அன்னையர் தினப்பதிவு–17
மே 10, 2021 at 11:20 முப 2 பின்னூட்டங்கள்
அப்பா பூஜையில் உபயோகப்படுத்திய சங்கைப் பார்த்ததில் ஒரு ஆனந்தம். அதனை ஒட்டியே இந்தப்பதிவு நீள்கிறது. அம்மாவின் அந்த ஒருவருஷம். டாக்டரின் ராசி என்று செல்கிறதுஇந்தப் பதினேழாவதுப் பதிவு. நேற்று அன்னையர்தினப்பதிவு முதலாவதை வேர்ட்பிரஸ்ஸே ஞாபகப்படுத்தி இருந்தார்கள் விசேஷப் பதிவினில், படியுங்கள். அன்புடன்
வெள்ளி வேலைப்பாடுகளுடன் கூடிய அப்பாவின் புராதன சங்கு
தாமதமாகத் தொடர்ந்தாலும், ஒரு சங்கின் தரிசனம் பற்றி
எழுதுகிறேன்.
ஒருமாதத்திற்கு முன்னர் என்பிள்ளையின் குடும்பத்தினருடன் புனே போய்
வந்த போது,அவ்விடம்தங்கிய என்னுடையஅம்மா வழி மூன்றுதலை
முறையிலானநெருக்க உறவுகுடும்பத்தினருடன் ஒருநாள் தங்கி இருந்தேன்.
பேச்சுக்கள் எங்கெங்கோ சென்று அப்பாவின் பூஜையில் உபயோகித்த
சிறியஉருவிலான பழமை வாய்ந்த சங்கின் ஞாபகம்வந்தது.
அம்மா, அதை அவர்கள் அப்பாவை பூஜையில் உபயோகித்துக் கொள்ளுங்கள்
எனக் கொடுத்திருந்தார். அதைப்பற்றி விசாரித்தேன்.
அதை பூஜையில் உபயோகிப்பதாகவும், இவ்வளவு பழமை வாய்ந்தது
எனத்தெரியாதெனவும் சொல்லி அதை எடுத்துக் காட்டினார்
.அவரப்பாவின்பூஜையது.
எங்கள் வரவேற்பரையில்
நடராஜருடன் பித்தளைச் சங்கு.
கணவன் மனைவி இருவரும் உத்தியோகத்திலிருந்தாலும், ஆசார சீலமான
குடும்பம்,
அந்தச் சங்கின் தரிசனம் மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. அந்தக் குடும்பமும்
அவர்களின் அன்பும் சொல்ல முடியாத ஆனந்தத்தைத் தந்தது.
பளிங்குக் கல்லிலான
நானும் இருக்கிறேன்.
சங்கை படமெடுத்து வந்தேன். பொக்கிஷமான தரிசனம் அல்லவா?
பின்னாடி வரும் டாக்டரும் பரிச்சயமானதும் அவரின் தாத்தாவிற்கு
வைத்தியம் செய்த போதுதான்.
இது ஒரு ஐம்பது வருஷக் கதை. உன் அப்பா பூஜையில் உபயோகித்தது,
என் அப்பாவின் பொக்கிஷம் என்றுசொல்லிவிட்டு வந்தேன்.
இனி அம்மாவைப் பார்க்கலாம்.
அம்மாவிற்கு எங்கும்,போகவர முடியாத அந்த வொரு வருடம் எப்படிக்
கழிந்தது என்ற போது அதுவும் ஸரியான முறையில்தான்க்
கழிந்தது. என் பெண் அவர்களுடன் இருந்தவளைத் தொடர்ந்து
படிக்க…
View original post 467 more words
Entry filed under: Uncategorized.
2 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
thulasithillaiakathu | 6:48 முப இல் மே 11, 2021
சங்கு பொக்கிஷ சங்கு அழகு! எத்தனை பழமை வாய்ந்தது இன்னமும் பத்திரமாக வைத்து பூஜிப்பது அவர்களின் ஈடுபாடு ஸ்ரத்தையைச் சொல்கிறது.
மற்ற சங்கு படங்களும் ரொம்ப அழகாக இருக்கிறது பளிங்கு செமையா இருக்கு அம்மா..
தொடர்கிறோம்
கீதா
2.
chollukireen | 11:20 முப இல் மே 11, 2021
சங்கு குட்டியானதாக இருந்தாலும் நல்ல இடத்தில் பூஜைக்கு உபயோகமாகிறது குறித்து மகிழ்ச்சிதான் இதை எழுத வைத்தது.ஸந்தோஷம் உங்கள் வரவிற்கு அன்புடன்