ராயல்ஃப்ளைட்டும் சாளக்ராம வினியோகமும்.3
ஜனவரி 31, 2022 at 12:16 பிப 4 பின்னூட்டங்கள்
நிகழ்வுகள் எழுதுவது நான் இல்லையா!அந்த கால கட்டத்தில் என் எண்ணங்களின் போக்கும் கூடவே வருகிறது. பாருங்கள். படியுங்கள். வேறு நான் என்ன சொல்லப் போகிறேன். அன்புடன்
நமக்கு ஜும்ஸும் போனவர்கள் திரும்ப வந்தால்ப் போதுமென்றாகி
விட்டது. ராயல் ஃப்ளைட் கன்ட்ரோலருக்கோ அவ்விட விபத்துக்கு
ஆளான விமான பாகங்களைக் கொண்டு வரவேண்டும். அதற்காக
பின்னும் பட்ஜெட் போடாமல் இருப்பவர்களை அங்கேயே மேலும்
சில நாட்கள் தங்கவைத்து, மராமத்துப் பணிகளுக்கு அவர்களை உபயோகித்து
காப்டரை பாதுகாத்து மேலும் சில ட்ரிப்புகள் செய்து ராயல் ஃப்ளைட்டுக்கு
ஆதாயம் கொடுக்க தீர்மானம் செய்து விட்டார்.
ஸரி யாருக்கு முக்திநாத் போகவேண்டுமோ நான் ஏற்பாடு செய்கிறேன்.
போய்வாருங்கள் என்று சொல்லி விட்டார்.
குஷிக்கு கேட்க வேண்டுமா?
அப்பொழுதெல்லாம், குதிரையோ,இல்லை,இல்லை கோவேரி கழுதைன்னு,மட்டக் குதிரை என்று
தான் சொல்ல வேண்டும். அதனுடன் ஒரு ஆள் வருவான். சில இடங்களில்
அதன்மேல் உட்கார வைத்தும், கூட துணையாகவும் வந்து எல்லா இடங்களுக்கும் அழைத்துப் போய் திரும்ப மாலை வந்து சேர்ந்து விடுவார்கள்.
இப்படிக்,கும்பல்,கும்பலாக ஆட்கள் முக்திநாத் சென்று வருவார்களாம்.
அந்தக் கூட்டத்துடன் பாலஸில் வேலை செய்பவர்கள் என்ற விசேஷ
மரியாதைக்குரியவர்களாக இவர்களுக்கு வேண்டியதெல்லாம் வசதி
கொடுத்து, சாளக்ராமங்கள் அவ்விடம் சேகரித்திருந்தால் அதையும் சேர்த்து
கொடுத்தனுப்பும் படி விசேஷ V.I.P.ஆக 4,5 பேருக்கு போவதற்கு ஏற்பாடு
ஆகி விட்டது. விஷயங்களும் எங்களுக்கு சொல்லியனுப்பினார்கள்.
ஆக முக்திநாத் போய் சாளக்ராமம் வரப்போகிறது.
அப்படி என்ன ஸந்தோஷமா?
என்தகப்பனார் பஞ்ஜாயதன பூஜை செய்பவர்.
ஆதித்யம்அம்பிகாம் விஷ்ணும், கணநாதம், மஹேச்வரம் என்று,அபிஷேக
பூஜை,ஆராதனை,நிவேதனம், தீர்த்தம் கொடுத்தல், என முறைப்படி
யாவும் நடைபெறும்,
வயதான…
View original post 257 more words
Entry filed under: Uncategorized.
4 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ஸ்ரீராம் | 12:59 பிப இல் ஜனவரி 31, 2022
முக்திநாத்துக்கு எல்லாம் முன்னரே போய் வந்திருக்கலாமே என்று இப்போது தோன்றுகிறது!
2.
chollukireen | 12:11 பிப இல் பிப்ரவரி 1, 2022
அதனாலென்ன. இப்போது வசதிகள் அதிகம் இருக்கிறது.போய்வர வசதிதான். நல்ல வெயில் காலத்தில் போய்விட்டு வரலாமே. அன்புடன்
3.
geetha | 4:27 முப இல் பிப்ரவரி 1, 2022
தகவல்கள் சுவாரசியம். முக்திநாத் போக வேண்டும் என்ற ஆவல் உண்டுதான் ஆனால் சில சமயம் அது ரிஸ்கியாகிவிடுகிறது. எங்கள் குடும்பத்தில் இரு குழுக்கள் சென்ற போது ஏற்பட்டதைக் கேட்டு அப்படி ஒரு அபிப்ராயம். என்றாலும் செல்ல ஆசை உண்டு இயற்கையை பிரம்மாண்டத்தைக் காண.
கீதா
4.
chollukireen | 12:16 பிப இல் பிப்ரவரி 1, 2022
வேளை வந்தால் எல்லாம் கிடைக்கும். நான் கூட இதுவரை போகவில்லை. எங்கள் பேத்திகள்வரை போய்வந்துள்ளனர். பிராப்தம் என்பது வேண்டும் போலுள்ளது. அன்புடன்