ராயல்ஃப்ளைட்டும் சாளக்ராம வினியோகமும்.5
பிப்ரவரி 14, 2022 at 12:26 பிப 2 பின்னூட்டங்கள்
சாளகிராமத்திற்கும் ராயல் ஃபிளைட்டிற்கும் என்ன உறவு புரிந்ததா? இப்படியெல்லாம் எழுதிய இந்தப்பதிவு அவரின் ஞாபகமார்த்தப் பதிவாக இப்போது பதிவாகிறது.சாளக்ராம வினியோகம் . அன்புடன்
இந்த ஒருமாதமாக என்ன செய்தீர்களென்று கேட்கிறீர்களா?
அக்கம்,பக்கம், அரிந்தவர்,தெரிந்தவர்கள் இப்படி யாவரின்
விசாரிப்புகளும், நல்லபடி வந்து சேர்ந்ததற்கு ஸந்தோஷமும்
தெரிவித்த வண்ணமிருந்தனர்.
எங்களுக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் C.P.W.D. இல் வேலை
செய்பவர் I.c.mஇல் காட்மாண்டுவில் வேலை செய்து கொண்டு
இருந்தார். வழிவழியாக தலைமுறை,தலை முறையாக நல்ல
பூஜை,புனஸ்காரங்கள் செய்து பழக்கப் பட்டவர்கள்
குடும்பத்தைச்சேர்ந்தவர். அவரும் விடாது
பூஜைகள்செய்பவர்.அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு
சாளக்ராமம் வேண்டும் என்று சொன்ன போது, முன்னதாகவே
நான் கேட்டிருந்தேன். என்ன செய்யலாமென்று.
திருப்பதி போய்வந்தால்,வேங்கடாசலபதிக்கும், காசி,ராமேசுவரம்
போய்வந்தால், கங்கையை வைத்து ,பூஜை,ஸமாராதனைகள்
செய்வது போல இதையும், அப்படியே அபிஷேக ஆராதனைகள்
முடிந்த அளவு செய்து, வேண்டியவர்களுக்கு கொடுங்கள் என்று
சொல்லி இருந்தார்.அப்படி செய்வது நல்லதென்றும் சொன்னார்.
அதை ஞாபகப்படுத்தி அவரையே நம் வீட்டிற்கு வந்து நல்லபடி
பூஜையை முடித்துக் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்
கொண்டதற்கிணங்க அவரும் வந்தார். மற்றும் சில
குடும்பங்களையும் கூப்பிட்டோம்.
கூப்பிட்ட யாவரும் வந்து புஷ்பங்களும், பாலும்,பழங்களுமாக
நிரப்பி ஒரு பக்தி பூர்வமாக அருமையான ஸமாராதனையாக
நடத்திக் கொடுத்தனர்.
மந்திர பூர்வமாக, அபிஷேகங்களும்,அர்ச்சனைகளும்
வந்தவர்களுக்கும்,மனம் நிறைந்த ஒரு ஸொந்த
வீட்டு பூஜை,புனஸ்காரம் மாதிரி உணர்ந்தார்கள்.
வீட்டு,ஸமாராதனையாக ஒரு ஸந்தோஷத்தைக் கொடுத்தது.
இதற்கு முன்னரே, சாளக்ராமங்களைப் பற்றிய அனுபவம் உள்ள
ஒரு பெரியவரிடம் வகை பிரித்துக் கொடுக்கும்படி கேட்டோம்.
கைக்கடக்கமானவைகள்தான் வீட்டில் வைத்து பூஜிப்பதற்குச்
சிரேஷ்டமானது.
பெரிய அளவுள்ளவைகள் கோவிலுக்குக் கொடுத்து விடுங்கள்,
என்று சொன்னவர்,சங்கு சக்கரம் உள்ளவைகள்…
View original post 369 more words
Entry filed under: Uncategorized.
2 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
geetha | 8:38 முப இல் பிப்ரவரி 15, 2022
சாள்கிராமம் பற்றிய உங்கள் அனுபவங்கள் செம சுவாரசியம். முழு பதிவையும் வாசித்தேன் உங்கள் சதாபிஷேகத்தில் தானம் செய்தது எல்லாம்.
ஆமாம் சாளக்கிராமத்தில் வகைகள் உண்டு.
நிறைய கிடைத்திருக்கிறதே! விவரங்கள் அனைத்தும் வாசித்தேன் நல்ல சுவாரசியமான அனுபவம் தான்!!
கீதா
2.
chollukireen | 12:18 பிப இல் பிப்ரவரி 15, 2022
என்னுைடைய அனுபவத்தை நீங்களும் வாசித்து அனுபவித்தமைக்கு மிகவும் நன்றி. அன்புடன்