ராயல் ஃப்ளைட்டும் சாளக்ராம வினியோகமும் 4
பிப்ரவரி 7, 2022 at 12:28 பிப 2 பின்னூட்டங்கள்
இன்று என் கணவரின், தமிழ்மாத காலண்டர்ப்ரகாரம் 5மாதங்கள் முடிவுறுகிறது. இந்தப் பதிவில் முக்தி நாத்திலிருந்து சாளிக்கிராமங்களுடன் வீடுவந்து சேர்ந்த விஷயமும் வருகிறது.நல்லது. அடுத்த பதிவில் பகிர்ந்துவிட்டு முடித்துவிடுகிறேன்.படியுங்கள் அன்புடன்
முக்திநாத் போனவர்கள் நல்ல முறையிலேயே வழியைக் கடந்து
நல்ல குளிர் உள்ள போதும் ஸரியான ஸமயத்தில் கோவிலில்
தரிசனம் செய்து கொண்டு அவ்விடம் தாராக்களில் வரும், தண்ணீரில்
குளித்தார்களா, அப்படியே தண்ணீரை ப்ரோக்ஷணம், செய்து
கொண்டோ எப்படியோ கையில் ப்ரஸாதங்களையும் வாங்கிக்கொண்டு
முக்கியமாக அவ்விடம் தெரிந்த நபர் பெற்றுக் கொடுத்த,சாளக்ராமங்கள்
கொஞ்சமாக இல்லை!!! வாரிக் கொடுத்து வழியனுப்பினர்.
நிறைய பைகள் கொள்ளாது ஒவ்வொருவருக்கும், நாமா சுமக்கப்
போகிறோம். நம்முடன் வரும் குதிரை சுமக்கப் போகிறது என்று
சொல்லிக் கொண்டே யாவரும் மிக்க ஆனந்தத்துடன் வரும் வழியில்
கூட துணைக்கு வந்தவர்கள் காட்டிய இடங்களில் கண்டகி நதியில்
சாளக்ராமங்களையும பொருக்கிக் கொண்டு, ஜன்ம சாபல்யம் அடைந்தோம். நினைத்துப் பார்க்க முடியாத ஒரு இடம்.
முக்திநாத் பெயர் தெரியுமே தவிர அவர் விஷ்ணுவா, சிவனா என்று
கூட தெரியாது. அதிருஷ்டம் இருந்து இவ்விடம் வந்து போகிறோம்
என்று நினைத்துப் பேசியதை, பிறகு சொன்னதை இந்த வரிஎழுதும்போதுஞாபகப் படுத்திக் கொள்கிறேன்.
இங்கே காட்மாண்டுவில் ஒரு பழைய விங்கை செங்குத்தாக
ஹெலிகாப்டரில் தொங்கும் படியாக பொருத்திக்கொண்டு
கன்ட்ரோலரின் ப்ளைட் மேலே,மேலே போய்க்கொண்டிருக்கிறது.
ஹெலிகாப்டரிலிருந்து ஆபத்துக் காலங்களில் கீழே உள்ளவர்களைக்
காப்பாற்றுவதை எல்லாம் பார்த்திருப்பீர்களே!!
எந்த ஒரு பொருளையும் நான்கு புறமும் ஸபோர்ட் செய்து
ஊஞ்சல் மாதிரியோ, தராசு மாதிரியோ கட்டித் தூக்கினால்தான்
அலைக்கழியாது இருக்கும். ஒத்தையாக இருந்தால் மனம் போன போக்கில் ஊசலாடுமே தவிர ஒத்து வராது…
View original post 415 more words
Entry filed under: Uncategorized.
2 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
geetha | 11:22 முப இல் பிப்ரவரி 8, 2022
சாளக்ராமம் அழகாக இருக்கிறது. விவரணமும் நன்று
பழைய பதிவையும் முழுவதும் வாசித்துவிட்டேன் பைரவ குட்டிகள் வந்ததும் சேர்த்து!!!
கீதா
2.
chollukireen | 11:49 முப இல் பிப்ரவரி 10, 2022
நன்றி உங்களுக்கு. அழகான குட்டிஞாபகம் வருதே ஞாபகம் வருதே. அன்புடன்