ஆலு டிக்கி.
மார்ச் 25, 2021 at 11:25 முப 4 பின்னூட்டங்கள்
சுலபமான ஆலுடிக்கி மீள்பதிவு செய்திருக்கிறேன்.சுலபமானது. செய்துதான் பாருங்களேன்.
அன்புடன்
என்ன ஹிந்திப் பெயரா இருக்கே என்று பார்க்கிறீர்களா?
அந்தப்பெயர்தான் எல்லோரும் சொல்கிரார்கள்.
வட இந்தியர்கள் விரும்பும், பெரியவர்கள் முதல் சிறியவர்கள்
வரை மிக்க விரும்பும் நம்மவர்களும் கூட ருசிக்கும் சிற்றுண்டி இது.
முன்பே சோலே எழுதும்போது ஆலு டிக்கி எழுதுகிறேன் என்று
எழுதினேன்.
இப்போது ஒரு புளிச் சட்னி,வட இந்தியர் பாணியில் எழுதி டிக்கியும்
எழுதுகிறேன்.
சோலே,தயிரும் கூட போட்டு டிக்கியை செய்து ருசியுங்கள்.
அல்லது ரஸியுங்கள்.
ஜெனிவா பேத்தி, அவளுடைய சினேகிதிகளைக் கூப்பிட்டால்
பாட்டி,ஆலு பரோட்டா,அல்லது இந்த டிக்கியை செய்யச் சொல்லுவாள்.
வேண்டியவைகளைப் பார்ப்போமா?
புளிச்சட்னி பிரமாதம் ஒன்றுமில்லை.
செய்முறை — ஒரு பெரிய நெல்லிக்காயளவு புளியை ஊறவைத்து
கெட்டியாக சாறு எடுத்துக் கொள்ளவும்.
ஒரு டீஸ்பூன் சீரகத்தை வறுத்துப் பொடித்துப் போடவும்
பெருஞ்சீரகமும் சேர்க்கலாம்.
வெல்லம் ஒரு சிறியத் துண்டு
ருசிக்கு—உப்பு
சாட்மஸாலா வின் ஒரு சிட்டிகை இந்துப்பு
பெருங்காயம் சிறிது. இவைகளைச் சேர்த்து நிதான தீயில்
கொதிக்க விடவும்.
சாஸ் மாதிரி திக்காக ஆகும்போது இறக்கி சிறிய கிண்ணத்தில்
மாற்றவும்.
இப்போது இம்லி சட்னி தயார். புளிக்குழம்பு என்றே வைத்துக்
கொள்ளுங்களேன்.
அடுத்து டிக்கி.வேண்டியவைகள்
உருளைக்கிழங்கு, திட்டமான சைஸ்—4
பச்சைமிளகாய்—-2
உப்பு–ருசிக்கு
பச்சைக் கொத்தமல்லி இலை சிறிது.
எண்ணெய்—-வேண்டிய அளவு.
செய்முறை.
உருளைக்கிழங்கை நன்றாக அலம்பி தண்ணீரில் வேக வைத்தோ
அல்லது மைக்ரோவேவில் ஒரு ஈரத்துணியில் பொதிந்து
உருளைக்கிழங்கை ஹைபவரில் 5 அல்லது 6 நிமிஷங்கள்
View original post 120 more words
Entry filed under: Uncategorized.
4 பின்னூட்டங்கள் Add your own
angel க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
angel | 11:43 முப இல் மார்ச் 25, 2021
காமாட்சி அம்மா ..ஆலு டிக்கி உங்க கைவண்ணத்தில் மிக அழகா வந்திருக்கு .நானும் செய்றேன் .சன்னா மசாலாவுக்குத்தான் இங்கே கடலை எனக்கு பிடிப்பதில்லை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமா இருக்கு நம்மூர் கொண்டை கடலை தனி ருசி
2.
chollukireen | 11:55 முப இல் மார்ச் 25, 2021
உன் பாராட்டுதல் பழைய நாட்களை ஞாபகப்படுத்துகிறது. புதியதாக ஏதாவது போடவேண்டும் என்ற எண்ணம் தோன்றிக் கொண்டே இருந்த காலம். இப்போது மீள்.பதிவுக்காலம். அழகா வந்திருக்கா. சுடச்சுட மறுமொழி. அதுவும் ருசிதான். அன்புடன்
3.
chitrasundar5 | 1:56 முப இல் மார்ச் 29, 2021
காமாக்ஷிமா,
பேத்திக்காக அன்பான பாட்டியின் தயாரிப்பு !
மீள்பதிவு என்றாலும் உங்களின் எழுத்து புதிதாக படிப்பதுபோல் உள்ளது. ஃபோட்டோவைப் பார்க்கும்போது சன்னாமசாலா செய்கின்ற நாளில் எப்படியாவது இந்த உருளை டிக்கியை செய்துவிட வேண்டும் என தோன்றுகிறது. அன்புடன் சித்ரா.
4.
chollukireen | 11:01 முப இல் மார்ச் 29, 2021
புதியதாக எழுதுவதே இல்லை. நீ ஏன் எழுதுவதை நிறுத்தி விட்டாய். பார்ப்பதும் எப்பொழுதாவதுதான் என்று நினைக்கிறேன். புனிதா வேலையில் ஸெட்டிலாகிவிட்டாள். இப்போது நேரம் கிடைக்குமே டிக்கி ஸுலபமானது.செய்துபார். நான் வாராவாரம் மீள்பதிவு செய்கிரேன்.படிப்பவர்கள் கம்மியாக இருந்தாலும் நானும் வலையில் இருக்கிறேன் என்ற மனதிருப்தி. ஆசிகள் யாவருக்கும். அன்புடன்