வெந்தயக்கீரைப் புலவு
செப்ரெம்பர் 7, 2021 at 11:56 முப 2 பின்னூட்டங்கள்
மிக்க பழைய பதிவு இது. டில்லியில், அதுவும் டிஸம்பரில் இருந்திருக்கிறேனா? எனக்கே நம்ப முடியவில்லை.ஸிம்பிளான பதிவு. படங்களும் அதிகம் இல்லை. ருசிக்கவும். அன்புடன்
இதுவும் சுலபமாகச் செய்யக் கூடிய ஒன்றுதான்.
வேண்டியவைகள்
மெல்லியரக பாஸ்மதி அரிசி—1 கப்
தேங்காய்த் துருவல்—-2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய்—–2 டேபிள் ஸ்பூன்
நெய்—–1 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம்—-1 சிறியதாக நறுக்கவும்
பூண்டு—–2 இதழ்கள் தட்டிக் கொள்ளவும்
பச்சைப் பட்டாணி—அரைகப்
பச்சை மிளகாய்—2 கீறிக் கொள்ளவும்
சற்று பெறியதாக தக்காளிப் பழம்—1 நறுக்கியது
சுத்தம் செய்து நறுக்கிய வெந்தயக் கீரை—-ஒன்றறை கப்
இஞ்சி—-வாஸனைக்குத் துளி
லவங்கம்–2, ஏலக்காய் 1 , பட்டை வெகு சிறியத் துண்டு
இஷ்டத்திற்கிணங்க முந்திரி, திராட்சை
ருசிக்கு—உப்பு
சீரகம்—சிறிது
செய்முறை—- அரிசியைக் களைந்து தண்ணீரை இறுத்துவைக்கவும்
ஒரு கப் செய்ய ப்ரஷர் பேனே போதுமானது.
பட்டை,லவங்கம், ஏலக்காயை ஒன்றிரண்டாகப் பொடிக்கவும்.
பேனில் எண்ணெய், நெய்யைக் காயவைத்து சீரகம் தாளித்து
நறுக்கிய மிளகாய், வெங்காயம்,பூண்டு இஞ்சியை வதக்கவும்
.மசாலாவைச் சேர்க்கவும்
தேங்காயைச் சேர்த்துப் பிரட்டி கீரையைச் சேர்த்து வதக்கி
கீரை வதங்கியபின் பொடியாக நறுக்கிய தக்காளி,பட்டாணி
சேர்த்துக் கிளறி நிதான தீயில் வைத்து அரிசியையும்
சேர்த்து ப் பிரட்டி உப்பும் கால் டீஸ்பூன் சர்க்கரையும்
சேர்த்து ஒன்றறைக் கப் தண்ணீர் விட்டுக் கிளறி மூடி
ப்ரஷர் குக் செய்யவும் ஒரு விஸிலே போதும்.
ஸிம்மில் 2, 3 நிமிஷங்கள் வைத்து இறக்கவும்
முந்திரி, திராட்சையை யும் தாளிப்பிலேயே சேர்க்கவேண்டும்.
தேங்காய்க்குப் பதில் தேங்காய்ப் பால் சேர்க்கலாம்.
சர்க்கரை சேர்ப்பது கலர் மாறாதிருக்க வேண்டியே.
என்ன இஷ்டமோ…
View original post 39 more words
Entry filed under: Uncategorized.
2 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
thulasithillaiakathu | 1:39 முப இல் செப்ரெம்பர் 10, 2021
அம்மா உங்கள் ரெசிப்பி சூப்பரா இருக்கும்மா. இப்படியும் செய்து பார்த்துவிடுகிறேன்.
சில சமயம் ஃப்ரெஷ் கீரை கிடைக்கவில்லை என்றால் காய்ந்த வெந்தயக் கீரை – கஸூரிமேத்தி இலைகள் போட்டுச் செய்வதுண்டு.
நான் தக்காளியும் சேர்த்ததில்லை அது போல் தேங்காயும் சேர்த்ததில்லை. தேங்காய்ப்பால் விட்டுச் செய்திருக்கிறேன்.
மணக்கிறது!!!
மிக்க நன்றி காமாட்சிம்மா
கீதா
2.
chollukireen | 12:05 பிப இல் செப்ரெம்பர் 10, 2021
கீதா செய்யாத வகை உண்டா? கண்டுப்பிடித்துச் சொல்ல யாராவது உண்டா? மணக்கிறது. செய்து விடவும். பெங்களூரில் பச் என்று கீரை கிடைக்கும். ஆமாம். உங்களை எங்குமே பார்க்கவில்லையே. கஸூரி மெத்தி நானும் உபயோகிப்பேன். எழுத்தில் இப்போது எழுதிப் பார்க்கிறேன். அன்புடன்