அன்னையர் தினம்.பதிவு 9
மார்ச் 15, 2021 at 11:09 முப 2 பின்னூட்டங்கள்
அன்னையர் தினப் பதிவு ஒன்பது9 இன்று பதிவாகிறது. பழைய கதைதான். ஆதலால் படியுங்கள்.அன்புடன்
அம்மா புதுச்சேரி கிளம்பு முன்னரே சாச்சியாத்து நீலா பாட்டிக்கு தபால் எழுதிக்
கொடுக்கணும், விகடன் ஒருநாள் வாசித்துக் காட்டணும், அவாள்ளாம்
நம்முடையகிட்டின ஸொந்தக்காரர்கள். அந்த பொண்ணுக்கு அவ்வளவா போராது.
சித்த தவராம செஞ்சு கொடுத்துடு,பாட்டி பாவம் என்று உறுதி மொழி எழுதிக்
கொடுக்காத குறையாக வாங்கிக் கொண்டுதான் போனாள்.
எங்கபாட்டி அந்த பாட்டி எல்லோரும் அக்கா,தங்கைகளின் பெண்களாம். பாட்டியின்
புதுமருமகள் கூட இருக்கிராள்.
அவளுக்கும் எழுத,படிக்க ஸரளமாக வராதுபோலும்.
எப்பவோ அஞ்சு க்ளாஸ் படிச்சுட்டு,தேமேன்னு வீட்டு வேலைகலைச் செய்து
கொண்டிருந்த பொண்ணு. எழுத்தெல்லாம் மரந்தே போச்சென்று சொல்லக்கூடிய
நிலையிலிருந்த பெண்.
அவ எதையாவது எழுதி இது ஸரியா இருக்கா பார் என்று என்னிடம் காட்டுகின்ற
ரேன்ச். கலியாணமாகி இரண்டு மாதம் இருந்து விட்டு புருஷன் மிலிடரியில்
வேலை செய்வதனால் விட்டு விட்டுப் போய் விட்டான்.
புருஷன் விகடனுக்கு சந்தா கட்டி புத்தகம் படி என்று சொல்லி விட்டுப் போனான்.
நான் அவ மாமியாருக்கு உதவி செய்யப் போனால், இவ கடிதம் எழுதறத்துக்கும்
என்னை கேட்பாள்.
ஸாதாரண கடிதம்தான். அவன் படிச்சு படிச்சு சொல்லிட்டுப் போனான்.
இதுக்குஒன்றுமே தெரியவில்லையே யென்று பாட்டி அங்கலாய்ப்பாள்.
ஞாயிறு காலை புக் போஸ்டில் விகடன் வரும்.
அந்த நேரத்துக்குச் சரியாகப் போய்விட்டு,புத்தகத்தைப் பிரித்துப் படித்து விட்டு
தொடர் கதைகளை கிரகித்துக் கொண்டு,கார்ட்,கவரெல்லாம்வாங்கச்சொல்லிவிட்டு
சாப்டுவிட்டு வருகிறேன் என்று சொல்லித், திரும்பவும் போய் எல்லாம் செய்து
கொடுப்பது வழக்கம்.
அந்தநாளையமாமியார்கள்,எல்லாரும்கெடுபிடிதான்.எதையாவதுசொல்லிக்
கொண்டும்…
View original post 555 more words
Entry filed under: Uncategorized.
2 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
கோமதி அரசு | 7:06 பிப இல் மார்ச் 15, 2021
பழைய நினைவுகள் பகிர்வு!
இப்போது நடந்தது போல் நினைவாக எல்லாம் சொல்கிறீர்கள் மிகவும் வியப்பாக இருக்கிறது.
கணவனுக்கு கடிதாசி எழுத நாலுவரி படிக்க வேண்டாமா என்று அந்த காலத்தில் பெண்களை பாடசாலையில் வாசிக்க வைத்தார்கள் என்பார்கள் அம்மா.
2.
chollukireen | 11:09 முப இல் மார்ச் 16, 2021
எக்ஸ்ரே எடுத்தமாதிரி ஆழப் பதிந்துபோன நினைவுகள்,தவிரவும் அதையே பலபேருக்கு குடும்பத்தில் சொல்லிச் சொல்லி நாம் கேட்ட நினைவுகள். இதைப் பதிந்து வேறு வைத்து விட்டேன் அல்லவா
உங்க ளம்மா சொன்ன வார்த்தைகள் அந்தக்காலத்தின் பிரதிபலிப்புதான். நன்றியம்மா. அன்புடன்