சீஸ்பால்ஸ்
மே 5, 2021 at 12:00 பிப 4 பின்னூட்டங்கள்
சற்று உலர்ந்த Bபிரட்டைப் பொடி செய்து தயாரித்த சிற்றுண்டி இது. சீஸ் யாவரும் விரும்பும் பொருளாகவும் ஆகிவிட்டது. செய்துதான் பாருங்களேன். அன்புடன்
மேலே இருப்பது சீஸ் பால் செய்யஉபயோகப்படுத்திய சில ஸாமான்கள். நல்ல மழை,குளிர் போன்ற ஸமயங்களில் யாவரும் காபி,டீயுடன் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
செய்வது ஸுலபம்தான். இக்காலங்களில் சீஸ் சேர்த்த பண்டங்கள் யாவரும் விரும்பிச் சாப்பிடும் பொருளாகவும் ஆகிவிட்டது. பிரட்,உருளைக்கிழங்கு, சீஸ்,காய்கறிகள்,எண்ணெய் இவை யாவுமே முக்கியப் பொருட்கள். வாங்க நீங்கள் யாவரும். எப்படிச் செய்வதென்று பார்ப்போம். அப்படியே அளவுகளையும்.பார்ப்போம்.
பிரட்ஸ்லைஸ் —3, பெரிய அளவிலான உருளைக்கிழங்கு –2. காப்ஸிகம்1 துருவின சீஸ் மூன்று டேபிள்ஸ்பூன், சிறிது முட்டகோஸ்,பொரிப்பதற்கு எண்ணெய். ருசிக்கு–உப்பு, மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன். பச்சைமிளகாய் அரைத்த விழுது சிறிதளவு
செய்முறை—–பிரட்டை மிக்ஸியிலிட்டுப் மாவாகப்பொடித்துக்கொள்ளவும்.காப்ஸிகம்,கோஸ் இரண்டையும் மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
உருளைக் கிழங்கை நன்றாக வேக வைத்து தோலை உறித்து சூடு இருக்கும்போதே நன்றாக மசித்துக் கொள்ளவும். ஆறினவுடன் பிரட் பொடியில் ஓரளவு பாக்கி வைத்துக்கொண்டு மசித்த உருளைக் கிழங்குடன் பொடியைச் சேர்த்துப் பிசையவும்.மிளகாய் விழுது,உப்பு சேர்த்துக் கெட்டியான பதத்தில் பிசையவும். தண்ணீர் விடக் கூடாது. வேகவைத்த உருளைக்கிழங்கின் ஈரப்பசைக்குப் போதுமான ரொட்டித்தூள் போட்டால் போதுமானது.
அடுத்து பொடியாக நறுக்கிய கேப்ஸிகம்,கோஸுடன் சீஸ்,மிளகுப்பொடி,உப்பு சிறிதுசேர்த்துக் கலக்கவும். இதில் உப்பைக் குறைத்துப் போட்டால் நீர்க்காமல் இருக்கும்.
பிசைந்து வைத்திருக்கும் உருளைக்கலவையில் ஒரு சிறிய எலுமிச்சை அளவு எடுத்து சிறிய கிண்ணம் போல விரல்களால் அகட்டிச் செய்து கொள்ளவும்.
அதில் சிறிதளவு காய்கறிக் கலவையை வைத்து பக்குவமாக மூடி, லேசாக உருட்டி பிரட்பொடியில் லேசாகப் பிரட்டவும்…
View original post 44 more words
Entry filed under: Uncategorized.
4 பின்னூட்டங்கள் Add your own
chollukireen க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
கீதா | 7:47 முப இல் மே 6, 2021
சூப்பர் செய்முறை குறிப்பு அம்மா. நோட் செய்து கொண்டேன்.
மிக்க நன்றி அம்மா
கீதா
2.
chollukireen | 11:37 முப இல் மே 6, 2021
செய்தும் பார்த்துவிடுங்கள்.நன்றி. அன்புடன்
3.
Leslie Pratt | 3:32 முப இல் நவம்பர் 17, 2022
Hi grreat reading your post
4.
chollukireen | 11:49 முப இல் நவம்பர் 17, 2022
மிக்கநன்றி. அன்புடன்