காரக்குழம்பு
மே 12, 2021 at 11:37 முப 4 பின்னூட்டங்கள்
எதையாவது மீள் பதிவு செய்யலாம் என்று யோசித்ததில் காரக்குழம்பு கூடவே இருந்தது. பிரமாதமானது இல்லை. ஒரு மாறுதல். நீங்களும் சற்று மாறுதல் செய்து கொள்ளுங்கள். அன்புடன்
சமையல் எழுதியும் வெகு நாட்களாயிற்று. ஏதாவது எழுதுவோம்
என்றுத் தோன்றியது.
சென்னையிலிருந்தபோது என் பெண்ணின் சினேகிதி ஒருவர்
வந்திருந்தாள்.
இது எப்படி,செய்வீர்கள், அது எப்படிச் செய்வீர்களென்று பல வித
குறிப்புகளைக் கேட்டுக் கொண்டே இருந்தாள்.
எனக்கும் கேட்ட விஷயங்களில், சில வித்தியாஸமான அவளின்
சமையல் குறிப்புகளையும் சொன்னாள்.
நமது வழக்கமான குறிப்புகளில் அவர்களது சின்ன வித்தியாஸம்.
நான் காரக்குழம்பு என்ற பெயரில் செய்ததில்லை. மற்றும்
ஹோட்டலில் சாப்பிடப் போனால் கூட இப்படி ஒரு வகையும்
கொடுப்பது தெரிந்தது.
ஸரி இதையும் செய்ததில், நல்ல சுவையுடன் விரும்பிச்
சாப்பிடுவதை பார்க்க முடிந்தது.
ப்ரமாதம் ஒன்றுமில்லை. வெங்காயப்,பூண்டு சேர்மானம்.
பிடித்தவர்களுக்கு ருசி.
வாருங்கள். செய்து ருசியுங்கள். சின்ன அளவில்ச் செய்தது.
அதையே நீங்களும் செய்து பாருங்கள்.
கொதிக்கத் தயார்நிலையில்க் கலவை
வேண்டியவைகளைப் பார்ப்போம்.
அரைப்பதற்கு
வெங்காயம்—-ஒன்று. ஸாம்பார் வெங்காயமானால் எண்ணிக்கையில்
ஏழு அல்லது எட்டு. தோல் நீக்கவும்.
தக்காளிப்பழம்—-ஒன்று
உரித்த பூண்டு இதழ்கள்—5
மிளகு—8.
கரைக்க— புளிஒரு பெரிய நெல்லிக்காயளவு
பொடிகள்
ஸாம்பார்பொடி—1 டீஸ்பூன்
வெந்தயப்பொடி—கால் டீஸ்பூன்.
தாளித்துக் கொட்ட
கடுகு,உளுத்தம் பருப்பு—சிறிதளவு
பெருங்காயம்—சிறிது
மிளகாய் வற்றல்—1
நல்லெண்ணெய்—-4 டீஸ்பூன்.
வாஸனைக்கு—கரிவேப்பிலை
ருசிக்கு—உப்பு.
செய்முறை.
புளியை நன்றாக ஊற வைத்து ஒரு கப் அளவிற்குக் கரைத்துக் கொள்ளவும்.
அரைக்கக் கொடுத்தவற்றை மிக்ஸியில் தண்ணீர் விடாது அரைத்துக்
கொள்ளவும்.
புளித் தண்ணீரில் அரைத்ததைச் சேர்த்துக் கரைக்கவும்.
திட்டமாக உப்பு சேர்க்கவும்.
ஸாம்பார்பொடி,வெந்தயப் பொடியையும் சேர்க்கவும்.
View original post 43 more words
Entry filed under: Uncategorized.
4 பின்னூட்டங்கள் Add your own
chollukireen க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
கோமதி அரசு | 12:04 முப இல் மே 13, 2021
காரக்குழம்பு மிக அருமை.
படங்களும் நன்றாக இருக்கிறது
2.
chollukireen | 11:02 முப இல் மே 13, 2021
வாங்கோ. ஸந்தோஷம், உங்களின் மறுமொழிக்கு.நன்றி. அன்புடன்
3.
கீதா | 3:06 முப இல் மே 18, 2021
அம்மா கார்க்குழம்பு அருமை. அரைக்கக் கொடுத்தவற்றை நான் வதக்கி அரைத்துச் செய்வதுண்டு. இங்கு பச்சையாக அரைத்துச் செய்திருக்கு இல்லையா. இப்படியும் செய்து பார்த்துவிடுகிறேன்.
நன்றி அம்மா
கீதா
4.
chollukireen | 12:13 பிப இல் மே 18, 2021
கண்டதும் கேட்டதும் என்பதுபோல பெண்ணின் சினேகிதி சொன்னக் குறிப்பு. செய்தும் பார்த்தது. இன்னும் மற்றவர்களின் மாறுதல்களும் சேர்ந்த பின்னூட்டங்களுடன்.செய்யுங்கள் ஸந்தோஷம். அன்புடன்