அரைத்துவிட்ட மாங்காய் ஸாம்பார்.
ஏப்ரல் 4, 2022 at 11:47 முப 2 பின்னூட்டங்கள்
இதுவும் பத்து வருஷங்களுக்கு முன்னர் பதிவிட்டதுதான். மாங்காய் ஸீஸன் ஆயிற்றே. பிடித்தவர்கள் அவர்களுக்குப் பிடித்தபடி செய்து ருசியுங்கள். அன்புடன்
இந்த ஸாம்பாரும்அதிகம் புளிப்பில்லாத மாங்காயில் செய்தால்
மிகவும் நன்றாக இருக்கும். ஒட்டு மாங்காயான கிளி மூக்கு மாங்காயில் செய்ததுதான் இந்த ஸாம்பாரும்.
காயை நறுக்கி வாயில் போட்டுப் பார்த்தால் புளிப்பைப் பற்றி
எவ்வளவு என்று தானாகவே தெறிந்து போகும்.
அதற்கேற்றார்போல் உப்புக் காரம் சேர்க்கலாம். ஸரி
இப்போது நாம் ஒரு திட்டமான மாங்காய்க்குண்டானதைப்
பார்ப்போம்.
வேண்டியவைகள்
மாங்காய்—-திட்டமான சைஸில்—-ஒன்று
துவரம் பருப்பு—அரைகப்
மிளகாய் வற்றல்—5அல்லது 6
பச்சை மிளகாய்—1
நல்லெண்ணெய்—2 டேபிள்ஸ்பூன்
தனியா—-1 டேபிள்ஸ்பூன்.
மிளகு—7,8 மணிகள்
அரிசி—1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்—கால்கப்
தாளித்துக் கொட்ட—கடுகு,வெந்தயம், பெருங்காயம்.
வாஸனைக்கு—கொத்தமல்லி, கறிவேப்பிலை.
விருப்பப் பட்டால் பாதி கேப்ஸிகம்
ருசிக்கு—-உப்பு
செய்முறை.
துவரம் பருப்பைக் களைந்து திட்டமாக தண்ணீர் விட்டு மஞ்சள்பொடி
சேர்த்து ப்ரஷர்குக்கரில் நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.
சிறிது எண்ணெயில் மிளகாய் ,தனியா, அரிசி, மிளகை வறுத்து
,அதனுடன் தேங்காயையும் வதக்கி இறக்கவும்.
ஆறியவுடன் மிக்ஸியில் சிறிது ஜலம் தெளித்து அறைத்து
எடுக்கவும்.
மாங்காயைக் கொட்டை நீக்கி துண்டங்களாகச் செய்து கொள்ளவும்.
கேப்ஸிகம், பச்சைமிளகாயு், மாங்காயுடன் வேண்டிய உப்பு சேர்த்து
குழம்பு வைக்கும்பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
மாங்காய் வெந்தவுடன் அறைத்த விழுதைச் சேர்த்து ஒரு கொதி
விடவும்.
வெந்த பருப்பைக் கரைத்துச் சேர்த்து பின்னும் நன்றாக கொதிக்கவிட்டு
இறக்கவும்.
நல்லண்ணெயில் கடுகு, வெந்தயம், பெருங்காயம் இவைகளைத்
தாளித்துக் கொட்டி, கறிவேப்பிலை, கொத்தமல்லி …
View original post 40 more words
Entry filed under: Uncategorized.
2 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
geetha | 12:10 பிப இல் ஏப்ரல் 5, 2022
சூப்பரான ரெசிப்பி, அம்மா
நம் வீட்டில் இதை மாங்கா பருப்புன்னு சொல்லிச் செய்வது. புளி இல்லாமல். ரொம்ப சுவையாக இருக்கும். அரிசி சேர்த்து அரைப்பதில்லை அம்மா. அது ஒன்றுதான் வித்தியாசம் பருப்பு இருக்கே திக் ஆக வர என்று
மிக்க நன்றி அம்மா
கீதா
2.
chollukireen | 1:05 பிப இல் ஏப்ரல் 5, 2022
வறுத்து அரைக்கும் சாமானில் கடலைப்பருப்பு இல்லை எதற்கும் இருக்கட்டும் என்று துளி அரிசி சேர்த்தேனோ என்னவோ. நீ எழுதியிருப்பதும் சரிதான் இதனால் அதிகம் மாறுதல் இல்லை உன்னுடைய வரவிற்கும் பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி வராவிட்டால் கீதாவை காணோமே என்று தேடுகிறேன் நல்லது நீங்கள் வந்தது அன்புடன்