அன்னையர்தினப்பதிவு—16
மே 3, 2021 at 11:12 முப 4 பின்னூட்டங்கள்
போகிறவர்கள் போய்விட்டாலும், காரியங்கள் நடக்க வேண்டுமே! அந்தநாள்க் கதைகள்.அம்மாவினுடயது அலாதிதானே. படியுங்கள். பகுதி 16. அன்புடன்
என்ன எந்தமாதிரி ஒரு இடத்தில்க் கொண்டு நிறுத்தி விட்டுத்
தொடரவில்லை. அந்த அளவிற்கு சுகவீனம் எனக்கு.
இப்போது எழுதத் துவங்க ஆரம்பித்து இருக்கிறேன்.
வாருங்கள். என்னவென்று,
வாசலில் சவுக்கு வண்டி அதாவது விரகுக்கட்டை விற்பனைக்கு
வந்திருக்கு, வாங்கிப்போட்டால்தான் காயும்.
பெரிய காரியம் இருக்கு. நேக்கு எங்கும் போக முடியாது.
நீதான் செய்யணும். பசங்கள் நீ அழுதால் அதுகளும் அழும்.
ஆச்சு ஒருகாரியம்.நல்லபடியா போயாச்சு. மீதியைச்
செய்து கடையேத்தணும். ஒரு பத்து குண்டாவது விரகுவேணும்.
அப்படியே பொளந்தும் குடுத்துடச் சொல்லு. காசு கொடுத்துடரேன்னு
சொல்லு. வேலை சுலபமாகப் போய்விடும். அம்மா.
வாசலில் வந்தவுடனே மத்தவாள்ளாம் வந்துடரா.
நீ போ நாங்க பொளந்து வாங்கி வைக்கிரோம். பணத்தை
வாங்கிக் கொண்டு பொருப்பை ஏற்றுக் கொள்கிரார்கள்.
உங்கப்பா கேட்டாள்னு இந்த சின்ன பையன்கையாலே
மீதி காரியம் எல்லாம் வேண்டாம்.
ஸொத்தா வைச்சிருக்கோம். என் கை பில்லு வாங்கி
உங்க அத்திம்போரோ, மாமாவோ செஞ்சூடட்டும். அது
போதும். மீதி என்ன வேண்டுமோ,வேண்டாதோ அதில்
கவனம் செய். இது அம்மா
பார் எனக்கும் இதெல்லாம் ஒண்ணுமே தெரியாது,அக்காவின்
குறை.
தானம்,தர்மம், எல்லாம் எது செய்யணுமோ அதெல்லாம்
குறையாதிருக்க ஏற்பாடுகள் நடந்தது.
மெட்ராஸுலே அவளுக்குச் சொல்லிகூட இருக்க மாட்டார்கள்.
இல்லாட்டா அனுப்பி இருக்க மாட்டார்களா. அம்மாவிற்கு
இப்போதாவது பெண் வருவாளா என்ற நைப்பாசை.
அம்மாவுடய உடன்பிறந்தவர், மாப்பிள்ளை என எல்லோரும் வந்தாகிவிட்டது.
ஆளுக்கொரு லக்ஷணமான புடவையுடன்.
உடன்பிறந்தவர்,மைத்துனர், மாப்பிள்ளை,பிள்ளை என…
View original post 462 more words
Entry filed under: Uncategorized.
4 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Aekaanthan | 2:28 முப இல் மே 4, 2021
மேற்கொண்டு எழுதிச் செல்லுங்கள். அந்தக்கால வாழ்க்கைப் படிவங்கள் படிக்க ஆர்வமாக இருக்கிறது
2.
chollukireen | 11:20 முப இல் மே 4, 2021
வாருங்கள் வாருங்கள். உங்கள் பதிவிற்கு வந்து பின்னூட்மிடாமல்நீங்கள் வரவில்லையேயென்று நினைக்கக் கூடாது. மீள்பதிவுதான் செய்து கொண்டு இருக்கிறேன். சிறிதுநேரம் கணினியில் உட்காருகிறேன். உங்கள் மறுமொழிக்கு மிகவும் ஸந்தோஷம். நன்றி. அன்புடன்
3.
கீதா | 5:00 முப இல் மே 5, 2021
இதற்கு முந்தைய பார்ட் எல்லாம் வாசிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். கொஞ்சம் இடையில் வாசித்தேன் போலும். அம்மாவின் எண்ணம் வருமே பெண்ணைக் கொடுத்த இடத்தில் ….அந்தப் பகுதி வாசித்த நினைவு…
இப்பகுதி புரிந்தாலும்…முந்தையதும் வாசிக்க வெண்டும் எங்கு அது வருகிறது என்று தெரியவில்லை..பார்க்கிறேன் அம்மா
கீதா
4.
chollukireen | 11:31 முப இல் மே 5, 2021
கீதா நீங்கள் வந்தது பற்றி மிக்க ஸந்தோஷம்.இது பதினாறாவது பதிவு. இன்னும் சிலபதிவுகள் முன்னாடி போனால் கிடைத்து விடும். ஒவ்வொரு திங்கட் கிழமையும் பதிவிட்டு வருகிறேன். ரஸித்ததற்கு மிகவும் நன்றி. தொடர்ந்து வரவும். அன்புடன்