என்ன பிரஸாதம்?எப்படி?
பிப்ரவரி 10, 2022 at 12:05 பிப 2 பின்னூட்டங்கள்
பிிரஸாதம் எப்படி இருக்கிறது. உங்களுக்கும் ஒரு ஸாம்பிளுக்குத்தான்.இதுவும் ஒரு மலரும் நினைவுகளில்தான் சேர்த்தி.ருசித்துச் சொல்லுங்கள். அன்புடன்
பூஜை அறை. வரலக்ஷ்மி மற்றும் படங்கள்
லக்ஷ்மி பூஜை படமிருந்தது. நீங்களும் தரிசியுங்கள்.
பஜனைக்கு வரவர்கள் சாயங்காலமே புறப்பட்டுவந்து லேட்டாக
போவதை உத்தேசித்து எல்லோருமேகொஞ்சம் வயிறு
நிறையும்படி ப்ரஸாதம் செய்து வினியோகிக்க விரும்புவார்கள்.
மேலும் வெளியூர் படியாக பணம் கூட கிடைத்ததால் யாருமே
இதனை ஒரு பெறிய சிலவாக யோசிப்பதில்லை என்பது அங்கு
யாவரின் அபிப்ராயமாக இருந்தது.
பூண்டு, வெங்காயமில்லாத, ஏதாவது ஒரு பாத், டால்டா
கலப்பில்லாத ஒரு இனிப்பு , ஒரு சுண்டல். இருக்கவே இருக்கும்
நிவேதனமான வாழைப்பழங்கள்.
ஹூக்லி கரையோரம் பாரக்பூர். அக்கரைக்கு படகில் போனால்
சுராபுளி என்ற இடம். வாழைப்பழங்கள், வாழைஇலை,
காய்கறிகள் என எல்லாம் மலிவாகக் கிடைக்கும். யாராவது
போவார்கள். நிறைய வாங்கி வந்து எல்லோரும் பாகம் போட்டு
வாங்கிக் கொள்வார்கள். கேட்கணுமா?
மண்டலிக்கென்று சில பெறிய அலுமினியப் பாத்திரங்கள் உண்டு.
அடுப்புதான் சற்று கேள்விக்குறி? காஸ்,மைக்ரோவேவ்,அவன்
இதெல்லாம் வரவுமில்லை. தெறியவும் தெறியாது.
நான்தான் எப்பவும் செய்து கொண்டிருந்தேனா?
அதுவும்தான் இல்லை. யார்வீட்டிலாவது செய்து எடுத்து
வருவார்களாகத்தானிருக்கும்.
முதலில் இரண்டு முறை பாரக்பூர் அவுட் ஸ்டேஷன் போன
போது நான் பஜனைக்குப் போனதில்லை. கொஞ்சம் துலைவு.
ஆனால் போனவர்கள் ப்ரஸாதம் கொண்டு வருவதில்
கொடுப்பார்கள்.
எப்படியோ மூன்றாவது முறை அதே ஊர் வந்தபோது இருக்க
ஒரு போர்ஷன் பஜனைமண்டலியின் பக்கத்திலேயே கிடைத்தது.
நாங்களும் ஒருநாள் பஜனைச் சிலவை செய்ய உத்தேசித்து
ப்ரஸாதமும் நாங்களே செய்தோம்.
அப்புறம் …
View original post 422 more words
Entry filed under: Uncategorized.
2 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
geetha | 1:03 பிப இல் பிப்ரவரி 11, 2022
அந்தக்காலத்தில் மண்டலி எனும் போது அதுவும் வடக்கே சேர்ந்துதானே செய்ய முடியும் இல்லையா. நல்ல அனுபவங்கள்.
கீதா
2.
chollukireen | 11:01 முப இல் பிப்ரவரி 12, 2022
ஒரு நான்கு வருஷங்கள் இந்த அனுபவம் தொடர்ந்தது எவ்வளவு ராதா கல்யாணம் முதலானவைகள் மண்டலி என்பது கன்னட சொல்லாக இருக்கலாம் அவ்விடம் பெங்களூர் ஊர்க்காரர்கள் அதிகம் எவ்வளவு அழகான மனதிற்கு நிம்மதி யான ஒரு காலம் மனதில் நினைத்தேன் அசைபோடுவது இந்தக் காலம் எனக்கு மறுமொழிக்கு மிகவும் நன்றி அன்புடன்