அன்னையர் தினம் 8
மார்ச் 8, 2021 at 11:49 முப 2 பின்னூட்டங்கள்
அன்னையர்தினப்பதிவு நம்பர் எட்டு இன்று பதிவாகிறது. இன்றும் அன்னையர்கள் தினம்தான். வழிவசமாக அமைந்து இருக்கிறது.விஷயங்கள் அடிப்படையாக இப்பதிவு அமைகிறதா.பாருங்கள். அன்புடன்
ஆயிரம் ஆனாலும் மாயூரமாகாது என்பது வசனம் . அவ்வளவு அருமையான
காவிரிக்கரையோர பெரிய ஊர்.அப்படியே அவ்விடம்அப்பாவின் நண்பர், வெங்கட்ரமண ஐயா,
அப்பா வேலை செய்த நேஷனல் ஹைஸ்கூல், பல குடும்பங்கள், பல முக்கிய விஷயங்கள்
இப்படிப் பல விஷயங்களை நேரில் காட்டினார். அருமையான ஸந்திப்புக்களாக இருந்தது.
பட்டமங்கலம்தெருவில் குடி இருந்தது என அவரின் மலரும் நினைவுகளையும்
எங்களுக்கு நேரில்,காட்டியும்,உணர்த்தியதிலும் அவருக்கு மகிழ்ச்சி.
அந்தநாளைய ஞாபகங்களை நாங்களும் எங்களுக்குத் தெரிந்த முறையில் ரஸித்தோம்.
பெரியம்மா, பொங்கல் சீர் வரிசையின் காய்கறிகளைக் கொண்டு
எறிச்சகறி செய்வதை,அதன் ருசியைக் கேட்டு மகிழ்ந்தோம்.
அம்மாதிரி பிறகு யார் செய்தாலும் அந்த ருசி வரவில்லை என்று
சொல்லியதை மறக்கவே முடியாது.
காவேரிஸ்னானம்,கோவில் ,குளம் என மாயவரத்தை முடித்து க் கொண்டுதேரழுந்தூர்
சென்றோம். அந்த நாளில் உறவுகள் அவ்வளவு முக்கியம் வாய்ந்தது.
அப்பாவின் இரண்டாம் கலியாண வழி உறவுகளனைத்தும் பார்க்க கூப்பிட
என அணி வகுக்காத குறைதான். அதான் எறிச்ச கறி ஃபேமஸ் பெரியம்மவின்,
உறவுகள் இத்துடன் விட்டுப்போகக் கூடாது.
உங்கள் மருமகளாக எங்கள் வீட்டுப் பெண்ணை ஏற்கவேண்டும்.
நிச்சயம் செய்து வைத்து விடலாம். போகட்டுமே இரண்டொரு வருஷம்.
இப்படி அம்மாவிடமும்,அப்பாவிடமும் வேண்டுகோள்கள்.
எதைச்சொல்லுவது,எதைவிடுவது? மனக்கிலேசம் அதிகமாகிறதே தவிர
குறைவதாகக் காணவில்லை.
பார்ப்போம். எல்லோரும் நல்லபடியாக இருக்கட்டும்,என்ற பொது வார்த்தையையே
திருப்பித்,திருப்பிச் சொல்ல முடிந்தது அம்மாவிற்கு.
எங்காத்துப் பெண்ணுக்கு வீட்டிலே ரெண்டு பசுமாடு இருந்தால் போதும். அதை
வைத்தே அழகாக குடும்பம்…
View original post 473 more words
Entry filed under: Uncategorized.
2 பின்னூட்டங்கள் Add your own
கோமதி அரசு க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
கோமதி அரசு | 12:02 முப இல் மார்ச் 10, 2021
பதிவில் மாயவரம் பேரை கேட்டதும் மனதுக்கு மகிழ்ச்சி.
உங்கள் அப்பா நேஷனல் பள்ளியிலா வேலைப்பார்த்தார்கள்?
பட்டமங்கல தெருவெல்லாம் இப்போது கடைகள், ஆஸ்பத்திரி, ஓட்டலாக மாறி விட்டது.
துலாகட்டத்தில் ஐப்பசி மாதம் முழுவதும் நீராட வருவார்கள்.
அம்மா சொன்னது போல் எல்லோரும் நன்றாக இருக்கட்டும்.
2.
chollukireen | 11:05 முப இல் மார்ச் 10, 2021
ஆமாம் அதெல்லாம் ஒரு வெகுகாலத்துக்கு முந்திய ஸமாசாரம். அப்போது யாவரும் ஐப்பசிமாதம் காவிரி நீராடவந்து வெகுநாட்கள் தங்குவார்கள்என்றெல்லாம் சொல்லி யிருக்கிரார்.. எங்கள் பால்யத்தில் திருவண்ணாமலை கார்த்திகை தீபம். ஸொந்த உறவினர்கள் யாவரும் வருவார்கள் நன்றி உங்கள் மறுமொழிக்கு. அன்புடன்