என்ன சமையல்?
மே 23, 2022 at 11:25 முப 4 பின்னூட்டங்கள்
பத்து வருஷங்களுக்கு முன்னர் எழுதிய பதிவு. பதிவுகள் ஒரேமாதிரி படிக்க அலுத்து விடும் என்று சற்று வித்தியாஸமாக எழுதினேன். மருமகள் செய்முறையும் இதில். பூண்டா என்றெல்லாம் நினைக்காதீர்கள். அவரவர்கள் விருப்பம். ரஸிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.பார்க்கலாம். அன்புடன்.
ஸிம்பிலாக சமைக்கிறேன் என்று பிரதீஷா செய்த சமையலை
நீங்களும் தான் ருசியுங்களேன். அஸ்ஸாம் டாலும் சென்னை
ரஸமும் பொதுவான கறிகளும்கலந்து ருசியுங்களேன்.
ஒரு டால். பயத்தம்பருப்பும், மசூர் டாலும் கலந்து வேகவைத்து
பொடியாக நறுக்கிய வெங்காயம்,ப.மிளகாய், இஞ்சி, பூண்டு,
தக்காளியை நன்றாக வதக்கிச் சேர்த்து உப்பு, மஞ்சளுடன்
சேர்த்துக் கொதிக்க வைத்து, கொத்தமல்லி சேர்த்தது.
மஸாலா போடலை. துளி சீரகப்பொடி போட்டது.
உருளைக் கிழங்கை மெல்லியதாக நறுக்கி 1ஸ்பூன்
எண்ணெயுடன் 5 நிமிஷங்கள் மைக்ரோவேவ் செய்து எடுத்து
வாணலியில் எண்ணெயில் கடுகைத் தாளித்து, உப்பு,காரம்
மஞ்சள் சேர்த்து நன்றாக வதக்கியது.
அடுத்து நிறைய தக்காளியை மைக்ரோவேவில் வேகவைத்து
எடுத்து துளி புளி சேர்த்து கறைத்து சாறு எடுத்து, ரஸப்பொடி,உப்பு,
பூண்டு விழுதுடன் நிதான தீயில் நன்றாகக் கொதித்துக்
குறைந்தவுடன், துவரம்பருப்பு வேகவைத்ததைக் கறைத்துக் கொட்டி
ஒது கொதி வந்தவுடன் இறக்கி, நெய்யில் கடுகு, பெருங்காயம்
பொரித்துக் கொட்டி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கியது.
கமகம ரஸம்.
வீட்டில் தோய்த்த புளிப்பில்லாத தயிர்.
கொஞ்சம் ஊறுகாய்.
வதக்கிய வெண்டைக்காய் கறி.
நடுவில் குட்டி காப்ஸிகம் பஜ்ஜி அதுவும் சுடச்சுட
பாக்கலாமா, கேட்கலாமா, ருசிக்கலாமா
பஜ்ஜியைச் செய்யலாம்.
வேண்டிய அளவு–
-கடலைமாவு,துளி அரிசி மாவு
ருசிக்கு வேண்டிய உப்பு,மிளகாய்ப்பொடி
துளி ஸோடா உப்பு
துளி பெருங்காயப்பொடி
கொத்தமல்லி இலை கொஞ்சம்
கேப்ஸிகம் வேண்டியஅளவு.
செய்முறை
மிளகாயை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
முழுதாகவும் போடலாம்.
உப்பு…
View original post 76 more words
Entry filed under: Uncategorized.
4 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
geetha | 2:21 பிப இல் மே 23, 2022
சாப்பிட வந்துவிட்டேன் அம்மா.
நாவில் சுவை ஊறுகிறது. இப்படியான கேப்சிக்கம் கிடைப்பதில்லை கிடைத்தால் பஜ்ஜி போட்டுவிடலாம்
டால் இப்படித்தான் செய்கிறேன் ஆனால் மசூர் தால் சேர்த்ததில்லை. எனவே இப்படியும் செய்துபார்த்துவிடுகிறேன்…
ரசம் பூண்டு போட்டுச் செய்வதுண்டு அம்மா. நிறைய தக்காளி போட்டுச் செய்யும் போது சுவை நன்றாகவே இருக்கும். கறி எல்லாம் நன்றாகவே இருக்கிறது.
இங்கு இப்போது தக்காளியின் விலை ரொம்ப கூடுதலாக இருக்கிறது எனவே இப்போதைக்கு அது தவிர்த்து மற்ற மெனு!!!!
கீதா
2.
chollukireen | 11:14 முப இல் மே 24, 2022
சாப்பிட வந்தது பற்றி மிக்க ஸந்தோஷம். சாப்பாட்டை ரஸித்து இருப்பதும் ஸந்தோஷம். பெங்களூர் தக்காளி ஒன்று போட்டால் கூட போதும். ரஸம் மணக்கும். இது மும்பையில் கிடைத்த குட்டி கேப்ஸிகம். காட்மாண்டுவில் கூட நிறைய கிடைக்கும் இது. மொத்தத்தில் மறுமொழியும் மிக்க ருசியாக இருந்தது. நான் மிகவும் ரஸித்தேன் . அன்புடன்
3.
thulasithillaiakathu | 2:24 பிப இல் மே 23, 2022
இதுவா சிம்பிள் சமையல்!!! விருந்தே வைச்சுட்டீங்கள்!! ரசித்து வாசித்தேன். மெனுவையும் ரசித்தேன்
கீதா
4.
chollukireen | 11:15 முப இல் மே 24, 2022
மிக்க நன்றி. அன்புடன்