிமா,
பச்சடி எளிமையானதாக இருக்கிறது, ஆனால் கற்பூரவல்லி கிடைப்பதுதான் கடினம் 🙂 அன்புடன் சித்ரா.
6.
chollukireen | 11:00 முப இல் பிப்ரவரி 25, 2021
மனதில் இருந்தால் போதுமே.அன்புடன்