அன்னையர் தினம்–15
ஏப்ரல் 26, 2021 at 11:32 முப 4 பின்னூட்டங்கள்
எல்லாம் அடுத்தடுத்து இல்லாவிட்டாலும் நிகழ்வுகள் முக்யமானதை எழுதுகிறேன். மனம் கலந்த உணர்ச்சிகள் உங்கள் பார்வைக்கு. அன்புடன்
எவ்வளவு ஆசை ஆசையாக குழந்தையை வளர்த்தோம். அந்தக் குழந்தையின்
நலம் குறித்துக் கூட அவர்கள் கடிதம் எழுதவில்லை அம்மா மனக் கஷ்டப்பட்டாலும்
வார்த்தைகளில் சொல்லுவார். என்ன பிரமாதம் போ. ஊரில எத்தனையோ குழந்தைகளிருக்கு.
அதுகளைக் கொஞ்சினால்ப் போகிறது. எங்கேயாவது நன்றாக இருந்தால்ப் போதுமானது
என்று அடிக்கடி சொல்லுவார்கள்.
அன்னையர் தினப்பதிவு ஆரம்பித்து அடுத்த வருடமும் வந்து விட்டது.
என்னுடைய இயலாமையை நினைத்துக் கொண்டேன்.
காலம் முழுவதும் ஏதோ போராட்டங்கள் இருந்தாலும், பொருட் படுத்தாது அதிலிருந்து
மீண்டுகொண்டே காலம் கடத்தினது பொதுஜன உறவுகளும், பிரருக்கு உதவி செய்து
மகிழும் மனப்பான்மையும் இருந்ததால்தான்.
காலங்கள் ஓடிக்கொண்டு இருந்தது. மிகுதி இருந்த நிலத்தையும் விற்று அடுத்த
பெண்ணிற்கும் கலியாணம் செய்து முடித்து காலம் பறந்து கொண்டு இருந்தது.
எவ்வளவோ விஷயங்கள்.
என்னுடைய பெண்ணை தன்னுடன் இருக்க வேண்டும் என்று
சொல்லி அப்பா அழைத்துப் போனது. தனக்குப் பேரன் கையினால் அந்திமக்
கிரியைகள் செய்ய வேண்டுமென்று தான் நன்றாக இருக்கும்போதே உறுதி
மொழி வாங்கிக் கொண்டது போன்றவைகள் அந்த நாளைய பெற்றோர்களின்
ஆசைகள்.
கான்ஸர். இந்த வியாதி வந்தால் , குடும்பத்தின் செல்வ நிலைக்கும் ஏதே வியாதி
பிடித்து விடும் என்று சொல்வார்கள்.
அந்த நோயினால் அப்பா பீடிக்கப் பட்டார். ஆனால் அவர் ஒரு மருந்தும் சாப்பிடவே
மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து ஒரு வலிமருந்து கூட சாப்பிடாமல் இருந்து தான்
அவருடைய வாழ்வை முடித்தார்.
அம்மாதிரி…
View original post 357 more words
Entry filed under: Uncategorized.
4 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
thulasithillaiakathu | 3:04 பிப இல் ஏப்ரல் 28, 2021
காலம் முழுவதும் ஏதோ போராட்டங்கள் இருந்தாலும், பொருட் படுத்தாது அதிலிருந்து
மீண்டுகொண்டே காலம் கடத்தினது பொதுஜன உறவுகளும், பிரருக்கு உதவி செய்து
மகிழும் மனப்பான்மையும் இருந்ததால்தான்.
காலங்கள் ஓடிக்கொண்டு இருந்தது. //
ஆமாம் அம்மா..இதை டிட்டோ செய்வேன்
என் அம்மாவுக்கு அப்பாவின் அம்மாவுக்கு அத்தைக்கு ரொம்பப் பொருந்தும்…
கீதா
2.
thulasithillaiakathu | 3:07 பிப இல் ஏப்ரல் 28, 2021
ஆமாம் கான்சர் வந்தால் பணத்திற்கும் நோய்தான்!!!
அப்பா மருந்து உட்கொள்ளாமலிருந்தது பாவம் அவர் எத்தனை வேதனையில் இருந்திருப்பாரோ? கான்சரினால் வரும் வேதனை…
அந்தக் காலத்தில் பலரும் இப்படித்தான் மருந்து உட்கொள்வதில பலரும்
மனம் சங்கடமாகியது
கீதா
3.
chollukireen | 12:18 பிப இல் ஏப்ரல் 29, 2021
மிக்க சங்கடமான காலம். அதுவும் கிராமப்புறம். வசதிகளும் கிடையாது. சங்கடம் பலவிதங்களில். வியாதியே ஒரு அதுவும் கேன்ஸர் மிக்க சங்கடம்தான். அன்புடன்
4.
chollukireen | 12:12 பிப இல் ஏப்ரல் 29, 2021
அந்த நாட்களில் எல்லா பெண்களுமே பொருமையென்னும் நகையணிந்து இருந்தார்கள் போலத் தெரிகிறது. உங்கள் மறுமொழியில். நன்றி. அன்புடன்