அன்னையர்தினம் 14
ஏப்ரல் 19, 2021 at 11:13 முப 2 பின்னூட்டங்கள்
இன்று சொல்லுகிறேன் என்ற இந்த பிளாகை வேர்ல்ட் பிரஸ்ஸில் ஆரம்பித்து 12 வருஷங்கள் பூர்த்தி ஆகிறது. வாழ்த்து வந்தது. மிக்க நன்றி அவர்களுக்கு.
அன்னையர்தினப் பதிவு 14 உங்கள் பார்வைக்கு வருகிறது. பெண்ணிற்குப் பணிவு இருந்தால்மட்டும் போதாது. அவர்களின் பெற்றோருக்கும் பணிவு வேண்டும். இப்படியும் சில நிகழ்வுகள் உங்கள் பார்வைக்கு. அன்புடன்
கல்யாணம் ஆகிவி்ட்டது. விசாரம் விட்டது என்பது எல்லோருடைய
வாக்குகளும்.
விசாரங்கள், ஆரம்பம்தானே சிலருடைய வாழ்க்கைகளிில்.
ரிடயரான பின்னும் பெண்கள் பள்ளியில் அப்பாவிற்கு ஆங்காங்கே ஒரு
ஆறுமாத காலத்திற்கு வேலை கிடைத்துக் கொண்டிருந்தது. அப்படி ஒரு முறை
சென்னை வந்தபோது பெண் பாசம் பெண் வீட்டிற்குப் போயுள்ளார்.
இரண்டொருநாள் தங்கி விட்டு தங்க இடம் பார்த்துப் போவதாகச் சொல்லியும்
இருக்கிரார். அப்படி இருக்கையில் அவர்கள், அவ்விடமே தங்கி விடுவாரோ, என்ற
ஐயத்தில், அக்காவிடம் கேள்வி எழுப்பி இருக்கிரார்கள்.
அக்காவிற்கு மனது பொருக்க முடியாமல்,
அப்பா நீங்கள் இவ்விடமே தங்கிவிடுவீர்களோ என்று அச்சப் படுகிரார்கள்
என்று சொல்லி விட்டாள்.
போதுமே கோபக்கார மனிதர்களுள் ஒருவராகிய அப்பாவிற்கு, கிளம்பி விட்டார்.
எதிரே வந்த மாப்பிள்ளை, பெட்டியை கையில் வாங்கிக் கொண்டு, கொண்டுவிட
எத்தனித்தவரை, உங்கள் மரியாதை உங்களுடன் இருக்கட்டும், என்று சொல்லியபடி
வெளியே வந்தவர்தான்.
எந்தக் காரணத்தைக் கொண்டும், திரும்பப் போகவேயில்லை.
பெற்றவருக்கு இம்மாதிரி வீம்பு உண்டா? பெண்ணைப் படுத்துவதற்கு இதைவிட வேறு
காரணம் வேண்டுமா?
உங்களால் நம்ப முடியாது. இதை வைத்தே எவ்வளவோ நடந்து விட்டது.
அம்மா யார் எதைச் சொன்னாலும், வாவென்ற வார்த்தை சொல்லி, வரவேற்காமல்ப்
போனாலும், அம்மா அங்கு போய்ப் பார்ப்பதை விடவில்லை.
யார் சென்னை சென்றாலும், போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள் என்று சொல்லி
அனுப்புவார்கள். இப்படியே மூன்று வருஷங்கள் கடந்தது.
அப்படிதான் அன்றொருநாள் கோவிலாராத்தில் ராஜி வந்திருந்தாள்.
அவளும் சென்னையில்தான் வாழ்க்கைப்…
View original post 529 more words
Entry filed under: Uncategorized.
2 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
கீதா | 4:40 முப இல் ஏப்ரல் 21, 2021
தாமதமாக வருகிறேன் அம்மா.
நலமா?
வாழ்த்துகளுக்கு நன்றி அம்மா.
என்னதான் பெண்ணைக் கொடுத்த இடம் என்றாலும் சுயமரியாதை என்று ஒன்று இருக்கும் இல்லையா? ஓரளவிற்கு மேல் அவமரியாதையைப் பொறுக்க முடியாதுதானே?
//அம்மா யார் எதைச் சொன்னாலும், வாவென்ற வார்த்தை சொல்லி, வரவேற்காமல்ப்
போனாலும், அம்மா அங்கு போய்ப் பார்ப்பதை விடவில்லை.//
எல்லோராலும் முடியாது இலையா அம்மா? இதற்குத் தனியான மனப்பக்குவம் வேண்டும்…
கீதா
2.
chollukireen | 11:16 முப இல் ஏப்ரல் 21, 2021
வாவா. நலமே. வரவேற்கிறேன். என்ன அஸௌகரியம்? எங்குமே பார்க்க முடியவில்லை. எங்கள் ப்ளாகில் இன்று பார்த்தேன்.ஸரி எப்படியாவது தொடர்பு கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். எண்ணம்தான். செயல்படுவதில்லை.ஸௌக்கியமா?
14 வரை வந்து விட்டேன். இன்னும் தொடர் வரும். அந்தக்கால மனிதர்கள். இப்படியும் இருந்தார்கள்.நீங்களை நீ செய்து விட்டேனா? உரிமையா, ஸீநியரா. அன்புடன்