வாழைக்காய் பொடித்தூவல்.
மே 2, 2022 at 11:29 முப பின்னூட்டமொன்றை இடுக
இதுவும் எப்போதோ போட்ட குறிப்புதான். தேங்காய் சேர்ப்பதால் எண்ணெய் இன்னும் கூட குறைத்து விடலாம். பொடிவேறு. பொடித்தூவல் வேறுதான். பாருங்கள் அன்புடன்
வாழைக்காய் பொடித்தூவல்ன்னு பேர். ஆனால் எந்தப்
பொடியும் தூவாமல் செய்ததுதான் இது.
தேங்காய் சேர்த்து செய்வதுதான் இதன் விசேஷம். இதை
வெறும் ஒரு வாழைக்காயில் செய்தேன்.
ப்ளாகையும் பார்த்துவிட்டு வரட்டுமே என்று ஒரு
போட்டோ.!!!!!!!!! பாருங்கள் நீங்களும்.
வேண்டிய ஸாமான்கள்.
நல்ல முற்றிய மொந்தன் வாழைக்காய்.—1
தேங்காய்த் துருவல்—-கால்கப்
பச்சைமிளகாய்—-2 பொடியாக நறுக்கவும்
உப்பு–ருசிக்கு
இஞ்சி சிறிது-தட்டிக் கொள்ளவும்.
எண்ணெய்—-2 டேபிள்ஸ்பூன்
தாளித்துக்கொட்ட—கடுகு,உளுத்தம் பருப்பு,கடலைப் பருப்பு. சிறிது
புளி –சிறிது. காய் கறுக்காமலிருப்பதர்கு
செய்முறை—–வாழைக்காயை, நடுவில் இரண்டாக நறுக்கித் தண்ணீரில் போட்டு வைக்கவும்.
புளியைக் கரைத்துவிட்டு மேலும் அதிக ஜலம் சேர்த்து-
கொதிக்க வைத்து அதில் நறுக்கிய இரண்டு துண்டு
வாழைக்காயைச் சேர்த்து வேக விடவும். தோலுடன்தான்.
காய் முக்கால்பதம் வந்தவுடன் , காயை வடிக்கட்டி எடுத்து
விடவும் காய் ஆ றியவுடன்,பழம் உரிப்பது போல தோலை
உரிக்கவும்.
சுலபமாக வந்து விடும்.
காயை நன்றாக உதிர்த்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு பருப்பு
வகைகளைத் தாளித்துக் கொட்டி, நறுக்கிய மிளகாய்
இஞ்சியை வதக்கி உதிர்த்த வாழைக்காயை உப்பு சேர்த்து
வதக்கவும்.
தேங்காய்த் துருவலைச் சேர்த்து வதக்கி இறக்கவும்.
வேண்டியவர்கள் சிறிது எலுமிச்சைத் துளிகளைச்
சேர்க்கலாம்.
நல்ல ருசியாக இருக்கும். இது ஒருவகை. தேங்காய்
எண்ணெயிலும். தாளிக்கலாம்.
கறிவேப்பிலை மறக்க வேண்டாம்.சிலர் வெந்த பருப்பையும்
பிழிந்து போடுவார்கள். உங்களுக்குப் பிடித்ததைச்
செய்யலாம்.
Entry filed under: Uncategorized.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed