அன்னையர்தினத் தொடர்வு.7
மார்ச் 6, 2021 at 1:16 பிப 2 பின்னூட்டங்கள்
அன்னையர்தின ஏழாவது பதிப்பு வழக்கப்படி திங்களன்று பிரசுரிக்க முடியவில்லை. கணினி ரிபேர். இதிலும் பழக்க வழக்கங்களும்,இராமேசுவர அனுபவங்களும். அடுத்து திங்களன்று எட்டாவதுப் பதிவும் வரும். பாருங்கள்.படியுங்கள். அன்புடன்
உங்களை எல்லாம் ஸஷ்டி அப்த பூர்த்திக்கு கூப்பிட்டேனேல்லவா?
எங்கு ஏது என்று யாருமே கேட்கவில்லை.
இராமேசுவரத்தில் தான் அறுபதாம் கல்யாணம். அப்படித்தான் பெயர்
சொல்லுவார்கள்.
இந்த நாளில் பெண்கள் சிலருக்கு முப்பத்தைந்து வயதுகூட விவாகத்தின்
போது ஆகி விடுகிறது.
அம்மாவுக்கோ அப்பாவின் ஷஷ்டியப்த பூர்த்தி.
பிள்ளைக்காக நிறைய சாந்திகள்,செய்ய வேண்டும், ஹோமங்கள்
வளர்த்துப் பரிஹாரங்கள் செய்து ஸமுத்திர ஸ்னானம் செய்ய வேண்டும்.
கன்னி கடலாடு என்று, பெண் குழந்தைகளுக்கும் நல்லது.
இப்படி அபார யோசனைகளோடு ஒரு சேது ஸ்நானம், ராமேசுவரப்
பிரயாணம். பயணம் நிச்சயம்
அவ்விடம் நல்லதாக வீடு ஒன்று பார்த்து, 8,10 நாட்கள் தங்கி எல்லாம்
செய்வதாகத் தீர்மானம்.
தேரழுந்தூரிலிருந்து அப்பாவின் ஷட்டகர் ராமநாத ஜடாவல்லபர் வந்து
எல்லாவற்றையும் செவ்வனே நடத்துவதாகவும், எல்லா ஏற்பாடும்
அவர் செய்வதாக ஒப்புக் கொண்டாகியும் விட்டது.
அப்பாவின் இரண்டாவது மனைவியின் அத்திம்பேர் அவர். உறவுகள்
நீடித்தது அக்காலத்தில்.
பெரிய வேத வித்து. அவர். முக்கிய விருந்தாளியும், அவர்தான்
ஒரு புடவை, வேஷ்டி வாங்கிக் கொண்டுவந்திருந்து பிரயாணம் பூராவும்
உடனிருந்தவர்.
எங்களுக்குப் புதியதாகத் தைத்த பாவாடையையும்,சொக்காயையும்
எப்போது கொடுப்பார்கள், அதைப் போட்டுக் கொள்ள வேண்டும்.
இப்படிதான் எண்ண ஓட்டங்கள் இருந்தது.
அத்தை,பருப்புத் தேங்காய் முதல்,சமையலுக்குப் பாத்திரங்கள்,விதவித
பக்ஷணங்கள், பொடி வகைகள், படுக்க தலைகாணி போர்வைகள்,
சுக்கு,ஓமம்,லேகியங்கள், மடி துணி எடுத்து வைக்க, 4,5 மடிஸஞ்சிகள்
என பிரயாண ஸாமான்களைத் , தனிப்படுத்தி ஏற்பாடு துரித கதியில்.
யார்…
View original post 541 more words
Entry filed under: Uncategorized.
2 பின்னூட்டங்கள் Add your own
chollukireen க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
கோமதி அரசு | 10:04 பிப இல் மார்ச் 7, 2021
பதிவுகள் அருமையாக இருக்கிறது.
படிக்கிறேன் தொடர்ந்து. நினைவுகளில் இன்றும் பசுமையாக இருப்பதால் அழகாய் பகிர்ந்து உள்ளீர்கள்.
2.
chollukireen | 6:02 முப இல் மார்ச் 8, 2021
நீங்களும் வந்து படித்து ரசித்து பின்னூட்டம் எழுதியதற்கு மிகவும் நன்றி இது முன்பே எழுதியதாக இருந்தாலும் திரும்ப மீள்பதிவு செய்கிறேன் அன்புடன்