கார கதம்பம்.
ஏப்ரல் 25, 2022 at 11:18 முப 3 பின்னூட்டங்கள்
இந்தக் காரகதம்பம் தெரிந்தவர்கள் சொல்லி நான் செய்து பார்த்தேன்.அப்போது படம் எடுத்து,சேர்க்க எல்லாம் எனக்குத் தெரியாது.செய்தோம்,சாப்பிட்டோம். பதிவும் போட்டோம் என்ற அளவில்தான். ஃபிரிஜ்லே மீதி இருந்த காய்கறிகளைக் கொண்டு செய்தது. நீங்களும் ருசித்துப் புசியுங்கள். அன்புடன். கார கதம்பத்தை
வாங்கி மிகுந்த காய் கறிகளிலோ அல்லது வாங்கி வந்த
அன்றோ சிறிது விதவிதமான காய் கறிகளில் இதைத்
தயாரிக்கலாம்.காரட்,கத்திரி, வாழைக்காய்,காப்ஸிகம்,
பீட்ரூட்,உருளைக் கிழங்கு என கலந்து மெல்லிய
வட்டங்களாக இரண்டு கப் அளவிற்கு நறுக்கி வைத்துக்
கொள்ளவும்.
மேலும் வேண்டியவைகள்.——கடலைமாவுஅரைகப்.
அரிசிமாவு——–4 டீஸ்பூன்
நெய்——–3 டீஸ்பூன்
ஒரு துளி ஸோடாஉப்பு
ருசிக்கு–உப்பு
பெருங்காயம்—சிறிது
பொரிக்க எண்ணெய்
செய்முறை—–நறுக்கிய காய்கறித் துண்டுகளில்
இரண்டு ஸ்பூன் எண்ணெய், நெய்,உப்பு,ஸோடா
பெருங்காயம்,காரம் சேர்த்து நன்றாகப் பிசிறவும்.
அதன் பின் காய்க் கலவையில் மாவைத் தூவி
பகோடா பக்குவத்தில் சிறிது ஜலம் தெளித்து
மாவைக் கலக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து,பிசிறி
வைத்திருக்கும் கலவையை கையால் பிரித்துப்
போட்டு, சிவக்க, கரகரப்பாகப் பொரித்து எடுக்கவும்.
பலவித ருசிகளில் நன்றாக இருக்கும்.
மாவு கலக்கும் போது அதிக தண்ணீர் விடாமல்
சரிவரக் கலக்கவும்.
Entry filed under: Uncategorized.
3 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
geetha | 4:11 முப இல் ஏப்ரல் 27, 2022
சூப்பர், காமாட்சிம்மா….
இதை மிக்ஸட் வெஜிடபிள் பக்கோடா என்போம். காரக்கதம்பம் என்றதும் கதம்பா சாதம் என்று நினைத்துவிட்டேன். சின்ன சின்னதாகக்கட் செய்து கொள்வேன். உங்கள் குறிப்புகளையும் பார்த்துக் கொண்டேன் அம்மா.
கீதா
2.
chollukireen | 11:51 முப இல் ஏப்ரல் 27, 2022
சின்ன சின்தாகக் கட் பண்ணி,வெங்காயமும் போட்டு செய்து விட்டால் ஸ்ரீராம் சொன்னபடி செய்ய எளிது. சுவைக்க இனிதாக இருக்கும்.பெயர் கதம்பசாதத்தை நினைவூட்டிவிட்டது.ஹஹஹ. மிக்க நன்றி. அன்புடன்.
3.
geetha | 4:20 முப இல் ஏப்ரல் 27, 2022
சூப்பர், காமாட்சிம்மா….
இதை மிக்ஸட் வெஜிடபிள் பக்கோடா என்போம். காரக்கதம்பம் என்றதும் கதம்பா சாதம் என்று நினைத்துவிட்டேன். சின்ன சின்னதாகக்கட் செய்து கொள்வேன். உங்கள் குறிப்புகளையும் பார்த்துக் கொண்டேன் அம்மா. நல்ல் குறிப்பு
கீதா