டால்.தோலுடன் கூடியபாசிப்பருப்பு
ஜூலை 15, 2021 at 12:05 பிப 2 பின்னூட்டங்கள்
பத்து வருஷங்களுக்குமுன் ஜெனிவாவில் எழுதியக் குறிப்பு இது. பார்த்து வையுங்கள். அன்புடன்
இந்த டாலைப் பயத்தம் பருப்பில் தயாரிப்போம். அதுவும்
தோலுடன் கூடிய பருப்பு. ருசி நன்றாகவே இருக்கிரது.
டால் வகைகளை தோலுடன் கூடிய உளுத்தம் பருப்பிலும்
தயாரிக்கலாம்.
ரொட்டி. பூரி வகைகளுடனும், சாத வகைகளுடனும் சேர்த்தும்
.உண்ணலாம்.
எளிய வகைதான். வேண்டியவைகளைப் பார்ப்போம்.
தோலுடன் கூடிய பயத்தம் பருப்பு—-முக்கால் கப்
பொடிக்க ஸாமான்—மிளகு–அரை டீஸ்பூன்
சீரகம்—1டீஸ்பூன்
லவங்கம்—4
நறுக்க வேண்டியவைகள்—பச்சைமிளகாய்–3
வெங்காயம்—-2
உறித்த பூண்டு இதழ்கள்—4
தக்காளி—1
இஞ்சி—சிறிது
தாளிக்க எண்ணெய், நெய் வகைக்கு 2, 3 டீஸ்பூன்கள்
பிரிஞ்சி இலை—1
சிவப்பு கேப்ஸிகம்—-விருப்பத்திற்கு
பொடிகள்—மஞ்சள்பொடி—1டீஸ்பூன்
மாங்காய்ப்பொடி–1 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி—சிறிது
ருசிக்கு,—உப்பு, துளி சர்க்கரை
செய்முறை— பருப்பைக் களைந்து சற்று ஊறவைத்து, மஞ்சள்ப்
பொடி, தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் ப்ரஷர் குக்கரில்
2விஸில் வரும்வரை வைத்து வேகவிட்டு இறக்கவும்.
பொடிக்கக் கொடுத்த ஸாமான்களைப் பொடிக்கவும்.
வெங்காயம் ,இஞ்சி மிளகாய், பூண்டு வகைகளைப் பொடியாக
நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியைத் தனியாக நறுக்கிக் கொள்ளவும்.
குழம்பு வைக்கும் பாத்திரத்தில் நெய்எண்ணெயைக்காயவைத்து
பிரிஞ்சி இலையைப்போட்டு , வெங்காய வகையாராக்களையும்
சேர்த்து நன்றாக வதக்கவும். சுருள வதக்கி , பொடித்த
பொடியைப்போட்டுப் பிரட்டி நறுக்கிய தக்காளியையும் சேர்த்து
பின்னும் வதக்கவும்.
பெருங்காயம், மாங்காய்ப் பொடி சேர்க்கவும்.
வெந்த பருப்பைச் சிறிது மசித்து தாளிப்பில் சேர்த்து, வேண்டிய
உப்பு, துளி சக்கரை சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.
ஆம்சூர் வேண்டாதவர்கள், எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்.
பொடித்து போடுவது நல்ல வாஸனையைக்…
View original post 47 more words
Entry filed under: Uncategorized.
2 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Revathi Narasimhan | 1:47 முப இல் ஜூலை 17, 2021
மிக நன்றாக இருக்கிறது காமாட்சிமா.
பயத்தம் பருப்பு எல்லோருக்கும் ஒத்துக்கும்.
அருமையான செய்முறை.
நன்றாக இருக்கும். பேரனுக்கு மசாலா சேர்த்த
எதுவும் பிடிக்கும்.
மிக நன்றி மா.
2.
chollukireen | 6:45 முப இல் ஜூலை 18, 2021
மிகவும் நன்றி உடம்பு சரி இல்லாததால் உடனே பதில் போட முடியவில்லை இது என்னுடைய மருமகள் செய்யும் விதம் நன்றி அன்புடன்