நொய் புளி உப்புமா அல்லது புளிப் பொங்கல்.
ஏப்ரல் 11, 2022 at 11:41 முப 4 பின்னூட்டங்கள்
இதுஒரு பழையகாலத் தயாரிப்பு.ஸாதாரணமாக வெங்காயம் சேர்க்க மாட்டார்கள். இது வேலை செய்பவர்களின் சாய்ஸ். இன்னும் வேண்டியவைகளைச் சேர்த்து செய்து பாருங்கள்.அன்புடன்
கிராமங்களில் அடிக்கடி செய்யக்கூடியது இந்தவகை. யாவரும் நெல்லை
மிஷினி்ல் கொடுத்து அரிசியாக செய்து வரும்போது எப்படியும் சிறிதளவாவது
அரிசி இடிந்து நொய்யாக அதாவது குருணையாக மாறும். அதைத் தனியாக
எடுத்துப் பல விதங்களில் உபயோகப் படுத்துவார்கள். புழுங்கலரிசியில் அதிகம்
நொய் விழுவதில்லை. நான் எழுத ஆரம்பித்ததிலிருந்தே இந்தப் புளி உப்புமாவை
எழுத நினைத்தும் ஒன்று நொய் கிடைப்பதில்லை. இவ்விடம்
வரும்போது கவனத்தில் வருவதில்லை. இந்த ஸமயம் எல்லாம்
கூடி வந்தது. வகையாகவும் அமைந்தது. இது என்ன மஹாப்பெறிய
வஸ்துவென்று நினைக்கலாம். இங்கே சென்னையில் வீட்டைச் சுற்றி
பெயின்டிங் வேலை நடைபெற்றது. வேலையாட்கள் மிகவும் தூரத்திலிருந்து
வருவதால் அவர்களுக்கு டிபன், சாப்பாடு வீட்டிலேயே செய்து
கொடுத்தார்கள். இதில் நானும் இந்த உப்புமாவைச் செய்யும்படி சொல்லி
ஞாபகப்படுத்திக் கொண்டேன். எனக்கு உங்கள் யாவருடனும் அதைப்
பகிர்ந்து கொள்வதுதானே முக்கியக் காரணம். புளிப்பொங்கல் எனக்கு
ரொம்பவே பிடித்திருந்தது. கதையில்லை நிஜம் இது. சிறிய அளவில்
வேண்டியதைப் பார்ப்போம்.
வேண்டியவைகள்—
அரிசி நொய்–2 கப்
புளி—ஒரு கெட்டியான பெரிய நெல்லிக்காயளவு.
நல்லெண்ணெய்—2 டேபிள்ஸ்பூன்
கடுகு—அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு—வகைக்கு 2டீஸ்பூன்கள்
மிளகாய்வற்றல்—3
வெந்தயம்–கால் டீஸ்பூன்
பெருங்காயம்–ஒரு சிறிய கட்டி
ருசிக்கு—உப்பு
தேவைக்கேற்ப—வெங்காய, பூண்டுத் துண்டங்கள்
கறிவேப்பிலை—10 அல்லது 15 இலைகள்
சிறிது மஞ்சள்ப் பொடி
செய்முறை—
நாம் இதை ரைஸ் குக்கரிலேயே செய்வோம். மிகவும் சுலபம்
அரிசி நொய்யைக் களைந்து கல்லில்லாமல் அறித்தெடு்த்து தண்ணீரை
வடிக்கட்டவும்.
புளியைத்…
View original post 118 more words
Entry filed under: Uncategorized.
4 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
geetha | 7:06 முப இல் ஏப்ரல் 12, 2022
மிகவும் பிடித்தது இது. நம் வீட்டில் பெரியவர்கள் இருந்த போது வெங்காயம், பூண்டு சேர்த்ததில்லை. கோயில்களிலும் சேர்ப்பதில்லையே அதனால் நானும் சேர்க்காமல் செய்துவந்தேன். ரொம்பச் சுவையாக இருக்கும்
அப்புறம் வெங்காயம் மட்டும் சேர்த்துச் செய்ததுண்டு, பூண்டு சேர்த்ததில்லை.
உங்கள் குறிப்புகளையும் பார்த்துக் கொண்டேன், அம்மா
மணம் இங்கு வரை,,,,
மிக்க நன்றி அம்மா
கீதா
2.
chollukireen | 1:14 பிப இல் ஏப்ரல் 12, 2022
இது ஒரு பழமையான செய்முறை தானே அப்போது யார் வெங்காயம் சேர்ப்பார்கள் இப்போது மாடர்ன் இளைய சமுதாயம் வெங்காயம் நிறைய விரும்புகிறது அதனால் கூட சேர்த்தேன் உன்னுடைய கமெண்ட் மிகவும் அர்த்தம் உள்ளது யாவரின் பின்னூட்டத்திலும் வெங்காயம் மைனஸ் பாயிண்ட் தான் உன்னுடைய மறுமொழிக்கு மிக்க நன்றி அன்புடன்
3.
துரை செல்வராஜூ | 7:45 முப இல் ஏப்ரல் 14, 2022
சுப கிருது வருகவே..
சுகங்கள் எல்லாம் தருகவே..
அறங்கள் எங்கும் பெருகவே..
அமுதத் தமிழ் நிறைகவே!..
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!..
4.
chollukireen | 11:04 முப இல் ஏப்ரல் 14, 2022
மிக்க நன்றி புதுவருட வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் உங்கள் வரவு நல்வரவு ஆகுக இந்தப் பொங்கல் தலைப்பை வைத்து ஒரு கதையை எழுதி விடுவீர்கள் என்று உங்களைப் பார்த்ததும் தோன்றியது மிக்க சந்தோஷம் அன்புடன்