சிவராத்திரி மகிமை
பிப்ரவரி 28, 2022 at 12:19 பிப 2 பின்னூட்டங்கள்
நாளை மார்ச் முதல்தேதி 1-3-1922 மஹா சிவராத்திரி. முன்னாடி எழுதிய பதிவு ஒன்றை மீள்ப் பதிவு செய்கிறேன். உலகெலாமுணர்ந்து ஓதற்கறியவன்
நிலாவுலாமலி நீர்மலி வேணியன்
அலகில் ஜோதியன் அம்பலத்தாடுவான்
மலர்ச் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்.
அன்புடன்
சிவனுக்குகந்த தினம் சிவராத்திரி
.தேவியைப் பூஜை செய்ய நவராத்திரி ஒன்பது தினங்களைப்போல் இல்லாவிட்டாலும்சிவராத்திரி ஒரு தினமே சிவனுக்கு மிகவும் மகத்துவமானது. சிவனுக்காக விசேஷமான தினங்கள் ஏராளமாக உள்ளது. ஆயினும் இந்த சிவராத்திரி எல்லா சிவன் கோயில்களிலும், அவரவர்கள் வீடுகளிலும் பூஜித்துக் கொண்டாடப் படுகிறது. இளைய ஸமுதாயங்கள் சற்று விதி விலக்காக இருக்கலாம். ஆனால் கிராமங்களில் சிறுவர் சிறுமியர்கள் கூட அவரவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து ,பூஜை,பாட்டு என்று பாடிக் கொண்டாடுவது ஞாபகம் வருகிறது. இரவு முழுதும் கண் விழித்து பக்தியை அப்போதே சிறுவர்களுக்கு ஊட்டப் படுவதும் மனதை விட்டு அகலவில்லை.
காட்மாண்டு சுபதீசுவரர் கோவிலில் சிவராத்திரி வெகு விசேஷமாகக் கொண்டாடப் படும். நேபாளத்திலேயே மிகவும் உயர்வான சிவனைப் பற்றிய விசேஷக் கொண்டாட்டமது. வெகு வருஷங்கள் அவ்விடம் வசித்தபடியால் நேபாளத்தைப்பற்றி குறிப்பிடாதிருக்கவே முடிவதில்லை.ஸாதுக்கள் கூட்டம்சொல்லிமாளாது.
பசுபதீசுவரருக்கு நான்கு திசையில் நான்கு முகங்கள், உச்சியில் ஒன்று என ஐந்து முகம் கொண்ட ஸதா சிவமாக விளங்குபவர். நான்கு முக எதிரிலும் நான்கு வாயில்கள் உள்ளன. எதிரில் பிரும்மாண்டமான உலோகத்தினாலான நந்தியின் சிலை உள்ளது. தென்னிந்திய கர்னாடக பட்டாக்கள்தான் பூஜை செய்கின்றனர்.பிரஸாதமாக அன்றன்று அரைத்த சந்தனம் வழங்கப்படும். நான்கு ஜாமங்களிலும் அபிஷேக அலங்காரம் சொல்லி மாளாது.
மாசிமாத கிருஷ்ணபக்ஷ சதுர்தசியில் இரவு நேரத்தில் நான்கு ஜாமங்களாகப் பிரித்து , அபிஷேக ஆராதனைகளுடன் சிவராத்திரி பூசைகள் நடக்கிறது. அன்று கண் விழித்திருந்து, விரதமிருந்து, இறைவனை வணங்கும்போது, முழுமையான பக்தி…
View original post 224 more words
Entry filed under: Uncategorized.
2 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
geetha | 10:11 முப இல் மார்ச் 1, 2022
அம்மா பசுபதீஸ்வரர் கோயில் பத்தி சொல்லியதை ரசித்து வாசித்தேன். எனக்கு ஊர்கள் பற்றித் தெரிந்து கொள்வது ரொம்பப் பிடிக்கும்.
ரசித்து வாசித்தேன் சிவராத்திரி பதிவை
2.
chollukireen | 11:54 முப இல் மார்ச் 1, 2022
ரஸித்து வாசித்தேன் சிவராத்திரி பதிவை. கீதா.நானும் ரஸித்தேன் உன் பதிலை. அக்கரை இருந்தால்தான் ரஸிக்க முடியும். மிக்க நன்றி. அன்புடன்