அன்னையர் தினப்பதிவு—20
மே 31, 2021 at 12:06 பிப 2 பின்னூட்டங்கள்
பதிவு இருபதை எட்டி விட்டது. கையில் பணம் காசு எதுவும் ரெடி இல்லை. ஸம்ஸாரி.கல்யாணம் பேச வந்து, இப்போது எதிர் பார்ப்பு எது என்று தெரியாத நிலை. இப்படியும் எதிர்பார்ப்புகள்.ஸாமான்யகுடு்பத்தின் நிலை. அன்புடன்
நான் காட்மாண்டுவிலிருந்த பொழுது வழக்கமாக 2அல்லது மூன்று
வருடங்களுக்கு ஒரு முறைதான் இந்தியா வருவது வழக்கம்.
அதுவும் ராயல் விமான சேவையின் பிளேன்கள் ஏதாவது
ஸாமான்கள் கொண்டுவர தில்லியோ,கல்கத்தாவோ வரும்.
அம்மாதிரி ஸமயங்களில் இலவசமாகப் ப்ளேன் ஸவாரி கிடைக்கும்.
எந்த இடமோ இடமோ அங்கு வந்து அவ்விடமிருந்து இரயில் பிடித்து
எங்கு போக வேண்டுமோ அங்கு போகலாம். பிள்ளைகளின் விடுமுறை
ஸமயம் வந்தால் மட்டுமே நான் வருவேன்.
ஊரில் எல்லோரும் உறவுக்காரர்கள்.
அப்படி முன்பு எப்பொழுதோ போன ஸமயம், அம்மா எங்கள்
உறவினரைக் காட்டி அவர்கள் வந்தபோது, உன் பொண்ணுக்கு உடம்பு
கிடம்பு ஏதாவது வந்து விட்டால், மருந்து மாத்திரை சாப்பிட அப்படி ஒரு
படுத்தல். இவர்களைத்தான் கூப்பிடுவேன்.
சிவனேன்னு நல்ல வார்த்தைகள் சொல்லி இவ கொடுத்து விட்டால்
மாத்திரை மெள்ள உள்ளே போகும்.
அப்படியா மாமி ரொம்ப நன்றி மாமி என்றேன். இதெல்லாம்தான் பெரிய
உதவி என்றேன்.
இதெல்லாம் எப்போது? பெண்ணெல்லாம் சின்னப் பெண்ணாக இருந்த
போது. இதெல்லாம் அம்மா செய்வதைவிட என்ன பெரிசு.
ஒரு வேளை இவ என் மாட்டுப்பெண்ணாக வரப்போகிறாளோ
என்னவோ?
ப்ராப்தம் இருந்தால் அப்படிக்கூட நடக்கலாம் இல்லையா?
இப்போபிடிச்சு என்ன வார்த்தை மாமி!
நாங்களெல்லாம் ஜாஸ்தி படிக்கலே. இவதானே பெரியவோ?
இவளை நன்னா படிக்க வச்சு வேலைக்கு அனுப்பணும்.
கல்யாணம் என்பதெல்லாம் நான் யோசிக்கவே இல்லை.
அதற்குள் அம்மா குறுக்கிட்டு, இப்படியெல்லாம் பதில் சொல்லலாமா?
அதற்கென்ன…
View original post 503 more words
Entry filed under: Uncategorized.
2 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
thulasithillaiakathu - கீதா | 6:22 முப இல் ஜூன் 1, 2021
அனுபவங்கள் அருமை அம்மா.
கீதா
2.
chollukireen | 11:20 முப இல் ஜூன் 1, 2021
திரும்பப் பார்க்கிறேன். இப்படியெல்லாம் கூட ஞாபகம் வைத்து எழுதியிருக்கிறேன். நன்றி. அன்புடன்