ராயல் ஃப்ளைட்டும் சாளக்ராம வினியோகமும். 1
ஜனவரி 17, 2022 at 12:44 பிப 10 பின்னூட்டங்கள்
என்னுடைய கணவரின் நினைவாக இதை மீள் பதிவு செய்திருக்கிறேன். கணினி புதியது வாங்கிய பிறகே இதைச் செய்திருக்கிறேன். மிகவும் பின்னோக்கிய வருடங்களின் நினைவுப் பதிவு இது. வசதிகள் குறைந்த காலமது. என் வாசகர்கள் திரும்பப் படிப்பார்கள் என்று நினைக்கிறேன்.எல்லோருக்கும் என் அன்பு. அன்புடன்
சுண்டல் வினியோகம், ஸ்வீட் வினியோகம், ஏழைகளுக்கு புடவை
வேஷ்டிவினியோகம், தற்காலத்தில் ஸ்கூல் பசங்களுக்கு இலவச
லேப்டாப் வினியோகம், எலக்க்ஷன் காலத்தில் என்னென்னவோ
பலவித எலெக்டிரிக் ஸாமான்கள் இலவசம் இதெல்லாம்தான்
எல்லோருக்கும் தெரியும்.
எங்களின் காட்மாண்டு வாஸத்தின் போது வித்தியாஸமான ஸாளக்ராம
வினியோகம் செய்யும்படி ஒரு நேரம் அமைந்தது.
ராயல்ஃப்ளைட்டின் சேவையா, எங்கள் வீட்டுக்காரரின் சேவையா?
எதிர் பாராத விதமான காலகட்டம். எதுவும் நடந்திருக்கலாம்.
இப்பவும் யாராவது கேட்டால் முடிந்தபோது வாங்கிக் கொடுக்க
முயற்சிக்கிறோம். என் வீட்டுக்காரரின் அனுபவம்தானிது.
முதலில் ராயல்ஃப்ளைட்.
என்னுடைய பிள்ளைகள் ஆகாயத்தில் ஃப்ளைட் சப்தம் கேட்டவுடனே
அப்பா -ப்ளைட், ஆவ்ரோ, டகோடா, ஹெலிகாப்டர், பெல் என பார்க்காமலே
அதன் பெயரை நான் ஃபஸ்ட், நீ ஃபஸ்ட் என போட்டி போட்டுக்கொண்டு
சொல்வார்கள். அப்பா வேலை செய்யும் ப்ளேன் அவர்களுடயதாக எண்ணம்.
ராயல்ப்ளைட்டுடா அப்பாது இல்லை. என்ன சொன்னாலும் அவர்களுக்கு
அப்பா ப்ளேன்தான்.
ராஜ குடும்பத்திற்கான ப்ளேன்கள், டகோடD.C 3இ ல் ஆரம்பமாகிஆவ்ரோ,
ட்வின் ஆட்டர்,ட்வின் பைனர்,ஹெலிகாப்டர்கள் எல்யூட், பெல்,பூமா, என
வந்து கொண்டிருந்தது. வருடங்கள் ஸரியாக ஞாபகமில்லை. 1970 என்ற வருஷத்தின் பின்னாக இருக்கலாம்.
அப்பொழுதெல்லாம் முக்தி நாத்திற்குப் போக ப்ரைவேட் ஏர்லைன்ஸ் வசதி
எதுவுமில்லை என்றே நினைக்கிறேன்.
ராஜ குடும்பத்தினர் ஸவாரி, அதுதான் பிரயாணம் செய்யும் போது,எங்கு
போகவேண்டுமானாலும் விமானம், உள்ளே அலங்கரிக்கப்பட்டு விசேஷ
வசதிகளுடன் மாறுதலாகிவிடும்.
ஸவாரி இல்லாத நாட்களில், கார்கோவாக மாற்றி விடுவார்கள்.
View original post 195 more words
Entry filed under: Uncategorized.
10 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
கோமதி அரசு | 1:52 பிப இல் ஜனவரி 17, 2022
நினைவுகள் அருமை அம்மா.
2.
chollukireen | 4:38 பிப இல் ஜனவரி 17, 2022
கணினி சரி இல்லாததால் எதுவும் பதிய முடியவில்லை நன்றி அன்புடன்
3.
ஸ்ரீராம் | 1:57 பிப இல் ஜனவரி 17, 2022
சுவாரஸ்யமான தகவல்கள்.
4.
chollukireen | 4:36 பிப இல் ஜனவரி 17, 2022
ஐந்து பதிவுகள் இருக்கின்றது மிக்க சந்தோஷம் அன்புடன்
5.
கீதா | 2:30 பிப இல் ஜனவரி 17, 2022
சுவாரஸ்யமான தகவல்கள், இனிமையான நினைவுகள்! காமாட்சி அம்மா.
சிறு பிள்ளைகளுக்கு எப்படித்தான் தெரிகிறதோ வண்டிகளின் சத்தம் வைத்தே என்ன வண்டி என்று சொல்வது எல்லாம்…
ஆச்சரியமான விஷயம் உங்கள் குழந்தைகள் ப்ளேனைச் சொன்னது.
கீதா
6.
chollukireen | 4:41 பிப இல் ஜனவரி 17, 2022
இந்த பதிவை பிரசுரிக்க கூட எவ்வளவு நாள் முடியவில்லை என்று தான் முடிந்தது உன்னுடைய பாராட்டுதலுக்கு மிக்க நன்றி அன்புடன்
7.
நெல்லைத்தமிழன் | 2:31 முப இல் ஜனவரி 18, 2022
சுவாரசியமாகச் செல்கிறது.
நேபாளம் என்றால் சாளக்ராம்ம்தான் நினைவில் வரும். அடுத்தது காத்மண்டு பசுபதிநாதர் கோவில்.
8.
chollukireen | 11:30 முப இல் ஜனவரி 18, 2022
இதுவித்தியாஸமாக இருக்கும். என் கணவரின் ஞாபகமாக அவரின் அனுபவத்தின் வித்தியாஸமான ஒரு பகுதி இது. நன்றி. அன்புடன்
9.
துளசிதரன் | 11:12 முப இல் ஜனவரி 18, 2022
மிகவும் வித்தியாசமான விஷயங்கள் சுவாரசியமாக உள்ளது. தொடர்கிறேன்
துளசிதரன்
10.
chollukireen | 11:36 முப இல் ஜனவரி 18, 2022
உங்களை என் தளத்தில் பார்க்க எனக்குச் சொல்ல முடியாத அளவு ஸந்தோஷம் ஏற்பட்டது.நன்றிஅன்புடன்