சோம்புக்கீரை பக்கோடா
ஏப்ரல் 21, 2022 at 11:25 முப 4 பின்னூட்டங்கள்
இது சோம்புக்கீரையில் செய்தது. என்ன ரீப்ளாக் செய்யலாம் என்று பார்த்த போது காரகதம்பம் செய்ய நினைத்தேன். அதில் படம் எதுவும் இல்லை. இதை முதலில் போட்டுவிட்டு அதை திங்களன்று போடுவோம் என்று விட்டு விட்டேன் கதை பேசுகிறேனா?இதை முதலில்ப் பாருங்கள். அன்புடன்
அதிசயமாக நானும் கடைக்கு வருகிறேன். காய்கறிகளை
ஒட்டு மொத்தமாக பார்த்தால் ஏதாவது புதுசா யோசனை
தோன்றும். எங்கேயும் போகாதவர்கள் சொன்னால் ,ஸரி
வா பாட்டி நீ கடையில் ஏறி இறங்கினால்ப் போதும்.
வா என்று உறுதியாகக் சொல்லவே நான்கிளம்பிப்
போய் கடையில் இறங்கியும் ஆயிற்று.
எல்லா காய்களையும் பார்த்து இதில்,அது செய்யலாம், அதில்
இது செய்யலாம் யோசனை போய்க்கொண்டே இருந்ததே
தவிர ப்ராக்டிகலாக ஒன்றுமில்லை.
மளமளவென்று மாமூலாக வாங்கும் காய்களுக்கு லிஸ் ட்
சொல்லிவிட்டு,கீரை வகைகளைப் பார்த்தால் ,பெருஞ்சீரகக்
கீரை,இன்னும் பலகீரைகள் வகைவகையாகக் கொட்டிக்
கிடந்தது.பெருஞ்சீரகக் கீரைதான் சோம்புக்கீரை.
பெங்களூர், காட்மாண்டு, ஜெனிவாவில் இதை வாங்குவது உண்டு.
கர்நாடகாவில் ஃபேமஸ் இந்தக்கீரை. பாணந்தி,அதாவது
பெண்களுக்கு பிரஸவத்திற்குப் பிரகான காலத்தில்
பத்தியச் சமையலுக்கு இது மிகவும் நல்லது என்று சொல்லக்
கேட்டிருக்கிறேன்.
சின்னக் கட்டாக ஒன்று வாங்கி வந்தேன்.
இங்குள்ள பேத்திகள் விரும்புவார்களே மாட்டார்களோ என்ற
யோசனையும் வேறு.
குறுக்கு வழியாக இட்டிலிக்கு அறைத்த உளுந்து மாவில்
ஒரு அறைக் கிண்ணம் எடுத்தேன்.
அது ஜலம் விட்டு அறைத்த மாவு இல்லையா?
அது கொண்ட வரையில் கடலை மாவைத் தூவி ப் பிசறினேன்.
பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய்,உப்பு,இஞ்சி
முதலானவைகளைச் சேர்த்து, நன்றாக ஆய்ந்து நறுக்கிய
சோம்புக் கீரையையும் சேர்த்துப் பிசறி , எண்ணெயைக்
காயவைத்து அதில் மாவைக் கிள்ளி பகோடாக்களாகப்
போட்டு சிவக்கவிட்டுப் பொறித்தெடுத்தேன்.
View original post 65 more words
Entry filed under: Uncategorized.
4 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
jayakumar chandrasekaran | 1:18 பிப இல் ஏப்ரல் 21, 2022
பார்ப்பதற்கு அழகு. சுவை கொஞ்சம் இனிப்பாக இருக்குமோ?
2.
chollukireen | 11:24 முப இல் ஏப்ரல் 23, 2022
அதெல்லாம் ஒன்றுமில்லை. வாஸனைதான் பெரும்ஜீரக வாஸனை. நன்றாகவே இருக்கும். மிகவும் நன்றி. அன்புடன்
3.
geetha | 9:12 முப இல் ஏப்ரல் 22, 2022
ஆமாம் அம்மா இந்தக் கீரை இங்கு பங்களூரில் ரொம்பவே ஃபேமஸ். நானும் இங்கு வந்து தெரிந்து கொண்டு, செய்தும் பார்த்தாச்சு. அது ஒரு தனி மணம். வடையும் செய்தேன் கீரை வடை செய்வது போல, உளுந்து வடையிலும், பருப்பு வடையிலும் செய்தேன். பக்கோடாவிலும் போட்டேன் நம்மூரில் போடுவோமே பக்கோடா தூள் பக்கொடா அப்படி. அது நலல் சுவை. உங்கள் குறிப்புகளும் தெரிந்துகொண்டேன். மிக்க நன்றி காமாட்சிம்மா
கீதா
4.
chollukireen | 11:30 முப இல் ஏப்ரல் 23, 2022
என்னுடைய பெண் பயத்தம் பருப்பு டாலுடன் இதைச் சேர்த்துச் செய்ததாகவும், நன்றாக உள்ளது என்றும் எழுதியிருந்தாள். இங்கு வீட்டிலேயே செடி இருக்கிறது. நீங்கள் சொல்வதுபோல எல்லா விதமும் உங்கள்அனுபவம் பூராவும்உபயோகமானது. மிக்க நன்றி. அன்புடன்