ஹலோ, ஹலோ,ஹலோ
மார்ச் 7, 2022 at 12:29 பிப 2 பின்னூட்டங்கள்
திங்கட் கிழமைகளில் மீள் பதிவாக 1913 இல் எழுதிய கதை ஒன்றைப் பதிவு செய்கிறேன். இரண்டு பதிவுகளாக எழுதியது. முதல்ப் பதிவை இன்றும் வியாழனன்று அடுத்தப் பதிவையும் பதிவிடுகிறேன். படித்துப் பார்த்து உங்கள் அபிப்ராயம் என்ன சொல்லுங்கள்.
ட்ரிங்-ங் ட்ரிங், ட்ரிங்
யாரா இருக்கும்
வீட்லே யாரும் இல்லே, எடுத்துதான் ஆகணும். ஹலோ
ஓ நீங்ளா. எப்போ போன் செய்தாலும் ஏதோ காரியமா,இருக்கிங்கோ
சித்த நாழி கழித்து போன் பண்ணுங்கோன்னு பதில் சொல்ரா,
என்ன தான் பண்றெங்கோ?
பண்றதென்ன இருக்கு? மேலேர்ந்து வந்து சொல்லணும்.
அவர்கள் பிஸி. என்னையும், பிஸியாக்கிரா, அவ்வளவுதான்.
எப்படி இருக்கே, என்ன ஸமாசாரம்.
ரொம்ப நாளுக்கு முன்னே பேசினதுடந் ஸரி. ரொம்பவே பேசணும்.
யாரிடமாவது மனதிலிருப்பதை கொட்டினா தேவலை போல இருக்கு.
என்னத்தை கொட்டணும்?
எதையும் கொட்டினா கஷ்டம். வார முடியாதே.
ஆமாம், நீங்கள் இப்படி சொல்லியே இருந்திண்டிருக்கெங்கோ
என்னால் இப்படி இருக்க முடியலே.
இந்த வார்த்தை கேட்டு கேட்டே இருந்திருக்கேநா, ஸரி,அப்புரமா பேசலாம்.
ஒத்தரும் இல்லாத வேளையா சொல்லுங்கோ.
ஸரி. அப்படியே ஆகட்டும்.
லக்ஷ்மி, ரொம்ப நாளா விட்டுப்போன நட்பு, ஒரே இடத்தில்குடியிருந்தநட்பு.
வித்தியாஸமில்லாமல் மனது விட்டு பேசி, அன்றாடும் நடக்கும்
நல்லது கெட்டதுகளைப் பகிர்ந்து கொள்ளும்படியான நட்பு. விட்டுப் போய்
வெகு வருஷங்களுக்குப்பிறகு, அவளைப் பார்த்து, மறுபடியும் நட்பு
ஆரம்பித்ததே எதிர் பாராத விதத்தில்.
பிள்ளை கல்கத்தாவிலிருக்கும்போது, குருவாயூரப்பன் கோவிலுக்கு
தரிசனம் செய்யப் போகும் போது ராஜம்மா என்று கையைப்பிடித்துக்
கொண்டாள்.
நீ எங்கிருந்து வந்தாய், நிஜமாதானா, இல்லே நான் தப்பா லக்ஷ்மி.
இல்லேஇல்லே,நான்தான் ராஜம்மா.
யாரோட வந்திருக்கே, பொண்ணு இங்கிருக்கா, இப்படி ஸமாசாரங்கள்
அடுத்து எப்போதாவது போன் வரும்.
எல்லாருக்கும், மாற்றல் அது…
View original post 364 more words
Entry filed under: Uncategorized.
2 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
geetha | 10:46 முப இல் மார்ச் 8, 2022
பழைய பகுதிக்கும் சென்று வாசித்தேன். தொடர் என்று தெரிகிறது. சுவாரசியமான அழுத்தமான உணர்வுபூர்வமான வார்த்தைகள். மிக யதார்த்தமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
அடுத்த் அப்குதி வரும் இல்லையா?
கீதா
2.
chollukireen | 12:12 பிப இல் மார்ச் 8, 2022
பெரிய தொடரெல்லாம் இல்லை. நீளம் கருதி இரண்டாகப் பிரித்துப் போட்டது. நீ கவனிக்கவில்லையா? 2013 வருஷம் என்று எழுதுவதற்குப் பதிலாக1913 வருஷம் எழுதியது என்று பின்னூட்டத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன். வியாழக்கிழமை மிகுந்த பகுதியும் போட்டு விடுகிறேன். தவராது படிக்கவும். ரஸித்துப் படித்ததற்கு மிகவும் நன்றி.நீயும் மிகுந்த பிஸியில் இருப்பது தெரிகிறது. மிக்க நன்றி. அன்புடன்