கோஸ்வடை
ஜூன் 20, 2022 at 11:47 முப 2 பின்னூட்டங்கள்
கல்லுரலில் அரைத்துப் பழக்கமானதை மிக்ஸியிலரைத்துச் செய்தேன்போல உள்ளது. இதுவும் பழைய குறிப்புதான். செய்து பாருங்கள். அன்புடன்
பழக்கமாகிவிட்டால் எதையுமே சுலபமாகச் செய்யலாம்.
இதுவும் அப்படிதான்.
முழு உளுத்தம் பருப்பு—1 கப் தோல் நீக்கியது
துவரம்பருப்பு—1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்—4
இஞ்சி—சிறிய துண்டு
பெருங்காயம்—சிறிது
பொடியாக நறுக்கியமுட்டைகோஸ்-1கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி–அரைகப்
ருசிக்கு—உப்பு
பொரிக்க—வேண்டிய எண்ணெய்
8 மிளகு.—பொடித்தது
செய்முறை—–பருப்புகளை 3 மணி நேரம் தண்ணீரில் ஊற-
வைத்து வடித்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
இஞ்சி மிளகாயையும் சேர்த்து அரைத்து விடலாம்.
லேசாக துளி ஜலம் தெளித்து அரைக்கவும்.
நல்ல மெத்தென்ற பதத்தில் மாவு இருந்தால் நல்லது.
உப்பு,கோஸ், கொத்தமல்லி, பெருங்காயம் கலந்து கொண்டு
வடைகளை தயாரித்து, எண்ணெயைக் காயவைத்து
வடையைப் போட்டு வேகவைத்து எடுக்க வேண்டும்.
கையை ஈரப்படுத்திக்கொண்டு மாவை எடுத்து உருட்டி
பாலிதீன் பேப்பர்மேல் வைத்து ,வட்டமாக சமன் செய்து,
நடுவில் ஒரு பொத்தலுமிட்டு மாவை காயும் எண்ணெயில்
நழுவ விடவேண்டும். திருப்பிவிட்டு இருபுறமும் சிவக்க-
-விட்டு எடுத்து வடிக்கட்டவும்.
ருசியானது. அரைப்பது சற்று முன் பின் இருந்தாலும்,
ஜலம், அரைப்பதில் அதிகமாகக் கூடாது
வாஸனைக்கு மிளகுப் பொடி சேர்ப்போம்.
இதையே பெரிய அளவில் உருட்டிப் போட்டும் சிவக்க
வேகவைத்தும் எடுக்கலாம்.
மிக்ஸியில் அரைக்கும்போது சீக்கிரமே சூடாகிவிடுவதால்
சற்று இடைவெளி கொடுத்து அரைப்பது அவசியமாகிறது.
கோஸ் மட்டிலும் சேர்த்து தயாரித்த வடையிது. சமயத்தில் சிறிது
ஜலம் அதிகம் என்று தோன்றினால் ஒரு டீஸ்பூன் கடலை மாவோ,
உளுத்தம் மாவோ கலந்து செய்யவும். முழுப் பருப்பு விழுது காணும்.
வடையும் …
View original post 2 more words
Entry filed under: Uncategorized.
2 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
கீதா | 1:00 பிப இல் ஜூன் 21, 2022
நம் வீட்டில் வெங்காயம் சேர்க்காமல் பெரியவர்களுக்குச்செய்யும் போது இப்படி கோஸ் சேர்த்துச் செய்வதுண்டு அம்மா.
உங்கள் குறிப்புகள் அருமை…
கீதா
2.
chollukireen | 11:24 முப இல் ஜூன் 22, 2022
கோஸ் சாப்பிடாத பெரியவர்கள் கூட உண்டுதானே. அன்பு பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி. அன்புடன்