அக்ரூட் சட்னி.
பிப்ரவரி 17, 2022 at 12:43 பிப 8 பின்னூட்டங்கள்

இன்று புதுவிதமான ஒரு சட்னி வகையை உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போகிறேன்.இது என் பேத்தி செய்வதைப் பார்த்தேன்.. எனக்குப் புதுமாதிரியாகத் தோன்றியது. இது தோய்த்துச் சாப்பிடுவதற்கானது. பச்சைப் பசேலென ஸுலபமாகத் தயாரிப்பது. மாதிரிக்குப் பண்ணி படங்களுடன் கொடு என்று கேட்டேன். நீங்களும் முயற்சிக்கலாமே!
படங்களுடன் பார்க்கவும் நன்றாக இருக்கிறது. பேத்தி விலாஸினியின் குறிப்பு இது.
வேண்டியவைகள்.



அக்ரூட் பருப்பு—–6. ஆய்ந்த பாலக்கீரை மூன்றுகைப்பிடி, பூண்டு ஒரு இதழ் [பல் 1]
மிளகாய்ப் பொடி—-1/4 டீஸ்பூன், கஸூரிமெத்தி 1/4டீஸ்பூன்,உப்பு ருசிகு ஏற்ப,
வினிகர் 1 டேபிள் ஸ்பூன், பச்சைக் கொத்தமல்லி இலைகள் விருப்பத்திற்கு ஏற்ப.
வினிகர் பிடிக்காதவர்கள் எலுமிச்சை சாறு உபயோகிக்கலாம்.
செய்முறை.
பாலக் கீரையை இலைகளாகத் தேர்ந்தெடுத்துத் தண்ணீரில் சுத்தம் செய்து வடிய வைக்கவும். நான்கு நிமிஷங்கள் மைக்ரோ வேவ் செய்து கொள்ளவும். இல்லாவிட்டால் சிறிது தண்ணீர் தெளித்து, வேக வைத்து எடுக்கவும்.



மிக்ஸி கன்டெய்னரில் அக்ரூட் பருப்பை பொடித்துக் கொள்ளவும்.
அதனுடன்பாலக்கீரை,பூண்டு,கொத்தமல்லி இலை,கஸூரிமெத்தி , முதலானவைகளைச், சேர்த்து அரைக்கவும். தண்ணீர் விடவேண்டாம்.
அரைத்த விழுதுடன் உப்பு ,மிளகாய்ப்பொடி, வினிகர் அல்லது எலுமிச்சை சாறு கலக்கவும். அக்ரூட் சட்னி தயார். உப்பு ,காரம் ஸரியாக இருக்கிறதா பார்த்து , வேண்டியவைகளை அதிகமாக்கவும். ஒரு அழகான அகலமான கிண்ணத்தில் ,எடுத்து வைக்கவும்.
ரெடியாக டேபிளில் வையுங்கள்.டோஸ்ட்செய்த பிரெட்,சீஸ்,டோக்லா, பஜ்ஜி வகைகளுடன் தோய்த்துச் சாப்பிட நன்றாக இருக்கும்.
ருசி பாருங்கள். தற்கால சட்னி இது.அக்ரூட் ருசியுடன் இருக்கும்.

Entry filed under: சட்னி வகைகள், Uncategorized.
8 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ஸ்ரீராம் | 12:59 பிப இல் பிப்ரவரி 17, 2022
அக்ரூட் போட்டு சட்னியா? அட..
துணைப் பொருட்கள்தான் சுவையைக் கூட்டுமோ…
2.
chollukireen | 1:19 பிப இல் பிப்ரவரி 17, 2022
சாதத்தில் பிசைந்து சாப்பிடுவதற்கல்ல இது.துணைதானிது. கூட்டும் கூட்டும். மனமிருந்தால். அன்புடன்
3.
Geetha Sambasivam | 1:54 பிப இல் பிப்ரவரி 17, 2022
Super amma
4.
chollukireen | 11:50 முப இல் பிப்ரவரி 18, 2022
உங்கள் மறுமொழிக்கு மிகவும் நன்றி. இதே பதிலை 3, 4 முறை ஸெல் மூலம் அனுப்பியும் அது போகவில்லை. இப்படித்தான் ஏதாவது ஆகிக்கொண்டே உள்ளது. அன்புடன்
5.
Geetha Sambasivam | 1:06 முப இல் பிப்ரவரி 18, 2022
இதுக்கு என்னோட கருத்தை மொபைல் மூலம் பதிவு செய்ததில் போய் விட்டது. இப்போ இங்கே பார்க்கணும். சட்னி செய்து பார்க்கிறேன் அம்மா.
6.
chollukireen | 11:57 முப இல் பிப்ரவரி 18, 2022
செய்து பார்ப்பதாக எழுதினது ஸந்தோஷம். என்னால் எதுவும் செய்ய முடியாது. எல்லாம் கேட்டு வாங்கிப்போடும் விஷயங்கள்தான். பிளாகை இருப்பதாகக் காட்டிக் கொள்ள ,என்மாதிரி மருந்துகளுடன் உலா வருகிறது. நிச்சயம் நன்றாக இருப்பதைத்தான் எழுதுகிறேன். மிக்க நன்றி. அன்புடன்
7.
geetha | 9:02 முப இல் பிப்ரவரி 19, 2022
அம்மா சூப்பர் சட்னி இதுவரை இப்படிச் செய்ததில்லை. பாதாம் முந்திரி போட்டுச் செய்ததுண்டு, தேங்காய், பச்சைமிளகாய் எல்லாம் போட்டு நார்மலாகச் செய்யும் சட்னி.
ஆனால் இப்படி பாலக் சேர்த்துச் செய்ததில்லை.
கண்டிப்பாகச் செய்து பார்த்துவிடுகிறென். வித்தியாசமான சட்னி!
மிக்க நன்றி அம்மா
கீதா
8.
chollukireen | 12:37 பிப இல் பிப்ரவரி 19, 2022
நான் ருசித்ததைத்தான் எழுதினேன். சுலபமான ஸாமான்கள். அதிகவேலையில்லை. பார்த்துச் சொல்.மிக்க ஸந்தோஷம். அன்புடன்