வெஜிடபிள் பிட்ஸா
மார்ச் 17, 2021 at 11:14 முப 4 பின்னூட்டங்கள்
ஏதாவது சாப்பிடும் வஸ்து மீள்பதிவு செய்ய நினைத்தேன். பிட்ஸா நான் ஸீனியர் என்றது. பாருங்கள். வீட்டில் செய்து நிறைய அலங்காரங்களுடன் வலம் வருகிறது. மலரும் ஞாபகங்கள். அன்புடன்
என்னது நான் பிட்ஸா எழுதுகிறேனே என்று யோசிக்கிறீர்களா?
கட்டாயம் யோசிப்பீர்கள். 10, 12 வருஷங்களாக செய்வதைப்
பார்த்து, கூடமாட எல்லாம் செய்தும் பழக்கந்தான். ஆனால்
இங்கே பிட்ஸாவெல்லாம் செய்வதில்லை. ஜெனிவா ஸுமனுக்கு
ஃபோன் செய்யும்போது பிட்ஸா பண்ணும் போது எல்லாத்தையும்
படமெடுத்து அனுப்பு. வாராவாரம் சனிக்கிழமை பிட்ஸாதினம்
ஆயிற்றே என்றேன்.
வந்து சேர்ந்து 4வாரம் ஆகிறது. நீங்களும் செய்து பாருங்கள்.
வேண்டியவைகள்.
பிட்ஸாவின் அடிபாகம் தயாரிப்பதற்கு
ஈஸ்ட்—-7 கிராம்…காய்ந்த பொடி
சர்க்கரை—-1 டீஸ்பூன்
கைபொருக்கும் அளவுள்ள சுடு தண்ணீர்—250 மிலிகிராம்
மைதா—-350 கிராம் அல்லது
கோதுமைமாவு—200கிராம் இதனுடன்
மைதா—-150 கிராம் ஆக கலக்கவும்.
உப்பு —1 டீஸ்பூன்
ஆலிவ் ஆயில்—–3 டேபிள்ஸ்பூன்.
மேலே நிரப்புவதற்கு வேண்டிய ஸாமான்கள்.
3 டேபிள்ஸ்பூன் டொமேடோ சாஸ் அல்லது டொமேடோ ப்யூரி
3 தக்காளி– ஸ்லைஸாக நறுக்கியது
3 மீடியம் சைஸ் வெங்காயம் –ஸ்லைஸாக நறுக்கியது
காப்ஸிகம் சிகப்பு,பச்சை, மஞ்சள் எது விருப்பமோ அந்த-
-வகையில் நறுக்கியது—-1 கப்
ப்ரகோலி நறுக்கியது—1 கப்
பேஸின் மேல் தடவுவதற்கு—1 டேபிள்ஸ்பூன் ஆலிவாயில்
மொஜரில்லாசீஸ்–துறுவியது—200 கிராம்
அமெரிக்கன் சோளம்–பதப்படுத்தியது. 2டேபிள்ஸ்பூன்.–டின்–
–களில் கிடைக்கும்.
கேப்பர்ஸ்—2 டேபிள்ஸ்பூன். புளிப்பு சுவையுடன் கூடியது.
பர்மேஸன் சீஸ்—-துருவியது—2டேபிள்ஸ்பூன்
ரிகோட்டாசீஸ்—-50 கிராம்.
செய்முறை
1 ஒரு கிண்ணத்தில் ஈஸ்ட்,சர்க்கரையுடன் 50 மிலிகிராம்
தண்ணீரைக் கலந்து வெப்பமான இடம் அதாவது அடுப்படியில்
15 நிமிஷங்கள் வைக்கவும். வைத்த அளவைவிட இரண்டு…
View original post 345 more words
Entry filed under: Uncategorized.
4 பின்னூட்டங்கள் Add your own
angel க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Geetha Sambasivam | 11:30 முப இல் மார்ச் 17, 2021
முன்னால் அவன் இருந்தப்போப் பண்ணி இருக்கேன் அம்மா. இப்போல்லாம் பண்ணுவது இல்லை. இங்கே இந்தியாவில் வாங்கினதே இல்லை. யு.எஸ்ஸில் பெண்/பிள்ளை வீட்டில் அவங்க வீட்டிலே செய்வாங்க/அல்லது பிட்சா பேஸ் மட்டும் வாங்கி மற்றவை வீட்டுத் தயாரிப்புக்களில் செய்வாங்க. எப்போவானும் கடைகளில் வாங்குவதும் உண்டு. என்னை அவ்வளவா இந்த உணவு கவரவில்லை. :)))))
2.
chollukireen | 11:48 முப இல் மார்ச் 17, 2021
நானும் மீள்பதிவு போட்டிருக்கேன். வீட்டில் ஜெனிவாவில் அடிக்கடி செய்வதனால், அப்போது ருசி பழகிவிட்டது.சீஸ் எனக்குப் பிடிக்காது.ஆனாலும் மேல்ஸாமான்களுடன் சா்பபிடும்போது அது ஒரு ருசி. இங்கு வாங்குவதில் ருசி கிடையாது. பேத்திகள் செய்யவும் செய்கிரார்கள். சீஸ் ஒன்றைத்தவிர மற்றவைகள் நாமும் புழங்கும் ஸாமான்கள்தானே!
ருசிகள் அவரவர்களுக்கு வெவ்வேறு. இப்போது ருசியெல்லாம் மூட்டை கட்டி அனுப்பியாகி விட்டது. மிக்க நன்றி அன்புடன்
3.
angel | 11:41 முப இல் மார்ச் 17, 2021
ரொம்ப அருமையா வந்திருக்கு வெஜிடபிள் பீட்சா .நான் க்ளூட்டன் ப்ரீ பிட்டா பிரெட் மேல் பிட்ஸா கலவையை வைத்து செய்வேன்
4.
chollukireen | 11:54 முப இல் மார்ச் 17, 2021
ஏஞ்ஜல் வாவா. உன்னுடைய உணவே க்ளூட்டன் ப்ரீதானே. கலவை மாற்றி மாற்றி செய்வதால் நம்முடைய ஸாம்பார் ருசிகள் மாறிமாரி வருவதுபோல் அமைகிறது..நன்றி. அன்புடன்