கணபதியே வருகவருக.
செப்ரெம்பர் 9, 2021 at 12:06 பிப 4 பின்னூட்டங்கள்
இவ்வருஷம் வினாயக சதுர்த்தி மும்பை படங்கள் எடுக்க முடியாது கட்டுப்பாடுகள். தடைகள். வழக்கம்போல படங்கள் 2017 ஆம் வருடப் படங்களை மீள் பதிவு செய்து வணங்குகிறேன். உலகம் நன்மையுறப் பிரார்த்திப்போம் யாவரும். வாழ்த்துகள். அன்புடன்
வாக்குண்டாம் நல்ல மன முண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
மும்பை கணபதிகளின் அணி வகுப்பு. அவ்விடமுள்ள என் மகன் அமெரிக்கா போவதால் முன்கூட்டியே படங்கள் கேட்டிருந்தேன். குறைந்தது படமாவது போடலாமே.
வேழ முகத்து வினாயகனைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்.
வெற்றி முகத்து வினாயகனைத் தொழ புத்தி மிகுத்து வரும்.
அல்லல் போம் வல்வினைகள் போம், அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம் போம் நல்ல குணமதிக
மாமருணைக் கோபுரத்தில் வீற்றிருக்குங்
கணபதிையைக் கொதொழுதக்கால்.
கணபதிியின் அடி பணிந்து யாவருக்கும் நன்மைகள் உண்டாக வேண்டி வணங்குவோம்.
நல் வாழ்த்துகள் யாவருக்கும்.
Entry filed under: Uncategorized.
4 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
thulasithillaiakathu | 11:18 பிப இல் செப்ரெம்பர் 9, 2021
விநாயகச் சதுர்த்தி வாழ்த்துகள் அம்மா.
எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.
படங்கள் அழகாக இருக்கின்றன
வெந்தயக் கீரை புலவு நேற்று வாசிக்க எடுத்து வாசிக்க முடியவில்லை. இன்று பார்த்துவிடுகிறேன் அம்மா
கீதா
2.
chollukireen | 11:39 முப இல் செப்ரெம்பர் 10, 2021
நன்றி. ஸௌக்கியமா? முடிந்தபோது வாசியுங்கள். வேலை பளுவு அதிகமா? உங்கள் வரவு நல்வரவாகுக. அன்புடன்
3.
thulasithillaiakathu | 10:50 முப இல் செப்ரெம்பர் 14, 2021
காமாட்சி அம்மா செய்தி அறிந்தேன். ரஞ்சனி அக்கா சொன்னார்கள். அப்பாவின் ஆன்மா இறைவனடியில் சாந்தி அடைய மனமார்ந்த பிரார்த்தனைகள். வேறு என்ன சொல்ல என்று தெரியவில்லை அம்மா
கீதா
4.
chollukireen | 12:07 பிப இல் செப்ரெம்பர் 14, 2021
பிரார்த்தனைகளுக்கு மிக்க நன்றி அன்புடன்