ஜெயின் கிச்சடியும் பத்லா கடியும்
மே 9, 2022 at 11:05 முப 3 பின்னூட்டங்கள்
இந்தக் கிச்சடியும் கடியும் சாப்பிட ருசியாக இருக்கிறது.நானே சொல்வதில் அர்த்தமில்லை.நீங்களும் முந்தியே படித்திருக்கிறேன் என்று சொல்லாமல் படித்தால் செய்து சாப்பிடத் தோன்றும். அன்புடன்
ஜெயின் கிச்சடியும்,பத்லா கடியும்.
ஜெயின் சமூகத்தினர் செய்யும் விஜிடபிள் கிச்சடியும் அதற்கான நீர்த்த மோர்க்குழம்பும் ருசியாக இருக்கும். இதோடு கூட சுட்ட மிளகு அப்பளாமும் எல்லோரும் சாப்பிட ஒரு அருமையான ,சுலபமான உணவு. வாய்க்கு ருசியாக இருப்பதோடு பூரா ஸத்துகள் நிரம்பியதாகவும் இருப்பது இதன் விசேஷம். ஸாதாரணமாக பூமிக்கடியில் விளையும், கிழங்கு,இஞ்சி போன்றவைகளை ஆசாரமானவர்கள் சமையலில் சேர்ப்பதில்லை. இது அம்மாதிரி முறையில் செய்யப்படவில்லை.யாவும் சேர்த்துச் செய்தது.
வேண்டியவைகள்
பெரிய வெங்காயம் —2
பூண்டு இதழ்கள்—3,
பீன்ஸ்—6, கேரட்—1,தக்காளி—1, காப்ஸிகம் சிகப்பு,பச்சை –பாதிபாதி. பட்டாணி உரித்தது அரைகப். உருளைக்கிழங்கு –1 இரண்டாக் கீறிய பச்சை மிளகாய் ஒன்று.
தாளித்துக் கொட்ட— வற்றல் மிளகாய்—2, சீரகம்—1 டீஸ்பூன்,மிளகு—1 டீஸ்பூன்,லவங்கம்—6 , ஒரு துளி லவங்கப்பட்டை, இஞ்சி சிறிது, பிரிஞ்ஜி இலை1 எண்ணெய்—3 டேபிள்ஸ்பூன்
அரிசி—பெரியடம்ளரால் ஒரு டம்ளர். பயத்தம் பருப்பு கால் டம்ளர். ருசிக்கு உப்பு.
செய்முறை. பிரமாதமொன்றுமில்லை.
கரிகாய்களை ஒன்றுபோல் நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி,பூண்டை தட்டி வைத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெயை விட்டுக் காய்ந்ததும் தாளித்துக் கொட்டக் கொடுத்தவைகளைப் போட்டு வறுக்கவும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி,பூண்டு இஞ்ஜியைச் சேர்த்து வதக்கி, நறுக்கிய தக்காளியையும் சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கிய பிறகு காய்களையும்,பிரிஞ்ஜி இலையையும் சேர்த்து வதக்கவும். இதனுடன்அரிசிப்,பருப்பை நன்றாகக் களைந்து அதனுடன் மூன்று பங்கு அளவு தண்ணீரையும் சேர்க்கவும் துளி மஞ்சள்ப்பொடி வேண்டிய உப்பு சேர்த்து குக்கரில்…
View original post 108 more words
Entry filed under: Uncategorized.
3 பின்னூட்டங்கள் Add your own
geetha க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
geetha | 1:57 முப இல் மே 10, 2022
அம்மா குறித்துக் கொண்டுவிட்டேன் கிச்சடியும் பத்லா கடியும் – கொஞ்சம் நீர்க்க இருப்பதால் பத்லா கடியோ?!!! கிச்சடி வெஜிட்டபிள் கிச்சடி செய்ததுண்டு இது கொஞ்சம் வித்தியாசம் பிரியாணிக்குத் தாளிப்பது போல் மசாலா தாளிப்பு.
நல்ல சுவையான குறிப்பு.
ஜெயின் செய்முறையில் பூமிக்கு அடியில் விளைவதைச் சேர்க்க மாட்டார்கள் என்று சொல்வதுண்டே அம்மா?
கீதா
2.
chollukireen | 10:26 முப இல் மே 10, 2022
இது பூமிக்கு அடியில் விளைவதையும் சேர்த்துச் செய்தது. இதையும் குறிப்பிட்டு இருந்தேனே. எண்ணெயில் தாளித்த மஸாலா பொங்கல் என்று கூட பெயர் வைக்கலாம் இதற்கு. நீர்க்க செய்வதால்தான் பத்லா கடி என்று குறிப்பிட்டேன்.அதுவும் ஸரி. அனுபவித்து பதில் எழுதியிருக்கிறீர்கள்.மிகவும் நன்றி. அன்புடன்
3.
chollukireen | 3:26 முப இல் மே 10, 2022
.
.